ரஜினியை நேரில் சந்தித்து கலங்கிய தனுஷ்?.. சாதாரணம் விடுங்க.. விரைவில் குட் நியூஸ்..பிரபலம் ஓபன் டாக்
சென்னை: கோலிவுட்டின் ஃபேவரைட் ஜோடிகளில் ஒன்றாக வலம் வந்தார்கள் தனுஷும், ஐஸ்வர்யாவும். ஆனால் யார் கண் பட்டதோ அவர்கள் இப்போது விலகியிருக்கிறார்கள். விலகியிருந்தாலும் இரண்டு பேரும் சட்டப்பூர்வமாக விவாகரத்து இன்னும் பெறவில்லை. இதன் காரணமாக அவர்கள் இரண்டு பேரும் விரைவில் இணைந்து வாழவிருக்கிறார்கள் என்று கோலிவுட் முழுக்க பேச்சுக்கள் எழுந்திருக்கின்றன. இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து பிரபல பத்திரிகையாளர் சேகுவேரா பேசியிருக்கிறார்.
கோலிவுட்டின் பெஸ்ட் ஆக்டர்களில் ஒருவரான தனுஷ் தமிழ் மட்டுமின்றி ஹிந்தி, ஆங்கிலம் என பல மொழிகள் படத்தில் நடிக்க ஆரம்பித்திருக்கிறார். ஆரம்பத்தில் தான் சந்தித்த அவமானங்களையும், வலிகளையும் திறமையாக மாற்றி இப்போது ஜொலித்துக்கொண்டிருக்கிறார். அவர் ரஜினிகாந்த்தின் மூத்த மகள் ஐஸ்வர்யாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். திருமணம் ஆனதிலிருந்து இரண்டு பேருமே உச்சபட்ச காதலோடு, ஒற்றுமையோடு வாழ்ந்துவந்தார்கள். யாத்ரா, லிங்கா என்ற இரண்டு மகன்களும் இருக்கிறார்கள்..

பிரிவு: ஆனால் திடீரென சில வருடங்களுக்கு முன்பு அறிக்கை வெளியிட்ட தனுஷும், ஐஸ்வர்யாவும், 'நாங்கள் இருவரும் தனித்தனி பாதையில் பயணம் செய்ய முடிவெடுத்திருக்கிறோம்' என்று கூறி அதிர்ச்சியை கிளப்பினர். கிட்டத்தட்ட பத்து வருடங்கள்வரை சேர்ந்து வாழ்ந்த அவர்கள்; மகன்கள் வளர்ந்த பிறகு பிரிவதாக அறிவித்திருக்கிறார்களே என ரசிகர்கள் மட்டுமின்றி திரைத்துறையினரும் முணுமுணுக்கவே செய்தனர். இதனையடுத்து இப்போதுவரை இரண்டு பேரும் பிரிந்துதான் இருக்கிறார்கள்.
விவாகரத்து இல்லை: இரண்டு பேரும் பிரிந்து வாழ்ந்துவந்தாலும் அவர்களை சேர்த்து வைக்க இரண்டு குடும்பத்தினரும் தீவிரமாக முயற்சித்து வருகிறார்கள். அதற்கு ஆரம்பத்தில் இருவரும் ஒத்துழைக்கவில்லை என்றும் இப்போது இறங்கிவர ஆரம்பித்தார்கள் என்றும் சொல்லப்படுகிறது. அதுமட்டுமின்றி ஐஸ்வர்யா இன்ஸ்டாகிராமில் பகிரும் புகைப்படங்களுக்கு தனுஷும் மறக்காமல் லைக் போட தொடங்கியுள்ளார். இதனால் தனுஷ் மீண்டும் சேர்வதற்கான சமிக்ஞையை கொடுக்க ஆரம்பித்திருக்கிறார் என்று ரசிகர்கள் கூறுகிறார்கள்.
மருத்துவமனையில் ரஜினி: அதுமட்டுமின்றி ரஜினிக்கு அடுத்த வருடம் சினிமாவில் 50ஆவது ஆண்டு நிறைவடைகிறது. எனவே அந்த விழாவில் தனுஷும், ஐஸ்வர்யாவும் இணைந்து பணியாற்றுகிறார்கள் என்றும், தனுஷின் மகன் யாத்ரா ஹீரோவாக அறிமுகமாகும் படத்தின் பூஜைதான் இரண்டு பேரின் இணைதலுக்கு முதல் புள்ளியாக இருக்கும் என்றும் விவரமறிந்தவர்கள் கூறுகிறார்கள். இதற்கிடையே ரஜினிகாந்த்துக்கு உடல்நிலை சரியில்லாமல் போனதால் சில நாட்களுக்கு முன்பு சென்னை அப்போலோவில் அனுமதிக்கப்பட்டார்.
சேகுவேரா பேட்டி: அதனையடுத்து தனுஷ் அப்போலோவுக்கு நேரில் சென்று ரஜினியை பார்த்து கலங்கியதாக தகவல்கள் ஓட ஆரம்பித்தன. இந்நிலையில் பிரபல பத்திரிகையாளர் சேகுவேரா தனியார் யூட்யூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், "அப்போலோ மருத்துவமனையில் ரஜினிகாந்த்தை தனுஷ் சந்தித்து கலங்கியதாக ஊடகங்கள் சொல்கின்றன. நடந்திருந்தால் நல்லதுதான். ஒருவர் இறங்கிவருவதில் தவறு ஏதும் இல்லை. தனுஷும் ஐஸ்வர்யாவும் மீண்டும் இணைவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருக்கின்றன.
எல்லா மூத்த நடிகர்களுக்கும் ரஜினிகாந்த்துக்கு ஏற்பட்ட பிரச்னை ஏற்பட்டது. உதாரணமாக சிவாஜியை எடுத்துக்கொண்டால் பிரபு - குஷ்பூ விவகாரத்தில் மன உளைச்சலை சந்தித்தார். அதேபோல் ரஜினியும் தனுஷ் - ஐஸ்வர்யா விஷயத்தில் அனுபவித்தார். அவர்கள் இரண்டு பேரும் சேர்ந்துவிட்டால் ரஜினிக்கு மிகப்பெரிய மன அழுத்தம் போய்விடும்" என்றார்.


Click it and Unblock the Notifications











