சிம்புவைத்தான் நடிகைகள் ஏமாற்றினார்கள்.. ஒரு நடிகையும் புகார் சொல்லல.. பிரபலம் பயங்கரமா பேசிட்டாரே
சென்னை: கோலிவுட்டின் முன்னணி நடிகர்களில் ஒருவர் சிம்பு. இதுவரை 47 படங்களில் நடித்திருக்கும் அவர்; அடுத்ததாக தக் லைஃப், எஸ்டிஆர் 48 ஆகிய படங்களில் நடிக்கிறார். இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியிருக்கும் அவர் இப்போது ஃபுல் ஃபார்மில் இருக்கிறார். இதன் காரணமாக அவரது ரசிகர்களும் உற்சாகமாக இருக்கிறார்கள். இந்தச் சூழலில் பிரபல பத்திரிகையாளர் சேகுவேரா சிம்பு குறித்து பேசியிருக்கும் விஷயங்கள் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியுள்ளன.
கமல் ஹாசன் போல் சிறு வயதிலிருந்தே நடித்துவருபவர் சிம்பு. எஸ்டிஆர், அட் மேன் என்று ரசிகர்களால் அழைக்கப்படும் அவர் நடிப்பு மட்டுமின்றி இயக்கம், இசை, பாடல்கள் எழுதுவது, பாடுவது என பல ஜானர்களில் தனது திறமையை நிரூபித்தவர். அவர் இயக்கிய மன்மதன் படம் சூப்பர் டூப்பர் ஹிட்டும், வல்லவன் படம் சுமார் ஹிட்டும் அடித்தது. அதுமட்டுமின்றி அவரை பல இயக்குநர்கள் சிங்கிள் டேக் ஆர்ட்டிஸ்ட் என்று புகழ்வதும் இங்கு கவனிக்கத்தக்கது.

தடுமாற்றம்: சிம்பு இடையில் கொஞ்சம் தடுமாறத்தான் செய்தார். ஆன்மீகம் பக்கம் அவரது கவனம் சென்றதை அடுத்து சினிமாவில் கவனக்குறைவாக இருந்தார். இதன் காரணமாக வரிசையாக தோல்வி படங்களை கொடுத்தார். ஆனால் சுதாரித்துக்கொண்ட அவர் தனது எண்ணங்களை சினிமாவில் மீண்டும் செலுத்தி மாநாடு படத்தில் கம்பேக் கொடுத்தார். அந்தப் படத்துக்கு பிறகு நடித்த வெந்து தணிந்தது காடு படமும் சூப்பர் டூப்பர் ஹிட்டடிக்க; அடுத்து நடித்த பத்து தல சுமாரான வரவேற்பை பெற்றது.
இரண்டாவது இன்னிங்ஸ்: சிம்பு ஆரம்பித்திருக்கும் தனது இரண்டாவது இன்னிங்ஸில் ஃபுல் ஃபார்மில் இருக்கிறார். அந்தவகையில் கமல் ஹாசன் - மணிரத்னம் கூட்டணியில் உருவாகிவரும் தக் லைஃப் படத்தில் முக்கியமான வேடம் ஏற்றிருக்கிறார். அதேபோல் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் எஸ்டிஆர் 48 படத்திலும் கமிட்டாகியிருக்கிறார். இவை தவிர்த்து சுதா கொங்கரா இயக்கத்திலும் அவர் ஒரு படத்தில் நடிக்க வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக திரைத்துறையில் பேச்சு எழுந்திருக்கிறது.
சர்ச்சைகள்: சிம்புவை பொறுத்தவரை ஏகப்பட்ட சர்ச்சைகளை சந்தித்தவர். ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு ஒழுங்காக வரமாட்டார் என்று ஆரம்பித்த சர்ச்சையின் முதல் புள்ளி; அவரது காதல் தோல்விகளில் தொடர் புள்ளிகளாக தொடர்ந்துகொண்டே இருந்தன. ஆனால் அத்தனைக்கும் சிம்பு அமைதி மட்டுமே காத்திருந்தார். அதனாலேயே அவருக்கென்று தனி ரசிகர் பட்டாளம் உருவாக தொடங்கியது. இந்த நிலையில் பிரபல பத்திரிகையாளர் சேகுவேரா சிம்பு குறித்து பேசியிருக்கிறார்.
சேகுவேரா பேட்டி: அவர் தனியார் யூட்யூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், "சிம்பு திறமையான நடிகர். அவருடன் நடிக்கத்தான் நடிகைகள் ஆசைப்படுவார்கள். ஏனெனில் சிம்பு சிறு வயதிலிருந்தே நடித்துவருபவர். அவரிடமிருந்து பல விஷயங்களை கற்றுக்கொள்ளலாம். சிம்பு மீது பலர் பல குற்றச்சாட்டுக்களை வைப்பார்கள். ஆனால் ஒன்று சிம்புவைத்தான் நடிகைகள் ஏமாற்றியிருக்கிறார்களே ஒழிய சிம்பு யாரையும் ஏமாற்றவில்லை. இதுவரை ஒரு நடிகைக்கூட சிம்பு என்னை ஏமாற்றிவிட்டார் என்று புகார் சொன்னதே இல்லை. நிறைய காதல் தோல்விகளை கடந்து இன்றும் தனித்து நிற்கிறார் சிம்பு.
டிஆரால் வாழ்ந்தவர்கள்தான் அதிகம்: டி.ராஜேந்தரின் வளர்ப்பு சிம்பு. டிஆரால் இங்கு வாழ்ந்தவர்கள்தான் அதிகம். அழிந்தவர்கள் இல்லை. சிம்பு காதல் வயப்படுவது இயல்புதான். அது ஒரு ஆணுக்கு உள்ள இயற்கை. ஆனால் சிம்பு யார் குடியையாவது கெடுத்துவிட்டார் என்று இதுவரை புகார் வந்திருக்கிறதா. ஒரு நடிகனாக சிம்புவை எனக்கு ரொம்பவே பிடிக்கும். தக் லைஃப் படத்தில் அவருக்கு பெரிய ரோல் கொடுத்திருக்கிறார்கள். அந்தப் படம் சிம்புவின் வேல்யூவை அடுத்தக்கட்டத்துக்கு எடுத்து செல்லும்" என்றார்.


Click it and Unblock the Notifications











