திரையுலகில் பலரின் கண்ணீர்.. தனுஷ் விவாகரத்துக்கு அதுதான் காரணமாம்.. ஷாக் கொடுத்த பிரபலம்
சென்னை: தனுஷுக்கும் ஐஸ்வர்யாவுக்கும் சட்டப்பூர்வமாக விவாகரத்து வழங்கியிருக்கிறது நீதிமன்றம். இதன் காரணமாக கிட்டத்தட்ட 20 வருட திருமண பந்தம் முடிவுக்கு வந்திருக்கிறது. அவர்களுக்கு யாத்ரா, லிங்கா என்ற இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். கோலிவுட்டில் ஏ.ஆர்.ரஹ்மான் - சாய்ரா பானு பிரிவுக்கு பிறகு இந்தப் பிரிவு அதிர்ச்சியையும் விவாதத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது. இந்தச் சூழலில் பிரபல பத்திரிகையாளர் சேகுவேரா இந்த விவகாரம் குறித்து பேசியிருக்கிறார்.
தனுஷும் ஐஸ்வர்யாவும் பிரிவதாக சில வருடங்களுக்கு முன்பு அறிவித்தார்கள். அதனையடுத்து அவர்கள் இரண்டு பேரையும் சேர்த்து வைக்க குடும்பத்தினர் எவ்வளவோ முயன்று பார்த்தார்கள் என்று கூறப்பட்டது. ஆனால் இவர்கள் இரண்டு பேரும் சென்னை குடும்பநல நீதிமன்றத்தில் தங்களுக்கு சட்டப்பூர்வமாக விவாகரத்து வேண்டும் என்று மனுத்தாக்கல் செய்தார்கள். தொடர்ந்து இரண்டு விசாரணைகளுக்கு ஆஜராகாத அவர்கள் கடந்த வாரம் மூன்றாவது விசாரணைக்கு ஆஜராகினர்.

சட்டப்பூர்வ விவாகரத்து: இதன் காரணமாக அவர்களுக்கு விவாகரத்து உறுதி என்று கருதப்பட்டது. அதன்படியே சில நாட்களுக்கு முன்பு தனுஷுக்கும், ஐஸ்வர்யாவுக்கும் சட்டப்பூர்வமாக விவாகரத்து வழங்கி உத்தரவிட்டது நீதிமன்றம். இதனால் அவர்கள் எப்படியாவது சேர்துவிடுவார்கள் என்று எதிர்பார்த்திருந்த குடும்பத்தினருக்கும், ரசிகர்களுக்கும் சோகமே மிஞ்சியது. மேலும் இந்த விவாகரத்துக்கு பலரும் பலவிதமான காரணங்களை கூறுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
என்ன கூறுகிறார்கள்?: அதாவது தனுஷின் செயல்பாடுகள் சுத்தமாக சரியில்லை. அதனால்தான் ஐஸ்வர்யா தனுஷைவிட்டு பிரியும் முடிவுக்கு வந்துவிட்டார் என்று ஒருதரப்பினர் சொல்கிறார்கள். அதேபோல் மற்றொரு தரப்பினரோ தனுஷ் குடும்பத்தை ரஜினி குடும்பம் மதிக்கவில்லை என்றும்; கஸ்தூரி ராஜா ரஜினிகாந்த்தின் பெயரை வைத்து கடன் வாங்கிவிட்டார். அது சூப்பர் ஸ்டாருக்கு பிடிக்கவில்லை. அதுதான் இந்த பிரச்னையின் முதல் புள்ளி என்றும் சொல்கிறார்கள்.
இரண்டாவது திருமணம்?: எது எப்படியோ அவர்கள் பிரிந்துவிட்டார்கள்.சூழல் இப்படி இருக்க தனுஷும், ஐஸ்வர்யாவும் இரண்டாவது திருமணம் செய்துகொள்வார்களா என்று அடுத்த பேச்சை ஆரம்பித்திருக்கிறார்கள் சிலர். மேலும் தனுஷுக்கு அவரது உறவுக்கார பெண் ஒருவரை பார்த்து திருமணம் செய்து வைக்க கஸ்தூரி ராஜா முடிவு செய்திருப்பதாகவும்; சில காலம் கழித்து அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை எதிர்பார்க்கலாம் என்றும் திரையுலகில் பேச்சுக்கள் எழுந்திருக்கின்றன.
சேகுவேரா பேட்டி: இந்நிலையில் பிரபல பத்திரிகையாளர் சேகுவேரா தனியார் யூட்யூப் சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்தார். அந்தப் பேட்டியில் இதுகுறித்து பேசிய அவர், “திரையுலகில் நடந்த பல விவாகரத்துகளுக்கு தனுஷ்தான் காரணம் என்று சொல்வார்கள். அந்தப் பலரின் கண்ணீர்தான் இப்போது தனுஷுக்கு விவாகரத்து வாங்கிக்கொடுத்திருப்பதாக என்னிடம் ஒருவர் சொன்னார். அதேபோல் இந்தத் திருமணத்தில் ஆரம்பத்திலிருந்தே லதாவுக்கு பெரிதாக விருப்பமில்லை என்ற பேச்சும் உண்டு” என்றார். முன்னதாக திரையுலகில் யாருக்கு டைவர்ஸ் நடந்தாலும் அதில் தனுஷை இழுத்துவிடுவது ஒரு வழக்கமாகவே மாறியிருப்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











