பிரைவேட்டா டைவர்ஸ் செய்யுங்க.. ஏன் வெளில சொல்றீங்க.. ஜிவி - சைந்தவியை விமர்சித்த பத்திரிகையாளர்
சென்னை: இசையமைப்பாளரும், நடிகருமான ஜிவி பிரகாஷ் தனது பள்ளி காலத்திலேயே சைந்தவியை காதலித்துவந்தார். இருவரும் பல வருடங்கள் காதலித்த பிறகு இருவீட்டார் சம்மதத்துடன் கடந்த 2013ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர். அவர்களுக்கு ஒரு பெண் குழந்தையும் இருக்கிறார். கோலிவுட்டின் ஃபேவரைட் ஜோடியாக வலம் வந்த ஜிவி - சைந்தவி இப்போது பிரிந்திருக்கிறார்கள். இரண்டு பேருமே அதுகுறித்த அறிவிப்பையும் வெளியிட்டிருந்தார்கள். இந்தச் சூழலில் அவர்கள் குறித்து பத்திரிகையாளர் சேகுவார் பேசியிருக்கிறார்.
கோலிவுட்டின் ஃபேவரைட் இசையமைப்பாளர்களில் ஒருவர் ஜிவி பிரகாஷ். வெயில் திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான அவர் அந்தப் படத்திலேயே தனது அசாத்திய திறமையை காண்பித்தார். அதனைத் தொடர்ந்து பல படங்களுக்கு இசையமைத்து முன்னணி இசையமைப்பாளராக குறுகிய காலத்திலேயே வளர்ந்துவிட்டார். பாடல்கள் மட்டுமின்றி பின்னணி இசையிலும் அதகளம் செய்யக்கூடிய ஜிவி பிரகாஷ். அதற்கு உதாரணமாக ஆயிரத்தில் ஒருவன், மயக்கம் என்ன உள்ளிட்ட படங்களை சொல்லலாம்.

நடிகர் ஜிவி பிரகாஷ்: சூழல் இப்படி இருக்க ஜிவி பிரகாஷ் நடிகராகவும் அறிமுகமாகி தொடர்ந்து நடித்துவருகிறார். வாரா வாரம் வெள்ளிக்கிழமைக்கு அவரது ஒரு படம் ரிலீஸாகிவிடுகிறது. இருந்தாலும் நடிகராக எதிர்பார்த்த வெற்றி அவருக்கு இன்னமும் கிடைக்கவில்லை. டார்லிங், த்ரிஷா இல்லைனா நயன்தாரா, சர்வம் தாள மயம், சிகப்பு மஞ்சள் பச்சை உள்ளிட்ட படங்கள் மட்டும் ஜிவி பிரகாஷுக்கு நல்ல பெயரை பெற்றுக்கொடுத்தன. கடைசியாக வெளியான டியர், கள்வன் ஆகிய படங்கள் படுத்துவிட்டன.
திருமணம்: இதற்கிடையே அவர் பள்ளி படித்ததிலிருந்தே சைந்தவியை காதலித்துவந்தார். பிறகு 2013ஆம் ஆண்டு திருமணமும் செய்துகொண்டார். அவர்களுக்கு அன்வி என்ற மகளும் இருக்கிறார். சைந்தவி பின்னணி பாடகியாகவும் ஜொலிப்பவர். ஜிவியின் இசையில் ஏராளமான பாடல்களை பாடியவரும்கூட. கோலிவுட்டின் ஃபேவரைட் ஜோடியாக இரண்டு பேரும் வலம் வந்தனர். இந்தச் சூழலில் திருமண வாழ்க்கையை நாங்கள் இரண்டு பேரும் முடித்துக்கொள்வதாக அறிவிப்பை வெளியிட்டனர்.
சேகுவார் பேட்டி: மேலும் தங்கள் விவாகரத்து குறித்து இஷ்டத்துக்கு கதை எழுதாதீர்கள் என்றும் இருவரும் சொல்லியிருக்கின்றனர். இந்நிலையில் பத்திரிகையாளர் சேகுவார் இதுகுறித்து தனியார் யூட்யூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், “தங்கள் விவகாரம் தொடர்பாக எதுவும் பேசக்கூடாது. தங்களுக்கு பிரைவேசி வேண்டும் என்றும் ஜிவி பிரகாஷும், சைந்தவியும் சொல்லிக்கொண்டிருக்கின்றனர்.
ஏன் வெளில சொல்றீங்க: பிரைவேசி வேண்டுமென்றால் ஏன் திருமணம் செய்துகொண்டு அதை முறித்துக்கொள்ளும்போது வெளியில் சொல்கிறீர்கள். அதை பிரைவேட்டாக செய்ய வேண்டியதுதானே. அதை ஏன் சோஷியல் மீடியாவில் அனைவரும் அறிந்துகொள்ளும்வகையில் பதிவா போடுகிறார்கள். அப்படி பொதுவெளியில் சொல்வதால்தான் எல்லோரும் அதுகுறித்து பேசுகிறார்கள். ஜிவி பிரகாஷுக்கு பலருடன் தொடர்பு இருக்கிறது. அதனால்தான் சைந்தவி பிரிந்து சென்றுவிட்டார்" என்றார்.


Click it and Unblock the Notifications











