Fire ரச்சிதாவை வெளுத்து வாங்கிய பிரபலம்.. சமூக சேவைக்காக ஆபாசமாக நடிச்சீங்களா?.. இப்படி பேசிட்டாரே
சென்னை: ரச்சிதா மகாலட்சுமிதான் கடந்த சில நாட்களாக டாக் ஆஃப் தி டவுனாக இருக்கிறார். ஜேஎஸ்கே சதீஷ்குமார் இயக்கத்தில் உருவான ஃபயர் திரைப்படத்தில் அவர் உச்சக்கட்ட கிளாமரை காண்பித்திருக்கிறார். அது ஒருபக்கம் சர்ச்சையையும் ஏற்படுத்தியிருக்கிறது. இந்தப் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவின்போது, 'பணத்துக்காக இப்படிப்பட்ட ரோலை செய்யவில்லை' என்று விளக்கமளித்திருந்தார். இந்தச் சூழலில் அவர் குறித்து பிரபல பத்திரிகையாளர் சேகுவேரா காட்டமாக பேசியிருக்கிறார்.
சீரியல்களில் அறிமுகமாகி பிரபலமானவர் ரச்சிதா மகாலட்சுமி. அவர் சீரியலில் நடித்துக்கொண்டிருந்தபோதே சக நடிகரான தினேஷை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இரண்டு பேரும் சுமூகமாக வாழ்க்கையை நகர்த்திக்கொண்டிருந்த சூழலில் என்ன நடந்ததோ தெரியவில்லை பிரிந்துவிட்டார்கள். அதற்கு யூகங்களாக பல காரணங்கள் தொடர்ந்து சொல்லப்பட்டன. ஆனால் இரண்டு பேரும் அதுகுறித்து எந்தக் கருத்தும் தெரிவிக்கவில்லை. அதேசமயம் ரச்சிதாவுடன் மீண்டும் சேர்ந்துவிட தினேஷ் முயன்றதாகவும்; அது பலனளிக்கவில்லை என்றும் தகவல்கள் வெளியாகின.

பிக்பாஸ் ரச்சிதா: சூழல் இப்படி இருக்க பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஆறாவது சீசனில் கலந்துகொண்டார் ரச்சிதா. அந்த சீசனில் தன்னால் முடிந்த அளவு அவர் சிறப்பாக விளையாடினாலும் அவரால் டைட்டில் வெல்ல முடியவில்லை. இருப்பினும் அவருக்கென்று தனி ரசிகர் பட்டாளம் இருக்கத்தான் செய்தது. பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியே வந்த பிறகு ஃபயர் என்ற படத்தில் கமிட்டானார். இதில் பாலாஜி முருகதாஸ் ஹீரோவாக நடித்திருக்கிறார். ஜேஎஸ்கே சதீஷ்குமார் இயக்கியிருக்கிறார்.
கிளாமர் ரச்சிதா: இந்தப் படத்தில் ரச்சிதா மகாலட்சுமி உச்சக்கட்ட கிளாமரை காண்பித்திருக்கிறார். படத்தின் ட்ரெய்லர் வந்தபோதே பலரது பெரு மூச்சினை வாங்கிய அவர்; மெது மெதுவாய் பாடலின் வீடியோவில் ஒட்டுமொத்தமாக ரசிகர்களை ஏங்க வைத்தார். அப்போதே இவ்வளவு கிளாமர் தேவைதானா; ஆபாசமாக இருக்கிறதே என்று பலரும் தங்களது கண்டன குரல்களை பதிவு செய்தார்கள். சூழல் இப்படி இருக்க படமானது சில நாட்களுக்கு முன்பு திரையரங்குகளில் வெளியானது.
கலவையான விமர்சனம்: படத்தை பார்த்த ரசிகர்கள் தங்களது கலவையான விமர்சனத்தையே கொடுத்தார்கள். நல்ல கதையம்சத்தை இயக்குநர் எடுத்துக்கொண்டிருந்தாலும் அதில் ஆபாசத்தை அதிகமாக தூவிவிட்டார்; இதன் காரணமாக குடும்பத்துடன் இந்தப் படத்தை யாருமே பார்க்க முடியாது என்று ஓபனாக சொல்ல ஆரம்பித்துவிட்டனர். சூழல் இப்படி இருக்க பிரபல பத்திரிகையாளரான சேகுவேரா ஃபயர் படம் குறித்தும்; ரச்சிதாவின் கிளாமர் குறித்தும் தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்திருக்கிறார்.
சேகுவேரா பேட்டி: அவர் அளித்த அந்தப் பேட்டியில், "ஃபயர் படம் உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்துதான் எடுக்கப்பட்டிருக்கிறது. ஆனால் இதனை குடும்பத்துடன் பார்க்கவே முடியாது. இந்தப் படத்தில் ஆபாசம் ரொம்பவே தூக்கலாக இருக்கிறது. படத்தி நடித்திருக்கும் நடிகைகள் அனைவருமே கிளாமராகத்தான் நடித்திருக்கிறார்கள். ஆனால் ரச்சிதா மகாலட்சுமி உச்சக்கட்டமாக நடித்திருக்கிறார். இவ்வளவு ஆபாசம் தேவையில்லையோ என்றுதான் தோன்றுகிறது.
பணத்துக்காக இப்படி ஆபாசமாக நடிக்கவில்லை என்று ரச்சிதா கூறுகிறார். எனக்கு கோபம்தான் வருகிறது. பிறகு என்ன சமூக சேவைக்காகவா இந்த மாதிரி ஆபாசமாக நடித்தார். பணம் வாங்காமல் இப்படிப்பட்ட ரோலில் நடித்தேன் என்று ரச்சிதாவால் சொல்ல முடியுமா?.. ஏன் இப்படியெல்லாம் பேச வேண்டும். பாபநாசம் படத்தை குடும்பத்தோடு சென்று பார்க்கலாம்; இதனை பார்க்க முடியாது. அந்த இடத்திலேயே இந்தப் படம் அடி வாங்கிவிட்டது" என்றார்.


Click it and Unblock the Notifications











