மாநகரம் ஸ்ரீயின் பரிதாப நிலைமை.. இதுதான் காரணமா?.. அருவருப்பான செயல்.. பிரபலம் ஓபன் டாக்
சென்னை: வழக்கு எண் 18/9 படத்தில் நடித்து ஹீரோவாக அறிமுகமான ஸ்ரீ மாநகரம், வில் அம்பு, இறுகப்பற்று, சோன்பப்டி ஆகிய படங்களில் நடித்திருக்கிறார். அந்தப் படங்களில் சோன்பப்டி படம் தவிர்த்து மற்றவை நல்ல வெற்றியையே பெற்றன. எப்படியும் தமிழ் சினிமாவில் குறிப்பிடத்தகுந்த நடிகர்களில் ஒருவராக ஸ்ரீ வந்துவிடுவார் என்று எதிர்பார்த்திருந்த சூழலில் அவரது தற்போதைய நிலைமை மிகவும் பரிதாபமாக இருக்கிறது. இந்நிலையில் அவர் குறித்து யூடியூப் சேனல்களில் பிரபலமாக இருக்கும் பத்திரிகையாளர் சேகுவேரா சில விஷயங்களை பேசியிருக்கிறார்.
சினிமாவில் வென்று அழியாத புகழை பெற்றுவிட வேண்டுமென்றுதான் அந்தத் துறையில் இருக்கும் அனைவரும் விரும்புவார்கள். அப்படி விரும்பும் அத்தனை பேருக்கும் அந்த நிலைமையை சினிமா கொடுத்துவிடுவதில்லை. எக்கச்சக்க திறமையிருந்தும் கோலிவுட்டில் காணாமல் போனவர்கள் ஏராளமானோர் இருக்கிறார்கள். அவர்களை காலப்போக்கில் பலர் மறந்துவிடுவதுமுண்டு. அப்படிப்பட்டவர்களில் ஒருவராக இப்போது இணைந்திருக்கிறார் கனா காணும் காலங்கள் சீரியலில் நடிப்பு பயணத்தை ஆரம்பித்த நடிகர் ஸ்ரீ.
தமிழ் சினிமாவில் ஹீரோ: கனா காணும் காலங்கள் சீரியல் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்து ஸ்ரீக்கு நல்ல அடையாளம் கிடைத்ததை அடுத்து; பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் வெளியான வழக்கு எண் 18/9 படத்தில் ஹீரோவாகும் வாய்ப்பு அமைந்தது. அதனை சரியாக பயன்படுத்திக்கொண்ட அவர் தனது முழு திறமையையும் வெளிப்படுத்தி அதில் நடித்திருந்தார். படம் சூப்பர் டூப்பர் ஹிட்டித்தது. மேலும் இந்த பையன் நல்லா நடிக்கிறாரே என்று இன்டஸ்ட்ரியிலும் ஸ்ரீயை பற்றி பலரும் பேச ஆரம்பித்தார்கள்.

தொடர்ந்து ஹீரோ வாய்ப்பு: அந்தப் படத்தின் வெற்றிக்கு பிறகு ஓநாயும் ஆட்டுக்குட்டியும், சோன்பப்டி, வில் அம்பு, மாநகரம், இறுகப்பற்று ஆகிய படங்களில் நடித்தார். இவற்றில் சோன்பப்டி, வில் அம்பு படங்கள் தவிர்த்து மற்ற படங்கள் நல்ல வரவேற்பையே பெற்றன. முக்கியமாக மாநகரம் படம்தான் லோகேஷ் கனகராஜின் முதல் படம்.அவர் இப்போது தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத இயக்குநர் என்ற இடத்துக்கு வந்துவிட்டார். அவர் போலவே ஸ்ரீயும் வருவார் என்றுதான் பலரும் நம்பிக்கையோடு இருந்தார்கள்.
ஸ்ரீயின் பரிதாப நிலைமை: ஆனால் திடீரென அவர் காணாமல் போய்விட்டார். கடைசியாக அவரது நடிப்பில் 2023ஆம் ஆண்டு இறுகப்பற்று திரைப்படம் வெளியானது. அதுவும் ஹிட்தான் ஆகியிருந்தது. சூழல் இப்படி இருக்க நேற்று அவரது இன்ஸ்டாகிராம் ஐடியில் சில புகைப்படங்களும், வீடியோக்களும் வெளியாகியிருந்தன. அவற்றில் ஸ்ரீ பார்ப்பதற்கே பரிதாபமான நிலைமையில் இருந்தார். உடல் ரொம்பவே மெலிந்து; பார்ப்பதற்கு போதை பழக்கத்துக்கு அடிமையானது போல் இருந்தார். ஆனால் எதனால் இப்படி ஆனார் என்ற உண்மை நிலவரம் தெரியாமல் இருந்தது. அவரது உறவினரோ, ஸ்ரீயை பலர் ஏமாற்றிவிட்டார்கள். அதன் காரணமாக மன அழுத்தத்துக்கு சென்றுவிட்டார் என்று தெரிவித்திருந்தார்.
சேகுவேரா பேட்டி: இந்நிலையில் இதுகுறித்து பிரபல பத்திரிகையாளரான சேகுவேரா தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்திருந்தார். அந்தப் பேட்டியில் அவர், "ஸ்ரீ தம்பியை பார்க்கும்போதே பரிதாபமாக இருக்கிறது. அறையில் கதவை பூட்டிக்கொண்டு தனிமையாக இருப்பது வேறு. ஆனால் மனிதர்களிடமிருந்து தொடர்பை அறுத்துக்கொண்டு தனிமையாக இருப்பது வேறு. ஸ்ரீ இப்போது அப்படித்தான் இருக்கிறார். அவரை பார்க்கும்போது உச்சக்கட்ட மன அழுத்தம், மன சிதைவில் இருப்பது தெரியவருகிறது.
மீட்டுவிடலாம்: யாருமே வேண்டாம் என்று இருப்பவர்கள்தான், ஸ்ரீ அந்த வீடியோவில் செய்ததை போல் அருவருப்பான செயல்களை செய்வார்கள். ரஜினியோ, விஜய்யோ நடிக்காமல் இருந்தால் ஏன் அவர்கள் நடிக்கவில்லை என்று கேட்போம். ஆனால் ஸ்ரீ போன்றவர்கள் எல்லாம் சாதாரண கலைஞர்கள்தான். அதனால் இத்தனை நாட்கள் அவரை யாரும் தேடவில்லை. கண்டிப்பாக ஸ்ரீயை ஒரு மனநல மருத்துவரிடம் அழைத்து சென்று கவுன்சிலிங் கொடுத்தால் அவரை மீட்டுவிடலாம்" என்றார்.


Click it and Unblock the Notifications











