தனுஷ் - ஐஸ்வர்யா ஆரம்பத்திலிருந்தே இணக்கமாக இல்லையாம்.. காரணம் அதுவா?.. இஷ்டத்துக்கு பேசும் சேகுவேரா
சென்னை: நடிகர் தனுஷ் கோலிவுட்டின் டாப் 10 நடிகர்களில் ஒருவராக இருக்கிறார். அவரது நடிப்பில் கடைசியாக வெளியான ராயன் படம் விமர்சன ரீதியாக அப்படி இப்படி பேசப்பட்டாலும் வசூல் ரீதியாக நல்ல ரெஸ்பான்ஸையே பெற்றது. இப்போது சேகர் கம்முல்லா இயக்கத்தில் குபேரா படத்தில் நடித்துவரும் தனுஷ்; ரஜினிகாந்த்தின் மூத்த மகள் ஐஸ்வர்யாவை பிரிந்து வாழ்ந்துவருகிறார். இந்தச் சூழலில் தனுஷ் குறித்து பத்திரிகையாளர் சேகுவேரா சில விஷயங்களை பேசியிருக்கிறார்.
தனுஷ் இப்போது கோலிவுட்டின் சிறந்த நடிகராக திகழ்ந்துவருகிறார். தமிழ் மட்டுமின்றி ஹிந்தி, ஹாலிவுட் ஆகியவைகளிலும் நடித்துவருகிறார். துள்ளுவதோ இளமை படத்தில் யாரெல்லாம் அவரை உருவ கேலி செய்தார்களோ அவர்கள் எல்லாம் இப்போது மூக்கின் மீது விரலை வைத்து பார்த்துவருகிறார்கள் தனுஷை. அந்த அளவுக்கு தனது திறமையை வளர்த்துக்கொண்டு தனக்கென்று தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கிவைத்திருக்கிறார். நடிப்பு, இயக்கம், பாடல் எழுதுவது, பாடல் பாடுவது என கலக்குகிறார் தனுஷ்.

ராயன்: தனுஷின் நடிப்பில் கடைசியாக ராயன் படம் வெளியானது. அந்தப் படத்தை அவரே இயக்கி நடித்திருந்தார். தங்கை செண்டிமெண்ட் என்ற பழைய அஸ்திவாரத்தை வைத்து ராயனை கட்டியிருந்தார் தனுஷ். படம் விமர்சன ரீதியாக பெரிதாக கொண்டாடப்படவில்லை. அதேசமயம் வசூல் ரீதியாக நல்ல ரெஸ்பான்ஸை பெற்றுவிட்டதாக சொல்லப்படுகிறது. இந்தப் படத்துக்கு பிறகு அவர் குபேரா படத்தில் நடித்துவருகிறார். அதுதவிர்த்து இளையராஜா பயோபிக், மாரி செல்வராஜுடன் ஒரு படம், ஹிந்தியில் ஒரு படம் என பிஸியாக இருக்கும் தனுஷ்; அவெஞ்சர்ஸ் டூம்ஸ்டே படத்திலும் நடிக்கவிருப்பதாக சொல்லப்படுகிறது.
விவாகரத்து: இதற்கிடையே ரஜினிகாந்த்தின் மூத்த மகள் ஐஸ்வர்யாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார் தனுஷ். இருவருக்கும் யாத்ரா, லிங்கா என்ற மகன்கள் இருக்கிறார்கள். சுமூகமாக போய்க்கொண்டிருந்த தனுஷ் - ஐஸ்வர்யா திருமண வாழ்க்கை இப்போது பிரிவில் நிற்கிறது. இருவரையும் சேர்த்து வைக்க குடும்பத்தினர் முயற்சிகள் மேற்கொள்வதாக சொல்லப்பட்டாலும்; சட்டப்பூர்வமாக விவாகரத்து கோரியிருப்பதாகவும் ஒரு தகவல் ஓடிக்கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
சினிமாவில் களமிறக்கிய தனுஷ்: சூழல் இப்படி இருக்க தனுஷ் இப்போது இயக்கிவரும் நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் என்ற படத்தில் அவரது மூத்த மகன் யாத்ரா கோல்டு ஸ்பேரோ என்ற பாடலில் நான்கு வரிகளை எழுதியிருப்பது குறிப்பிடத்தக்கது. விரைவில் அந்தப் பாடல் வெளியாகவிருக்கிறது. மேலும் கூடிய சீக்கிரமே யாத்ரா ஹீரோவாக அறிமுகமானாலும் ஆகலாம் என்ற பேச்சும் ஓடிக்கொண்டிருக்கிறது. தனது மகனை சினிமாவில் தனுஷ் களமிறக்கியிருப்பது ரஜினி வீட்டுக்கு ஷாக் கொடுத்திருப்பதாகவும் ஒரு தகவல் ஓடுகிறது.
சேகுவேரா பேட்டி: இந்நிலையில் பிரபல பத்திரிகையாளர் சேகுவேரா சமீபத்தில் தனியார் யூட்யூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், "ஆரம்பத்திலிருந்தே ஐஸ்வர்யாவை சுற்றித்தான் கிசுகிசுக்கள் இருந்தன. சிம்புவுடன் அவர் இணைத்து பேசப்பட்டார். இத்தனைக்கு ஐஸ்வர்யா பிரபல நடிகை இல்லை. பிரபல நடிகரின் மகள். அப்படியிருந்தும் அவரை பற்றி கிசுகிசுக்கப்பட்டது. ஆனால் தனுஷை சுற்றி அப்படி எதுவுமே இல்லை என்பதை நாம் கவனிக்க வேண்டும்.
அந்த சமயத்தில்தான் தனுஷுக்கும் ஐஸ்வர்யாவுக்கும் திருமணம் நடந்தது. ஆரம்பத்திலிருந்தே இரண்டு பேருக்குமே இணக்கம் இல்லை. லதா ரஜினிகாந்த்துக்கு இப்போதெல்லாம் ஒரு கவலைதான். அதாவது தனது பேரப்பிள்ளைகள் பெரியவர்களாகிவிட்டார்களே. அப்படி இருக்கும்போது எப்படி தனது மகளுக்கு மறுமணம் செய்து வைப்பது என்பதுதான் அவரது கவலை" என்றார்.


Click it and Unblock the Notifications











