இன்னொரு பெண்ணுடைய கணவர் விஜய்.. அவரை அப்படி சொல்லலாமா?.. திரிஷா பற்றி ஓவராக பேசிய பிரபலம்
சென்னை: கோலிவுட்டில் 20 வருடங்களுக்கும் மேலாக கோலோச்சிவரும் நடிகை திரிஷா. அவர் நடித்த ஏகப்பட்ட படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்திருக்கின்றன. தற்போதுகூட அவரது கைகளில் விடாமுயற்சி, தக் லைஃப் உள்ளிட்ட பெரிய படங்கள் இருக்கின்றன. மேலும் மலையாளத்திலும் காலடி எடுத்து வைத்திருக்கிறார். இந்தச் சூழலில் அவர் குறித்து பத்திரிகையாளர் சேகுவேரா அத்துமீறி பேசியிருக்கும் விஷயம் ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்திருக்கிறது.
மௌனம் பேசியதே படத்தில் ஹீரோயினாக அறிமுகமான திரிஷா குறுகிய காலத்திலேயே கோலிவுட்டின் தவிர்க்க முடியாத ஹீரோயினாக வலம் வர ஆரம்பித்தார். விஜய், அஜித், கமல், ரஜினிகாந்த், விக்ரம், சூர்யா, சிம்பு, தனுஷ், ஜெயம் ரவி என தமிழில் இருக்கும் பெரும்பாலான ஹீரோக்களுடன் ஜோடி போட்டு நடித்த ஒரே நடிகை திரிஷா மட்டும்தான் என்பது குறிப்பிடத்தக்கது. அழகு மட்டுமின்றி திறமையையும் அவர் கொண்டிருந்ததால் மட்டும்தான் அவரால் இன்னமும் டாப்பில் இருக்க முடிகிறது.

மற்ற மொழிகளிலும்: தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், ஹிந்தி உள்ளிட்ட மொழிகளிலும் அவர் நடித்திருக்கிறார். சமீபத்தில்கூட மலையாளத்தில் அவர் நடித்த ஐடென்ட்டிட்டி படம் வெளியாகி ஓரளவு நல்ல வரவேற்பை பெற்றது. .இந்தப் படத்தில் திரிஷாவின் நடிப்பை பார்த்த மலையாள திரையுலகம் கண்டிப்பாக அவருக்கு தொடர்ந்து வாய்ப்புகளை கொடுக்கும் எண்ணத்தில் இருப்பதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் திரிஷாவும் ஹேப்பியில் இருக்கிறாராம்.
தமிழில் படு பிஸி: தமிழை பொறுத்தவரை திரிஷா மீண்டும் படு பிஸியாகியிருக்கிறார். கடைசியாக அவரது நடிப்பில் பொன்னியின் செல்வன், லியோ உள்ளிட்ட படங்கள் வெளியாகின. மேலும் GOAT படத்தில் விஜய்யுன் ஒரு பாடலுக்கு நடனம் ஆடியதும் குறிப்பிடத்தக்கது. அடுத்ததாக அவரது நடிப்பில் விடாமுயற்சி, தக் லைஃப் உள்ளிட்ட படங்கள் வரவிருக்கின்றன. கண்டிப்பாக இந்த இரண்டு படங்களும் திரிஷாவின் கரியரில் மெகா ஹிட் படங்களாக அமையும் என்று எதிர்பார்க்கலாம்.
விஜய்யுடன் கிசுகிசு: இதற்கிடையே விஜய்யும், திரிஷாவும் இணைந்து கில்லி, திருப்பாச்சி, ஆதி, குருவி, லியோ படங்களில் நடித்தனர். பல வருடங்களுக்கு பிறகுதான் லியோவில் இணைந்தனர். அந்தப் படத்தில் இருவருக்கும் லிப் லாக் சீன் இருந்தது. அதனையடுத்து ஏற்கனவே அவர்களை பற்றி வந்த கிசுகிசு மேலும் வலு பெற்றது. அதுமட்டுமின்றி விஜய்யின் பிறந்தநாளுக்கு அவருடன் திரிஷா லிஃப்ட்டில் இருந்த புகைப்படத்தை பகிர்ந்ததும் சர்ச்சைக்கு மேலும் தீனி போட்டது.
சேகுவேரா பேட்டி: இந்நிலையில் யூடியூப் சேனல்களுக்கு தொடர்ந்து பேட்டி கொடுத்துவரும் பத்திரிகையாளர் சேகுவேரா திரிஷா குறித்து சமீபத்திய பேட்டியில் பேசுகையில், "திருமணம் செய்துகொண்டு விவாகரத்து பெறுவதற்கு திருமணம் செய்துகொள்ளாமலே இருக்கலாம் என்று திரிஷா ஒரு பொன்மொழி சொல்லியிருக்கிறார். அதனை கல்வெட்டிலேயே பதிக்கலாம். இத்தனை வயது ஆன பிறகு எதற்காக தத்துவம் சொல்லவேண்டும். அவர் என்ன பெரிய திருவள்ளுவரா.
விஜய் இன்னொரு பெண்ணுடைய கணவர். அவரது பிறந்தநாளுக்கு திரிஷா என்ன போஸ்ட் போட்டிருந்தார். இன்னொரு பெண்ணின் கணவரை பற்றி கூறுகையில், Love For Ever என்று சொல்லலாமா. அப்படி சொன்னால் அவர்களை பற்றி இந்த சமூகம் என்ன மாதிரியாக பார்க்கும்" என்றார். சேகுவேராவின் இந்தப் பேச்சுக்கு ரசிகர்களில் ஒரு தரப்பினர் தங்களது கண்டனத்தை பதிவு செய்துவருகிறார்கள்.


Click it and Unblock the Notifications











