கமலுடன் கௌதமி மகளை தொடர்புப்படுத்தி பேசிய பத்திரிகையாளர்.. என்ன இப்படியெல்லாம் சொல்லிருக்காரு?
சென்னை: கமல் ஹாசன் இப்போது தக் லைஃப் படத்தில் நடித்துவருகிறார். மேலும் ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 படத்திலும் நடித்து முடித்திருக்கிறார். அடுத்ததாக சண்டை பயிற்சியாளர்கள் அன்பறிவ் இயக்கத்திலும் ஒரு படத்தில் நடிக்க கமிட்டாகியிருக்கிறார். சூழல் இப்படி இருக்க கமல் ஹாசன் குறித்து பத்திரிகையாளர் சேகுவார் பேசியிருக்கும் விஷயம் ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. அதை கேள்விப்பட்ட ரசிகர்கள் இப்படியுமா நடக்கும் என்று கமெண்ட்ஸ் செய்துவருகின்றனர்.
கமல் ஹாசன் ஏற்படுத்தியிருக்கும் தாக்கம் இந்திய சினிமாவில் யாராலும் மறுக்க முடியாதது. சிறு வயதிலிருந்தே சினிமாவில் இருக்கும் அவர் இதுவரை 233 படங்களில் நடித்திருக்கிறார். சின்ன வயதிலேயே சினிமாவுக்குள் வந்ததாலோ என்னவோ அவருக்கு சினிமாவில் தெரியாத ஜானரே இல்லை. குழந்தை நட்சத்திரம், உதவி நடன அமைப்பாளர், நடிகர், இயக்குநர், பாடலாசிரியர், தயாரிப்பாளர் என எந்த கிரவுண்டில் இறங்கினாலும் அதில் அசால்ட்டாக ஸ்கோர் செய்துவிடுபவர் அவர்.

சினிமா பல்கலைக்கழகம்: கமல் ஹாசன் தனது ஒவ்வொரு படத்திலும் ஏதேனும் ஒரு புதுமையை புகுத்துபவர். ஏதேனும் ஒரு புதிய தொழில்நுட்பமோ இல்லை புதிய கருவியோ வந்தால் அதனை தமிழ் சினிமாவில் முதலில் அறிமுகப்படுத்துவதும் அவரே. அதனால்தான் அவரை சினிமாவில் நடமாடும் பல்கலைக்கழகம் என்கிறார்கள். மேலும் தற்கால இயக்குநர்கள், நடிகர்கள் கமல் ஹாசனின் ரசிகர்களாகவும் இருக்கிறார்கள்.
மஞ்சும்மல் பாய்ஸ்: அதற்கு சமீபத்திய உதாரணம்தான் மஞ்சும்மல் பாய்ஸ் திரைப்படம். அப்படத்தின் இயக்குநர் சிதம்பரம் பொடுவல் கமல் ஹாசனின் தீவிரமான ரசிகர். 1991ஆம் ஆண்டு குணா படம் எடுக்கப்பட்ட குகையை மையமாக வைத்து மஞ்சும்மல் பாய்ஸ் படத்தை உருவாக்கியிருந்தார். அந்தப் படம் கேரளாவைத் தாண்டி தமிழ்நாட்டிலும் வசூல் மழை பொழிந்துவருகிறது. அதற்கு காரணம் கமல் ஹாசனும், குணாவும், அதில் இடம்பெற்ற கண்மணி அன்போடு காதலனும் பாடல்தான்.
கண்மணி அன்போடு காதலன்: வழக்கமான மெலடியாக இல்லாமல் கமல் ஹாசன் ஐடியா கொடுக்க ஒரு கடிதம் எழுதுவது போல் அந்தப் பாடலை உருவாக்கியிருந்தார்கள். அந்தப் பாடல் இப்போதுவரை ஃபேமஸ். மஞ்சும்மல் பாய்ஸில்கூட அந்தப் பாடல் வரும்போது திரையரங்கில் இருந்த ஒட்டுமொத்த பேரும் கைத்தட்டி ஆர்ப்பரித்தார்கள். அந்த அளவுக்கு பாடல் இன்றுவரை கனெக்ட் ஆகியிருக்கிறது. இப்படி பல புதுமைகளை அப்போதே புகுத்தி இன்றுவரை தனி ஆளுமையாக திகழ்ந்துகொண்டிருக்கிறார் கமல் ஹாசன்.
தனிப்பட்ட வாழ்க்கை: கமல் ஹாசனின் தனிப்பட்ட வாழ்க்கை சர்ச்சைகளை சந்தித்தவைதான். ஆனால் அதனை அவர் பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை. முதலில் நடிகை வாணி கண்பதியை காதலித்து திருமணம் செய்தார். பிறகு அவரை பிரிந்து சரிகாவை திருமணம் செய்தார். பிறகு அவரையும் பிரிந்து கௌதமியுடன் லிவிங் ரிலேஷன்ஷிப்பில் இருந்தார். இந்தச் சூழலில் கௌதமி - கமல் பிரிவு குறித்து பத்திரிகையாளர் சேகுவார் பேசியிருக்கும் விஷயம் அதிர்ச்சியை கிளப்பியிருக்கிறது.
சேகுவார் சொன்னது: அவர் அளித்த பேட்டி ஒன்றில், "ஒழுக்கத்துக்கு குறைந்தபட்ச கியாரண்டியாவது கொடுக்க வேண்டும். தனது மகளின் பாதுகாப்பை கருதிதான் கமலிடமிருந்து பிரிவதாக கௌதமி கூறியிருக்கிறார். கமல் ஹாசனோ வாணி, சரிகா ஆகிய இருவரையும் பிரிந்து கௌதமியுடன் வாழ்ந்தார். அப்படி வாழும்போது நாம் ஒரு பெண் குழந்தை வைத்திருக்கிறோமே என்ற அறிவு கௌதமிக்கு இருந்திருக்க வேண்டாமா. கமல் ஹாசனை கௌதமி தேர்ந்தெடுத்திருக்கக்கூடாது என்பது எனது தனிப்பட்ட கருத்து.
ஒழுக்கமில்லாதவர்தான்: கமல் ஹாசன் உடலுறவில் ஒழுக்கமில்லாதவர்தான். அப்படி இருக்கும்போது கௌதமி தன்னுடைய மகளுக்கு பாதுகாப்பு இல்லை என்று சொல்லியதற்கு கமல் ஹாசன் ஏன் எதுவுமே சொல்லவில்லை. அப்போ கமலால் கௌதமி மகளுக்கு என்ன நடந்தது என்று கௌதமியே சொல்ல வேண்டும். அவரது மகளுக்கு கமல் ஹாசன் உடல் ரீதியாக டார்ச்சர் செய்திருக்கிறார் என்று அர்த்தம் ஆகிவிடும். பாதுகாப்பு கருதி காண்டம் பயன்படுத்துங்கள் என்று சொன்னவர் கமல். எனவே கௌதமி மகளுக்கு கமலால் பிரச்னை ஏற்பட்டிருக்கலாம். மற்ற விஷயங்களில் வாய் கிழிய பேசும் அவர் இதற்கு ஏன் எதுவுமே சொல்லவில்லை" என்றார்.


Click it and Unblock the Notifications











