கவுண்டமணிக்கு சொத்து பிரச்னையா? மனைவி இறக்க காரணம் என்ன?
சென்னை: கவுண்டமணி தமிழ் சினிமாவில் லெஜண்ட் காமெடி நடிகர்களில் ஒருவர். கிட்டத்தட்ட அவர் 500க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார். அவரும், செந்திலும் இணைந்து செய்த காமெடிகள் ஏராளம். செந்திலுடன் மட்டுமின்றி சத்யராஜ், கார்த்திக், பிரபு, சரத்குமார் என பல ஹீரோக்களுடன் இணைந்து நடித்து அதகளம் செய்தவர். அவர் சாந்தி என்பவரை திருமணம் செய்திருந்தார். சூழல் இப்படி இருக்க உடல்நல குறைவால் உயிரிழந்த சாந்திக்கு இன்று இறுதி சடங்கு நடைபெற்றது. இந்நிலையில் கவுண்டமணி, சாந்தி குறித்து பிரபல பத்திரிகையாளர் சேகுவேரா பேசியிருக்கும் விஷயம் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியிருக்கிறது.
உடுமலைப்பேட்டையை சொந்த ஊராக கொண்ட கவுண்டமணியின் இயற்பெயர் சுப்பிரமணியன். நடிப்பு மீது ஆர்வம் கொண்ட அவர் ஒரு நாடக கம்பெனியில் இணைந்தார். அங்கிருந்தபடி சினிமாவுக்கும் அவர் முயற்சி செய்ய பாரதிராஜாவின் 16 வயதினிலே படம் மூலம் அவர் நகைச்சுவை நடிகராக நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தது. டைமிங்கில் கவுண்ட்டர் அடிப்பதால் சுப்பிரமணி கவுண்டமணி ஆனார். முதல் படத்திலேயே அவரது நடிப்பும், டைமிங்கும் ரசிகர்களை கவர ஆரம்பித்தன. 16 வயதினிலே படத்துக்கு முன்னதகாவே அவர் சர்வர் சுந்தரம் உள்ளிட்ட படங்களில் சின்ன சீன்களில் தலை காண்பித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
பீக்குக்கு சென்ற கவுண்டமணி: 16 வயதினிலே படத்துக்கு பிறகு கவுண்டமணிக்கு தொடர்ந்து வாய்ப்புகள் வர ஆரம்பித்தன. அந்த வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக்கொண்ட அவர் தான் நடித்த ஒவ்வொரு கதாபாத்திரத்திலும் ஒரு புதுமையை புகுத்தி அனைவரையும் சிரிக்க வைத்தார். அதுமட்டுமின்றி வெறும் காமெடி மட்டுமின்றி பகுத்தறிவு சிந்தனைகளையும் தன்னுடைய நகைச்சுவை காட்சிகளில் வைத்தார் என்பதும் நினைவுகூரத்தக்கது. இதனாலும் அவருக்கென்று தனி ரசிகர் பட்டாளம் உருவாக ஆரம்பித்தது. இதன் காரணமாக யாராலும் அசைக்க முடியாத இடத்துக்கு கோலிவுட்டில் சென்றார் அவர்.
விமர்சனத்தை சந்தித்த கவுண்டமணி நகைச்சுவை: கவுண்டமணியின் நகைச்சுவை எந்த அளவுக்கு கொண்டாடப்பட்டதோ அதே அளவு விமர்சனத்தையும் சந்தித்தவை. அவர் எல்லோரையும் உருவ கேலி செய்கிறார்; எட்டி உதைக்கிறேன் என்ற பெயரில் வன்முறையை நிகழ்த்துகிறார் சிலர் அவர் மீது விமர்சனத்தை வைப்பதுண்டு. ஆனால் அப்படி செய்தது தவறு என்றால் அவரது காமெடியை மக்கள் ரசித்திருக்கமாட்டார்கள். மக்களின் மனதில் என்ன இருக்கிறதோ அதைத்தான் அவர் திரையில் கொண்டு வந்தார் என அவரது ரசிகர்கள் கூறுவார்கள். எத்தனை விமர்சனங்களை சந்தித்தாலும் கவுண்டமணியின் காமெடியை ரசிப்பதற்கு கூட்டம் இருந்துகொண்டுதான் இருக்கிறது.
யாராக இருந்தாலும் கலாய்தான்: கவுண்டமணி திரையில் மட்டுமில்லை நேரிலுமே யார் என்னவென்று பார்க்காமல் தனது கவுண்ட்டர்களால் அதகளம் செய்துவிடுவார். 'ஏன் ப்பா எல்லோரும் நடிக்க வந்துட்டா யார்தான் படம் பார்க்குறது' என்று சந்தானத்திடம் ஒரு முறை கவுண்ட்டர் அடித்திருக்கிறார் கவுண்டமணி. அதேபோல், 'நாய்க்கு என்ன பெயர் வைப்பது அதுக்கு பேர் நாய்தான்', நடிகர் சங்க பெயர் பற்றிய ஒரு கேள்விக்கு 'நடிகர் சங்கம் என்று வையுங்கள்' என்றது என அவரது ஆஃப் கேமரா கவுண்ட்டர்களும் ரகளையாக இருப்பவை.

