நைட் 12 மணிக்கு அழுத நயன்தாரா?.. உடனே கிளம்பிய விக்னேஷ் சிவன்?.. வைத்து செய்யும் பிரபலம்
சென்னை: நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் திருமணம் ஆனதிலிருந்து சர்ச்சைகளில் சிக்கிவருகிறார்கள். சமீபத்தில் தனுஷுடன் அவர்களுக்கு மோதல் ஏற்பட்டது. அதுதொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடந்துவருகிறது. சூழல் இப்படி இருக்க விக்னேஷ் சிவன் புதுச்சேரி அரசுக்கு சொந்தமான ஹோட்டலை விலைக்கு பேசி அதிர்ச்சியை கிளப்பினார். அதற்கு பலரும் கண்டனம் தெரிவித்தனர். இந்நிலையில் பிரபல பத்திரிகையாளரான சேகுவேரா இதுகுறித்து பேசியிருக்கிறார்.
இயக்குநர் விக்னேஷ் சிவனும், நடிகை நயன்தாராவும் நானும் ரௌடிதான் படத்தில் இணைந்து பணியாற்றியபோது காதலிக்க ஆரம்பித்தார்கள். அதனையடுத்து சில வருடங்களுக்கு முன்பு திருமணமும் செய்துகொண்டார்கள். அவர்களுக்கு உயிர், உலக் என்ற இரண்டு மகன்கள் இருக்கிறார்கள் திருமணம் ஆனதிலிருந்தே அவர்கள் சர்ச்சைகளை சந்தித்துவருகிறார்கள். முதலில் வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றதில் சர்ச்சையை சந்தித்த அவர்கள்; அடுத்ததாக தாங்கள் குடியிருந்த அப்பார்ட்மெண்ட்டில் ஓவர் அராஜகம் செய்வதாக குற்றச்சாட்டு எழுந்தது.

சமீபத்திய சர்ச்சை: இதனையடுத்து தனுஷுக்கும் அவர்களுக்கும் நானும் ரௌடிதான் பட ஃபுட்டேஜை நயனின் ஆவணப் படத்தில் பயன்படுத்துவது தொடர்பாக பிரச்னை வெடித்தது. அந்தப் பிரச்னை இப்போது நீதிமன்றத்தில் வழக்காக நடந்துகொண்டிருக்கிறது. சூழல் இப்படி இருக்க விக்னேஷ் சிவன் சமீபத்தில் இன்னொரு சர்ச்சையிலும் சிக்கியிருக்கிறார். அதாவது புதுச்சேரிக்கு சென்ற அவர் அங்கு இருக்கும் அரசுக்கு சொந்தமான ஹோட்டல் ஒன்றை விலைக்கு பேசியிருக்கிறார்.
கடும் கண்டனம்: ஆனால் அதற்கு சுற்றுலாத் துறை அமைச்சர் மறுப்பு தெரிவித்ததை அடுத்து; ஒப்பந்த அடிப்படையிலாவது வாடகைக்கு தர முடியுமா என்றும் கேட்டிருக்கிறார். அதற்கும் அமைச்சர் மறுத்துவிட்டார். இந்தச் சம்பவம் வெளியில் தெரிந்த பிறகு; அரசுக்கு சொந்தமான இடத்தையே விலை பேசும் அளவுக்கு விக்னேஷ் சிவன் சென்றுவிட்டாரா என்று அவரை நெட்டிசன்கள் வறுத்தெடுத்துவருகின்றனர். இந்நிலையில் பிரபல பத்திரிகையாளர் சேகுவேரா இதுகுறித்து பேசியிருக்கிறார்.
சேகுவேரா பேட்டி: அவர் தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், "விக்னேஷ் சிவனுக்கு அந்த ஹோட்டல் மீது ஆசை இருந்தால் சட்டப்படி ஒரு வழக்கறிஞரை வைத்து இதை எப்படி வாங்க வேண்டும் என்று ஆலோசித்திருக்கலாம். ஆனால் அதையெல்லாம் செய்யாமல் நேரடியாக சென்று ஏன் இப்படி அசிங்கப்பட்டார் என்று தெரியவில்லை. புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமியின் அரசாங்கத்துக்கு நல்ல பெயர் இருக்கிறது. இப்போது இவர் சென்று அமைச்சரிடம் விலை பேசியதை வெளியே சொல்லாமல் இருந்திருக்கலாம்.
என்ன காரணம்: ஆனால் அது பின்நாட்களில் வெளியே வந்தால், அரசு ஹோட்டலை விற்க அமைச்சரிடம் பேரம் நடத்தப்பட்டது என்று செய்திகள் வெளியாகும். இதையெல்லாம் நினைத்துதான் அவர்கள் இந்த செய்தியை உடனடியாக வெளியே விட்டுவிட்டார்கள். எனக்கு அந்த ஹோட்டல் வேண்டுமென்று இரவு 12 மணிக்கு நயன்தாரா அழுதிருப்பார். உடனே அதை பார்க்க முடியாத விக்னேஷ் சிவன், அந்த ஹோட்டலை விலை பேசுவதற்கு கிளம்பி சென்றிருப்பார். இதுதான் அங்கே நடந்திருக்கும்.
தத்துவ மேதையெல்லாம் இல்லை: நயன்தாரா ஒரு நடிகை அவ்வளவுதான். அவர் ஒன்றும் தத்துவ மேதையோ, அரசியல் சக்தியோ கிடையாது. அதிகாரம் எல்லாம் தன்னிடம் இருக்கிறது என்று நினைத்துவிடக்கூடாது. அதிகாரத்தில் இருப்பவர்கள் அவருடன் நட்பில் இருக்கலாம். அதற்காக தான் நினைத்ததை எல்லாம் சாதித்துவிடலாம் என்ற நினைப்பு அவருக்கு இருக்கக்கூடாது" என்றார்.


Click it and Unblock the Notifications