அம்மாக்களே அட்ஜெஸ்ட்மெண்ட்டுக்கு அனுப்புகிறார்களாம்.. எல்லை மீறிய பத்திரிகையாளர்.. புதுசா சொல்றாரே

சென்னை: சினிமாவில் அட்ஜெஸ்ட்மெண்ட் பிரச்னை காலங்காலமாக இருக்கிறது. இதன் காரணமாகவே பல பெண்களை சினிமா துறையில் விடுவதற்கு வீட்டார்கள் பயப்படுகிறார்கள். அட்ஜெஸ்ட்மெண்ட்டையும் மீறி வென்ற பெண்கள் இருந்தாலும் அந்த அவல நிலை இன்னும் தொடர்ந்துகொண்டிருப்பது கொடுமைதான். இதற்கிடையே அட்ஜெஸ்ட்மெண்ட்டுக்கு வராதவரை தொல்லை செய்து படுக்கைக்கு அழைப்பதும் தொடர்ந்துகொண்டிருக்கிறது. இந்தச் சூழலில் ஹேமா கமிஷன் அறிக்கை வெளியாகி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.

சினிமா என்றாலே ஆணாதிக்கம் நிறைந்தது என்ற கூற்று பல காலமாக உண்டு. அதனை உறுதிப்படுத்தும்படிதான் சினிமாவில் பணிபுரியும் பெரும்பாலான ஆண்கள் இருக்கிறார்கள். பெண் இயக்குநர், பெண் ஒளிப்பதிவாளர் எல்லாம் ரொம்பவே கம்மிதான். நடிப்பில் பெண்கள் அதிக அளவு இருந்தாலும் அவர்களுக்கு உருவாக்கப்படும் பிரச்னை மற்ற பெண்களை திரைத்துறைக்குள் வருவதற்கு அச்சத்தை ஏற்படுத்துகிறது. அப்படி உள்ள பிரச்னைகளில் தலையாய பிரச்னைதான் அட்ஜஸ்ட்மெண்ட். அட்ஜெஸ்ட்மெண்ட்ட்டுக்கு ஒத்துக்கொள்ளாதபட்சத்தில் நடிகைகளை தொந்தரவு செய்வதும் தொடர்ந்துகொண்டிருக்கிறது.

Hema Commission Cheguvera

பிரபல நடிகையிடமே அத்துமீறல்: மலையாள சினிமாவில் முன்னணி நடிகை ஒருவர் சில வருடங்களுக்கு முன்பு ஷூட்டிங்கை முடித்துவிட்டு திரும்பிக்கொண்டிருந்தார். அப்போது அவரை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்தார்கள் சிலர். அந்த விவகாரத்தில் பிரபல நடிகர் திலீப் கைது செய்யப்பட்டார். அதேபோல் சுனி என்பவரும் சைது செய்யப்பட்டார். அந்த விவகாரம் இந்திய திரையுலகில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.


ஹேமா கமிஷன்: இந்த விவகாரத்தை அடுத்து மலையாள திரையுலகில் இருக்கும் பெண்களின் பாதுகாப்பு எப்படி இருக்கிறது ; அவர்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல்கள் குறித்து விசாரிக்க கமிஷன் அமைக்க வேண்டும் என்று மலையாள திரையுலகிலிருந்து சில நடிகைகள் கோரிக்கையை முன் வைத்தார்கள்.அதனை ஏற்றுக்கொண்ட அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் ஓய்வு பெற்ற நீதிபதி ஹேமா தலைமையில் கடந்த 2018ஆம் ஆண்டு ஒரு கமிஷனை அமைத்தார்.

அந்த கமிஷனில் ஹேமா தவிர்த்து நடிகை சாரதா, ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி வல்சலகுமாரி ஆகியோரும் உறுப்பினர்களாக இருந்தனர். அவர்கள் தீவிரமாக விசாரித்து தங்களது அறிக்கையை 2019ஆம் ஆண்டு முதலமைச்சரிடம் சமர்ப்பித்தனர். ஆனால் அந்த அறிக்கையில் என்னவிருந்தது என்பது வெளியிடப்படாமலேயே இருந்தது. அதற்கு காரணம் பலர் தங்களுக்கு தனிப்பட்ட முறையில் நடந்த விஷயங்களை கூறியிருப்பதாக கூறப்பட்டது. அதேசமயம் அந்த விஷயத்தை தவிர்த்து பிற விஷயங்களை வெளியிட வேண்டும் என்று தகவல் உரிமை ஆணையம் தெரிவித்திருந்தது.

தள்ளுபடி செய்த நீதிமன்றம்: ஆனால் ஹேமா கமிஷன் அறிக்கையை வெளியிடவேக்கூடாது என்று தயாரிப்பாளர் ஒருவர் கேரளாவில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிமன்றம் ஒருவரின் தனியுரிமையை பாதிக்காத வண்ணம் அறிக்கையை வெளியிடலாம் என்று தகவல் உரிமை ஆணையம் கூறியிருப்பதை குறிப்பிட்டு வழக்கை தள்ளுபடி செய்தது. இந்தச் சூழலில் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேரளாவை சேர்ந்த 5 பேர் ஹேமா கமிஷன் அறிக்கையை பெற்று வெளியிட்டிருக்கிறார்கள். அதில் பல திடுக்கிடும் தகவல்கள் இடம்பெற்றிருக்கின்றன.

சேகுவேரா பேட்டி: அதாவது காம்ப்ரமைஸ், அட்ஜஸ்ட்மெண்ட் போன்ற வார்த்தைகளை ஆரம்பத்திலிருந்தே கேட்கும் நிலையில்தான் பெண்கள் இருக்கிறார்கள் போன்ற பல விஷயங்கள் இருக்கின்றன. இந்நிலையில் பிரபல பத்திரிகையாளர் சேகுவேரா தனியார் யூட்யூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், “ஹேமா கமிஷன் அறிக்கையில் பல திடுக்கிடும் தகவல்கள் இருக்கின்றன. நடிகைகள் அட்ஜஸ்ட்மெண்ட்டுக்காக நடிகர்களால் வற்புறுத்தப்படுகிறார்கள் போன்றவைகள் இருக்கின்றன. ஆனால் ரிப்போர்ட்டின் ஒரு பக்கத்தை மட்டும் பார்த்துவிட்டு பேசக்கூடாது. அதில் பல அம்சங்கள் இருப்பதாக சொல்கிறார்கள். அது உண்மையா என்று தெரியவில்லை. ஆனால் கிடைத்த தகவல்கள்படி சொல்கிறேன். அம்மாக்களே பெண்களை சினிமா வாய்ப்புக்காக அட்ஜஸ்ட்மெண்ட்டுக்கு அனுப்புவதாக கூறுகிறார்கள்” என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X