ஓபன் டாக்: அதேபோல் கவுண்டமணி எவ்வளவுக்கு எவ்வளவு நகைச்சுவையாக பேசுகிறாரோ அந்த அளவுக்கு ஓபனாகவும் பேசக்கூடியவர். யாருக்கும் எதற்கும் அஞ்சாமல் தனது கருத்தை ஷூட்டிங் ஸ்பாட்டில் வைக்கக்கூடியவர். நக்மாவுடன் நான் பாடலுக்கு நடனம் ஆடியே தீர வேண்டும் என்று முடிவு எடுத்து அதை சாதித்தும் காட்டியவர்.அதேபோல் ஒரு படத்தின் ஷூட்டிங்கில் கமல்ஹாசனை விளையாட்டாக கலாய்த்ததாகவு; இதன் காரணமாக அவருக்கும், கமலுக்கும் முட்டிக்கொண்டதாகவும் ஒரு பேச்சு ஓடிக்கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் அதில் எந்த அளவுக்கு உண்மை இருக்கிறது என்பது தெரியவில்லை.
மனைவி மரணம்: கடைசியாக அவர் ஒத்த ஓட்டு முத்தையா திரைப்படத்தில் நடித்திருந்தார். அந்தப் படம் சரியாக போகவில்லை. அதற்கு பிறகு சில படங்களில் கமிட்டாகியிருப்பதாக கூறப்பட்டாலும் அந்தப் படங்களின் நிலைமை என்ன ஆனதென்று தெரியவில்லை. சூழல் இப்படி இருக்க அவருக்கு சாந்தி என்ற மனைவி இருந்தார். சாந்தியை கவுண்டமணி காதலித்துதான் திருமணம் செய்துகொண்டார். இந்தத் தம்பதிக்கு இரண்டு மகள்கள் இருக்கிறார்கள். சூழல் இப்படி இருக்க சாந்திக்கு கடந்த சில நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் இருந்தது. அதனைத் தொடர்ந்து சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார்.
இடிந்துபோன கவுண்டமணி: சாந்தியின் உயிரிழப்பு கவுண்டமணியை உச்சக்கட்ட சோகத்தில் தள்ளியிருக்கிறது. அவரது உறவினர்கள், நண்பர்கள், உடன் பணியாற்றியவர்கள் என அனைவரும் நேரில் வந்து அவருக்கு ஆறுதல் தெரிவித்தார்கள். இன்று சென்னையில் சாந்தியின் இறுதி சடங்கு நடைபெற்றது. இடிந்த மனதுடனும், கலங்கிய முகத்துடனும் அவர் தனது மனைவிக்கான இறுதி காரியங்களை செய்தார். அதனைப் பார்த்த ரசிகர்கள் எல்லோரையும் சிரிக்க வைத்தவருக்கு இப்படி ஒரு நிலைமையா என்று நொந்துகொண்டார்கள். இந்நிலையில் கவுண்டமணி - சாந்தி குறித்து பத்திரிகையாளர் சேகுவேரா பேசியிருக்கும் விஷயம் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியிருக்கிறது.
சேகுவேரா பேட்டி: தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில், "கவுண்டமணிக்கு கடன் பிரச்னையெல்லாம் இல்லை. எல்லா மனிதர்களுக்கும் எல்லா பிரச்னைகளும் இருக்கின்றன. இயற்கையான வயது மூப்பினால் கவுண்டமணி மனைவி இறந்திருக்கலாம். அவருக்கும், சாந்திக்கும் 18 வயது மூப்பு இருக்கிறது. கவுண்டமணிக்கு பெரிய பின்புலம் எல்லாம் இல்லை. சத்யராஜுக்கு பெரிய பின்புலம் இருந்துமே கஷ்டப்பட்டவர். 70களிலேயே அவர் சினிமாவில் தலை காண்பிக்க ஆரம்பித்துவிட்டார். பிறகு காமெடி கிங் என்ற இடத்துக்கு நகர்ந்துவிட்டார். தங்கவேலுவுக்கு பிறகு கவுண்டமணியைத்தான் நான் ரசிப்பேன். மற்றவர்களின் காமெடியெல்லாம் எனக்கு இரண்டாம் பட்சம்தான். கவுண்டமணியிடம் ஒரு குவாலிட்டி இருக்கிறது. திட்ட வேண்டும் என்றால் நேரடியாக திட்டிவிடுவார்.
கவுண்டமணிக்கு பெரிய இழப்பு: சாந்தி உயிரிழந்தது கவுண்டமணிக்கு பெரிய இழப்புதான் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. சினிமாவிலிருந்து அவர் ஒதுங்கிய பிறகும் எந்த சர்ச்சையிலும் சிக்கவில்லை. அதேபோல் பேட்டியும் கொடுக்கமாட்டார். ரொம்பவே எதார்த்தவாதிதான் கவுண்டமணி. அவருக்கு 85 வயது ஆகிறது. இந்த வயதிலும் அவர் இயல்பாகத்தான் இருக்கிறார். இத்தனை வயது என்பது கொஞ்ச வயது இல்லை. இந்த வயதில் இந்த இழப்பை அவரால் ஏற்றுக்கொள்ள முடியாது. அதேபோல் எந்த வலி வந்தாலும் அதை கடந்து செல்பவர் அவர். அவர் எந்த இடத்திலும் தன்னுடைய குடும்பத்தை அடையாளப்படுத்தியதே கிடையாது. அதனை அவர் விரும்பவும் இல்லை.
சொத்து பிரச்னையா?: அவரது இரண்டு மகள்களுக்கும் திருமணம் முடிந்தது. கவுண்டமணிக்கு ஒரு சொத்து பிரச்னை இருந்ததுதான். அது அவருக்குதான் சாதகமாகவும் முடிந்தது. பண விஷயத்தில் பக்குவமாக அவர் நடந்துகொள்வார். பொருளாதார விஷயத்தில் அவரை யாருமே தவறாக சொல்ல முடியாது" என்றார்.


Click it and Unblock the Notifications











