ரஜினிக்கு மனதிலும் வலி, உடலிலும் வலி.. அப்படி என்ன ஆச்சு?.. பிரபலம் கொடுத்த எக்ஸ்க்ளூசிவ் பேட்டி
சென்னை: ரஜினிகாந்த் நடிப்பில் கடைசியாக வேட்டையன் திரைப்படம் வெளியானது. அந்தப் படம் கலவையான விமர்சனங்களையே பெற்றது. தற்போது அவர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி படத்தில் நடித்துவருகிறார். படத்தின் ஷூட்டிங் மும்முரமாக நடந்துவருகிறது. படத்திருந்து முதல் சிங்கிள் க்ளிம்ப்ஸ் அவரது பிறந்தநாளை முன்னிட்டு வெளியானது. இந்தச் சூழலில் அவர் குறித்து பிரபல பத்திரிகையாளர் சேகுவேரா ஃபில்மிபீட் தமிழுக்கு எக்ஸ்க்ளூசிவ் பேட்டி கொடுத்திருக்கிறார்.
ரஜினிகாந்த் என்றாலே ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் தெரியும். உலகளவில் அவருக்கென்று ரசிகர்கள் எக்கச்சக்கமாக இருக்கிறார்கள். இவர் நடித்த முத்து படம்தான் ஜப்பான் நாட்டில் அதிக நாட்கள் ஓடிய முதல் தமிழ் படம் என்பது குறிப்பிடத்தக்கது. 75 வயதாகியும் இன்னமும் சுறுசுறுப்பாக இருக்கும் ரஜினிகாந்த் கடைசியாக வேட்டையன் படத்தில் நடித்திருந்தார். த.செ.ஞானவேல் இயக்கியிருந்த படம் என்பதாலும்; முதன்முறையாக ரஜினியும், ஞானவேலுவும் இணைந்த படம் என்பதாலும் இப்படத்தின் மீது உச்சக்கட்ட எதிர்பார்ப்பு இருந்தது.

கலவையான விமர்சனம்தான்: ஆனால் படத்துக்கு கலவையான விமர்சனமே கிடைத்தது. முக்கியமாக இது ரஜினி படம் மாதிரியும் இல்லை ஞானவேல் படம் மாதிரியும் இல்லை என்று கூறினார்கள். மேலும் இந்தப் படத்துக்காக ஞானவேல் பல விஷயங்களில் காம்ப்ரமைஸ் செய்திருப்பது அப்படியே தெரிகிறது. அவர் அவ்வாறு செய்திருக்க வேண்டிய அவசியமில்லை என்றும் ரசிகர்கள் நொந்துகொண்டார்கள். இருந்தாலும் படம் தோல்வி படமாக அமையாததால் நிம்மதி பெருமூச்சு விட்டிருந்தனர் அவர்கள்.
கூலி: வேட்டையன் படத்தை முடித்துவிட்டு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி படத்தில் நடித்துவருகிறார் ரஜினிகாந்த். இதில் அவருடன் நாகார்ஜுனா, சௌபின் சாஹிர், உபேந்திரா, ஸ்ருதி ஹாசன் என பலர் நடிக்கிறார்கள். அனிருத் இசையமைக்க சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. நிச்சயமாக வேட்டையனில் மிஸ் ஆன மெகா ப்ளாக் பஸ்டர் கூலி படத்தில் கிடைத்துவிடும் என்று ரஜினியின் ரசிகர்கள் அதீத நம்பிக்கையில் இருக்கிறார்கள். படத்தின் ஷூட்டிங் மும்முரமாக நடைபெற்றுவருகிறது.
ஜெயிலர் 2: கூலி படத்தை முடித்துவிட்டு நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ஜெயிலர் 2 படத்தில் நடிக்கிறார் ரஜினி. ஏற்கனவே இந்தப் படத்தின் முதல் பாகம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. நீண்ட நாட்கள் வெற்றி இல்லாமல் தவித்துக்கொண்டிருந்த ரஜினிக்கு ஜெயிலர்தான் மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது. எனவே ஜெயிலர் 2வும் சூப்பர் டூப்பர் ஹிட்டடிக்கும் என்ற ஆவல் ரசிகர்களிடையே எழுந்திருக்கிறது. படத்தின் அறிமுக வீடியோ பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சமீபத்தில்தான் வெளியானது குறிப்பிடத்தக்கது.
சேகுவேரா பேட்டி: இந்நிலையில் பிரபல பத்திரிகையாளரான சேகுவேரா ஃபில்மிபீட் தமிழுக்கு அளித்த பிரத்யேக பேட்டியில், "ரஜினிகாந்த்தான் ரியல் சூப்பர் ஸ்டார். 75 வயதில் 175 படங்கள் நடித்திருக்கிறார். உலகத்தில் இவருக்கு ஈடான ஒரு ஸ்டாரை காண்பியுங்கள் பார்ப்போம். அவர் நமக்கெல்லாம் ஒரு பெருமை. அவரை கொச்சைப்படுத்தக்கூடாது. அவருடன் நடிக்க வந்தவர்கள் எல்லாம் காணாமல் போய்விட்டார்கள்தானே. அவருக்கு மனதிலும் வலி இருக்கிறது உடலிலும் வலி இருக்கிறது. ஆனால் இன்னமும் அவர் நிற்கிறார்தானே. அப்போ நாம் அவரை ஒரு அதிசய பிறவியாகத்தான் பார்க்க வேண்டும்" என்றார்.


Click it and Unblock the Notifications











