ஐஸ்வர்யா விஷயத்தில் அப்படி செய்யவில்லை என தனுஷால் சொல்ல முடியுமா?.. பிரபலம் என்ன இப்படி சொல்றாரு
சென்னை: நடிகர் தனுஷ் கோலிவுட்டின் டாப் 10 நடிகர்களில் ஒருவராக இருக்கிறார். அவரது நடிப்பில் கடைசியாக வெளியான ராயன் படம் விமர்சன ரீதியாக அப்படி இப்படி பேசப்பட்டாலும் வசூல் ரீதியாக நல்ல ரெஸ்பான்ஸையே பெற்றது. இப்போது சேகர் கம்முல்லா இயக்கத்தில் குபேரா படத்தில் நடித்துவரும் தனுஷ்; ரஜினிகாந்த்தின் மூத்த மகள் ஐஸ்வர்யாவை பிரிந்து வாழ்ந்துவருகிறார். இந்தச் சூழலில் தனுஷ் குறித்து பத்திரிகையாளர் சேகுவேரா சில விஷயங்களை பேசியிருக்கிறார்.
தனுஷ் இப்போது கோலிவுட்டின் சிறந்த நடிகராக திகழ்ந்துவருகிறார். தமிழ் மட்டுமின்றி ஹிந்தி, ஹாலிவுட் ஆகியவைகளிலும் நடித்துவருகிறார். துள்ளுவதோ இளமை படத்தில் யாரெல்லாம் அவரை உருவ கேலி செய்தார்களோ அவர்கள் எல்லாம் இப்போது மூக்கின் மீது விரலை வைத்து பார்த்துவருகிறார்கள் தனுஷை. அந்த அளவுக்கு தனது திறமையை வளர்த்துக்கொண்டு தனக்கென்று தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி வைத்திருக்கிறார். நடிப்பு, இயக்கம், பாடல் எழுதுவது, பாடல் பாடுவது என கலக்குகிறார் தனுஷ்.

ராயன்: தனுஷின் நடிப்பில் கடைசியாக ராயன் படம் வெளியானது. அந்தப் படத்தை அவரே இயக்கி நடித்திருந்தார். தங்கை செண்ட்டிமெண்ட் என்ற பழைய அஸ்திவாரத்தை வைத்து ராயனை கட்டியிருந்தார் தனுஷ். படம் விமர்சன ரீதியாக பெரிதாக கொண்டாடப்படவில்லை. அதேசமயம் வசூல் ரீதியாக நல்ல ரெஸ்பான்ஸை பெற்றுவிட்டதாக சொல்லப்படுகிறது. இந்தப் படத்துக்கு பிறகு அவர் குபேரா படத்தில் நடித்துவருகிறார். அதுதவிர்த்து இளையராஜா பயோபிக், மாரி செல்வராஜுடன் ஒரு படம், ஹிந்தியில் ஒரு படம் என பிஸியாக இருக்கும் தனுஷ்; அவெஞ்சர்ஸ் டூம்ஸ்டே படத்திலும் நடிக்கவிருப்பதாக சொல்லப்படுகிறது.
விவாகரத்து: இதற்கிடையே ரஜினிகாந்த்தின் மூத்த மகள் ஐஸ்வர்யாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார் தனுஷ். இருவருக்கும் யாத்ரா, லிங்கா என்ற மகன்கள் இருக்கிறார்கள். சுமூகமாக போய்க்கொண்டிருந்த தனுஷ் - ஐஸ்வர்யா திருமண வாழ்க்கை இப்போது பிரிவில் நிற்கிறது. இருவரையும் சேர்த்து வைக்க குடும்பத்தினர் முயற்சிகள் மேற்கொள்வதாக சொல்லப்பட்டாலும்; சட்டப்பூர்வமாக விவாகரத்து கோரியிருப்பதாகவும் ஒரு தகவல் ஓடிக்கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
சேகுவேரா பேட்டி: இந்நிலையில் பத்திரிகையாளர் சேகுவேரா தனுஷ் - ஐஸ்வர்யா விவாகரத்து குறித்து பேசியிருக்கும் விஷயம் அதிர்ச்சியை கிளப்பியிருக்கிறது. தனியார் யூட்யூப் சேனல் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில், "தனுஷ் எப்படி ரஜினிகாந்த்தின் குடும்பத்தில் முதன்முதலாக உள்ளே சென்றார். அப்படி என்ன அவர்களது காதல். ஐஸ்வர்யாவை மற்ற சில நடிகர்களுடன் இணைத்து அப்போதே பேசப்பட்டது என்பதை தமிழ்நாட்டில் பலரும் அறிவார்கள்.
துரோகம் செய்த தனுஷ்?: சிம்பு பாவம் அவர் இப்போது நிம்மதியாக இருக்கிறார். இனி அவருக்கு திருமணம் நடக்காது. இனி கரியர்தான் முக்கியம் என்று அவர் சென்றுகொண்டிருக்கிறார். ஏகப்பட்ட காதல் தோல்விகளை சந்தித்திருக்கிறார் அவர். அடுத்தவனின் மனைவியை அபகரிப்பது மட்டும் துரோகம் ஆகாது. அடுத்தவன் காதலியை அபகரிப்பதும் துரோகம்தான். இதனை தனுஷால் இல்லை என்று சொல்ல முடியுமா" என்று கேள்வி எழுப்பியிருக்கிறார்.


Click it and Unblock the Notifications











