பிரேம்ஜிக்கு விரைவில் விவாகரத்து? கவர்ச்சி நடிகை பின் சுற்றியவர் தானே..வரம்பு மீறி பேசிய சேகுவேரா?
சென்னை: நடிகரும், இசையமைப்பாளருமான பிரேம்ஜி, இந்து என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களின் திருமணம் திருத்தணியில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது. சமீபத்தில், பிரேம்ஜியின் மனைவி இந்து, அளித்த பேட்டியில், எங்களின் திருமணத்தில் அப்பா, அம்மா, தாத்தா, பாட்டி, தம்பி என யாருக்கும் விருப்பமே இல்லை, திருமண போட்டோவில் கூட அவர்கள் இல்லை. அதிலும், என் தம்பி பிரேம்ஜியிடம் பேசக்கூட விரும்பவில்லை என்று கூறியிருந்தார். இதுகுறித்து பத்திரிக்கையாளர் சேகுவேரா பேசி இருக்கிறார்.
இதில், பிரேம்ஜியை திருமணம் செய்து கொண்டது இந்துவின் பெற்றோருக்கு பிடிக்கவில்லை, இந்த திருமணத்தை பெற்றோர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்றும் பெற்றோரின் விருப்பத்தை மீறி, பிரேம்ஜியை திருமணம் செய்து கொண்டதாக கூறியிருக்கிறார். அதை உடனே சொல்லாமல் ஹனிமூன் எல்லாம் முடித்துவிட்டு, திருமணத்தை பெற்றோர் ஏற்கவில்லையே என்ற ஏக்கம் வந்த பிறகு அதை, அவர் வெளியில் சொல்லியிருக்கிறார்.

இந்த திருமணத்தை பெற்றோர் ஏற்றுக்கொள்ளாததற்கும் ஒரு காரணம் இருக்கிறது. ஒரு நல்ல குடும்பத்தில் தன் மகள் வாழ்க்கைப்பட்டு போக வேண்டும், அவளுக்கு என்று நல்ல எதிர்காலம் இருக்க வேண்டும் என்பதுதான் ஒரு பெற்றோரின் கனவாக இருக்கும். அந்த கனவு நிறைவேறாத போது அதில் பெற்றோருக்கு ஆதங்கம் இருக்க தானே செய்யும். அதுமட்டுமில்லாமல் பிரேம்ஜி வயதானவர், அவரின் தனிப்பட்ட வாழ்க்கை என்பது மிகவும் மோசமானதாக இருக்கும் போது பெற்றோர் இந்த திருமணத்தை ஏற்றுக்கொள்ளவில்லை.
கங்கை அமரனின் மகன் தான் பிரேம்ஜி ஆனால் பிரேம்ஜியின் தந்தை கங்கை அமரன் என்று சொல்வதில் தான் பெருமை இருக்கிறது. ஆனால் வெங்கட் பிரபு, ஒரு சிறந்த இயக்குனராகிவிட்டதால் தற்போது வெங்கட் பிரபுவின் தந்தை கங்கை அமரன் என்று சொல்லும் அளவிற்கு வளர்ந்து இருக்கிறார். ஆனால், பிரேம்ஜி அவர்கள் திறமையை நிரூபிக்கும் வகையில் இதுவரை எதுவுமே செய்யவில்லை. 44 வயதாகிறது என்கிறார்கள் அவரைப்பார்த்தால் 45 வயது போலவா தெரிகிறது. இதுதான் பெற்றோர்களின் மன வருத்தத்திற்கு காரணம் நல்ல பெற்றோருக்கு மன வருத்தம் இருக்கத்தான் செய்யும்.
இளம் பெண் ஒருவர் தன்னை விட 15 வயது மூத்தவரை திருமணம் செய்து கொள்ளும் போது பெற்றோருக்கு மன உளைச்சலும், கவலையும் நிச்சயம் இருக்கும். இந்த பெண்ணை பொருத்தவரைக்கும் இது தெய்வீக காதலாக இருக்கலாம். ஆனால் பிரேம்ஜியை பொருத்தவரை தெய்வீக காதல் இல்லை. சில ஆண்டுகளுக்கு முன்பு வரை அவர் கவர்ச்சி நடிகையின் பின்னால் சுற்றிக்கொண்டு தானே இருந்தார். இன்னும் அவருக்கு 10 ஆண்டுகள் இருக்கிறது. அதற்குள் அவர் தனது திறமையை நிரூபித்துவிட்டால், இந்த வயது மூப்பு விஷயம் பெரிதாக தெரியாது. ஆனால், பிரேம்ஜி இப்படியே இருந்தால் கடைசியில் அது விவாகரத்தில் தான் போய் முடியும் என்று சேகுவேரா அந்த பேட்டியில் பேசி உள்ளார். இந்த பேட்டியைப் பார்த்த இணையவாசிகள் ஏன் இப்படி வரம்பு மீறி பேசுகிறீர்கள் என்று கமெண்டுகளை பதிவிட்டு வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











