GOAT Review - அஜித்துக்கு மங்காத்தா.. விஜய்க்கு GOAT.. வெங்கட் பிரபு சம்பவம்.. பிரபலத்தின் விமர்சனம்

சென்னை: வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிப்பில் GOAT படம் உருவாகியிருக்கிறது. மிகப்பெரிய எதிர்பார்ப்போடு படமானது இன்று வெளியாகியிருக்கிறது. ரசிகர்கள் தியேட்டர்களில் பண்டிகை போல் கொண்டாடி முதல் நாள் முதல் காட்சியை பார்த்து ரசித்திருக்கிறார்கள். இதுவரை பெரும்பாலான இடங்களிலிருந்து படத்துக்கு பாசிட்டிவ் விமர்சனங்களே கிடைத்துவருகின்றனர். சூழல் இப்படி இருக்க பிரபல பத்திரிகையாளரான செய்யாறு பாலு தனது விமர்சனத்தை பகிர்ந்திருக்கிறார்.

விஜய் நடிப்பில் கடைசியாக வெளியான லியோ திரைப்படம் விமர்சன ரீதியாக அடி வாங்கியது. அந்தப் படத்தில் நடித்துகொண்டிருந்தபோதே வெங்கட் பிரபு இயக்கத்தில் GOAT படத்தில் நடிக்க கமிட்டானார் விஜய். ஏஜிஎஸ் நிறுவனம் சார்பில் அர்ச்சனா கல்பாத்தி இந்தப் படத்தை தயாரித்திருக்கிறார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். விஜய்யுடன் பிரபுதேவா, பிரசாந்த், மோகன், ஜெயராம், பிரேம்ஜி, லைலா, சினேகா, மீனாட்சி சௌத்ரி உள்ளிட்ட ஏராளமானோர் நடித்திருக்கிறார்கள்.

goat movie vijay venkat prabhu

இன்று ரிலீஸ்: படமானது இன்று ரிலீஸாகும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. அதன்படி உலகமெங்கும் 5000 ஸ்க்ரீன்களுக்கு அதிகமாக படம் திரையிடப்பட்டது. விஜய் படத்தின் முதல் நாள் முதல் காட்சி என்றாலே அவரது ரசிகர்கள் பண்டிகை மோடுக்கு சென்றுவிடுவார்கள். அதுவும் வெங்கட் பிரபுவுடன் விஜய் முதன்முறையாக இந்தப் படத்தில் கூட்டணி அமைத்திருப்பதால் உச்சக்கட்ட எதிர்பார்ப்போடும், கொண்டாட்டத்துடனும் தியேட்டருக்குள் நுழைந்தார்கள்.

பாசிட்டிவ் விமர்சனம்: முதல் காட்சி 9 மணிக்கு திரையிடப்பட்டது. படத்தின் ஆரம்ப காட்சியிலிருந்து இறுதிக்காட்சிவரை தளபதி ரசிகர்கள் கொண்டாடி தீர்த்துவிட்டனர். விஜய் பேசும் ஒவ்வொரு வசனத்துக்கும் அவர் வரும் ஒவ்வொரு காட்சிக்கும் ரசிகர்கள் விசிலடித்து ஆர்ப்பரித்து தள்ளிவிட்டனர். அதனை பார்த்த பலர் இவ்வளவு வெறித்தனமான ரசிகர்களை விட்டுவிட்டா சினிமாவிலிருந்து விலகப்போகிறார் விஜய் என்று சமூக வலைதளங்களில் கமெண்ட்ஸ் செய்துவருகின்றனர்.

கெஸ்ட் ரோல்ஸ்: இந்தப் படத்தின் ஷூட்டிங் ஆரம்பித்ததிலிருந்தே இரண்டு பிரபலங்கள் இதில் கெஸ்ட் ரோல் செய்திருக்கிறார்கள் என்று பேச்சு ஓடியது. ஆனால் வெங்கட் பிரபுவும், அர்ச்சனா கல்பாத்தியும் ப்ரோமோஷன்களில் பெரும்பாலும் மறைத்தே வைத்திருந்தனர். ஆனால் படத்தில் ஏகப்பட்ட சர்ப்ரைஸ்கள் ரசிகர்களுக்காக வெயிட்டிங். முதல் காட்சியில் அதை பார்த்த ரசிகர்கள் உற்சாகத்தின் உச்சத்துக்கே சென்றிருக்கின்றனர். இதுவரை படத்துக்கு பாசிட்டிவ் விமர்சனமே கிடைத்திருக்கிறது.

செய்யாறு பாலு விமர்சனம்: இந்நிலையில் பிரபல சினிமா பத்திரிகையாளர் செய்யாறு பாலு GOAT படம் பற்றி தனது விமர்சனத்தை வெளியிட்டிருக்கிறார். அதில் பேசிய அவர், "மூன்று மணி நேரம் பயங்கரமாக இந்தப் படத்தை பார்த்து என்ஜாய் செய்யலாம். லாஜிக் எல்லாம் கொஞ்சம் மறந்துவிடுங்கள். படத்தில் சில சர்ப்ரைஸ்கள் இருக்கின்றன. அதனை படம் பார்த்து தெரிந்துகொள்ளுங்கள். விஜய் பின்னி எடுத்திருக்கிறார். முக்கியமாக டீ ஏஜிங் விஜய்யை பார்க்கவே அவ்வளவு நன்றாக இருக்கிறது. நெகட்டிவ் ரோலில் அசத்தி எடுத்துவிட்டார். அவரது எனர்ஜியெல்லாம் இன்னும் குறையவே இல்லை.

விஜய்க்கு GOAT: அதேபோல் ஒளிப்பதிவு, கிராஃபிக்ஸ், ஏஐ தொழில்நுட்பம் என அனைத்துமே நன்றாக இருக்கின்றன. யுவன் ஷங்கர் ராஜாவின் இசையும் அட்டகாசமாக இருக்கிறது. படத்தின் பாடல்களை பெரிய ஸ்க்ரீனில் பார்க்கும்போது சும்மா தெறிக்கிறது. அஜித்துக்கு எப்படி மங்காத்தா படத்தை வெங்கட் பிரபு கொடுத்தாரோ அதேபோன்று விஜய்க்கு GOAT படத்தை கொடுத்திருக்கிறார்" என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X