ஜோதிகாவுக்கு ஜாக்கெட் வாங்கணுமாம்?.. ஓங்கி அறைந்திருப்பாராம்.. சூர்யா பற்றி ஓவராக பேசிய சேகுவேரா

சென்னை: சூர்யாவும், ஜோதிகாவும் கோலிவுட்டின் ஃபேவரைட் ஜோடிகளில் ஒன்றாக வலம் வந்துகொண்டிருக்கிறார்கள். இப்போது இரண்டு பேருமே மும்பையில் தங்கள் குழந்தைகளுடன் செட்டில் ஆகியிருக்கிறார்கள். ஜோதிகாவும் ஹிந்தி சினிமாக்களில் பிஸியாக நடித்துவருகிறார். சூழல் இப்படி இருக்க சமீபகாலமாக இருவர் பற்றியும் ஏகப்பட்ட சர்ச்சைகள் வந்துகொண்டிருக்கின்றன. இந்நிலையில் பத்திரிகையாளர் சேகுவேரா பேசியிருக்கும் விஷயம் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

தமிழ் சினிமாவின் மார்க்கண்டேயன் என்று அழைக்கப்படுபவர் சிவக்குமார். அவரது மகன் சூர்யா இப்போது கோலிவுட்டின் டாப் 5 நடிகர்களில் ஒருவராக இருக்கிறார். ஆரம்பத்தில் பல விமர்சனங்களை சந்தித்த அவர்; தனது திறமையை படிப்படியாக வளர்த்து தனக்கென ரசிகர் பட்டாளத்தை சேர்த்து வைத்திருக்கிறார். முக்கியமாக கமர்ஷியல் ஹீரோ என்பது மட்டும் இல்லாமல் கதைக்கு தேவை என்றால் எப்படி வேண்டுமானாலும் நடிக்கும் நடிகர் என்ற பெயரையும் அவர் பெற்றிருக்கிறார்.

Suriya Jyothika Cheguvera

கங்குவா: அவரது நடிப்பில் படங்கள் வெளியாகி கிட்டத்தட்ட 2 வருடங்கள் ஆகின்றன. இந்தச் சூழலில் அவர் இப்போது கங்குவா படத்தில் நடித்து முடித்திருக்கிறார். சிறுத்தை சிவா இயக்கியிருக்கும் அந்தப் படம் அக்டோபர் 10ஆம் தேதி ரிலீஸாகவிருக்கிறது. ஆனால் அன்றைய நாள் ரஜினி நடித்திருக்கும் வேட்டையன் படமும் ரிலீஸாகவிருப்பதால் அநேகமாக கங்குவாவின் ரிலீஸ் தேதி தள்ளிப்போக வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக திரைத்துறையில் பேச்சுக்கள் எழுந்திருக்கின்றன.

நல்ல பெயர் பெற்ற சூர்யா: இதற்கிடையே அவர் நடிகை ஜோதிகாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு ஒரு மகள், ஒரு மகன் இருக்கிறார்கள். மேலும் அறம் என்ற ஃபவுண்டேஷனை ஆரம்பித்து ஏழை மாணவர்களின் கல்விக்கும் உதவிவருகிறார். இதன் காரணமாகவும் சூர்யாவுக்கு நல்ல பெயர் இருக்கிறது. ஆனால் சமீபகாலமாக அவரை சுற்றி ஏகப்பட்ட சர்ச்சைகள் எழுந்தவண்ணம் இருக்கின்றன.

மும்பையில் செட்டில்: அதாவது ஜோதிகாவின் பேச்சை கேட்டுக்கொண்டு மும்பைக்கு சென்று செட்டிலாகிவிட்டார் போன்ற பல பேச்சுக்கள் எழுந்தன. அதேபோல் ஜோதிகாவும் சிவக்குமாருடன் பேசுவதில்லை; சென்னை வந்தால் வீட்டுக்கு செல்வதில்லை என பலர் சொல்கிறார்கள். ஆனால் அதில் உண்மையில்லை என்று சூர்யாவுக்கு நெருக்கமானவர்கள் சொல்கிறார்கள். மேலும், சமீபத்திய விருது விழா ஒன்றுக்கு கோட் சட்டை அணிந்தபடி சென்றிருந்தார் ஜோதிகா. அந்த உடையை வைத்தும் பலர் அவரை விமர்சித்தார்கள். இவை ஒருபக்கம் இருக்க; 120 கோடி ரூபாய் மதிப்பில் சூர்யா ஜெட் விமானம் வாங்கியிருப்பதாகவும் பேச்சுக்கள் எழுந்தன. இவை அனைத்துக்கும் சூர்யாவும், ஜோதிகாவும் மௌனம் காத்துவருகின்றனர்.

சேகுவேரா பேட்டி: இந்நிலையில் பிரபல பத்திரிகையாளர் சேகுவேரா சமீபத்தில் தனியார் யூட்யூப் சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்தார். அப்போது சூர்யா, ஜோதிகா குறித்து பேசிய அவர், "ஜெட் விமானம் வாங்கி என்ன பயன். சிவக்குமார் மாதிரி சூர்யாவால் சினிமாவில் நல்ல பெயர் வாங்க முடியுமா?. அவரால் வாங்கவே முடியாது. இப்போது சூர்யாவிடம் பல கோடி ரூபாய் பணம் இருக்கிறது. அதனால்தான் இப்படி பெருமைக்கு இதையெல்லாம் செய்கிறார்.

ஜெட் விமானம் முதலில் எதற்கு. முதலில் ஒரு மனைவிக்கு புடவையும், ஜாக்கெட்டும் வாங்கிக்கொடுக்க வேண்டும். ஜோதிகாவுக்கு சூர்யா வாங்கிக்கொடுக்க வேண்டியது பூவையும், புடவையையும், ஜாக்கெட்டையும்தான். சூர்யா நம்ம வீட்டு பையன். அவர் தவறு செய்தால் நாம்தான் கண்டிக்க வேண்டும். நான் மட்டும் சூர்யாவுக்கு அண்ணனாகவோ, தம்பியாகவோ இருந்திருந்தால் பளார் என்று அறைந்திருப்பேன். ஞானவேல் ராஜா ஒரு வியாபாரி. சூர்யாவுக்கு நல்லது கெட்டதையெல்லாம் அவர் சொல்லிக்கொடுக்கமாட்டார்" என்றார். இதனைப் பார்த்த ரசிகர்கள் இவர் என்ன ஓவரா பேசுறார். சூர்யா அவரது மனைவிக்கு இதையெல்லாம் வாங்கிக்கொடுக்க வேண்டும் சொல்வதற்கு சேகுவேரா யார்? அத்துமீறி பேசுகிறாரே என்று காட்டமாக பதிலடி கொடுத்துவருகிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X