Ajith And Vijay - துணிவு தந்த உற்சாகம்.. விஜய்யை தூக்குவதற்கு அஜித் போட்டிருக்கும் ஸ்கெட்ச்?

சென்னை: Ajith, Vijay (அஜித், விஜய்) அஜித் நடிக்கவிருக்கும் விடாமுயற்சி குறித்தும் அஜித் அதை வைத்து ஒரு ப்ளான் போட்டிருப்பதாகவும் பத்திரிகையாளர் செய்யாறு பாலு தெரிவித்திருக்கிறார்.

ஹெச்,வினோத் இயக்கத்தில் உருவான துணிவு படம் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது. தமிழ்நாட்டில் விஜய்தான் நம்பர் 1 என்று தில்ராஜு பேசிய சூழலில் வாரிசுக்கு போட்டியாக களமிறங்கி துணிவு வெற்றிப்பெற்றதால் அது அஜித்துக்கு கொஞ்சம் ஸ்பெஷலாகவே இருந்தது. இதனையடுத்து தனது 62ஆவது படத்தில் நடிக்கவிருக்கிறார் அஜித்குமார்.

Journalist Cheyyaru Balu open talk about vidaamuyarchi and thalapathy 68

விடாமுயற்சி: படத்துக்கு விடாமுயற்சி என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. சிறந்த இயக்குநராக இருந்தாலும் இதுவரை பெரிய அங்கீகாரம் கிடைக்காத மகிழ் திருமேனி படத்தை இயக்குகிறார். அஜித்தை வைத்து அவர் இயக்கும் விடாமுயற்சி நிச்சயம் மெகா ஹிட்டாகி மகிழ் திருமேனியை முன்னணி இயக்குநர்கள் வரிசையில் நிறுத்தும் என ஆரூடம் கூறிவருகின்றனர் ரசிகர்கள். படத்தின் ஷூட்டிங் வரும் 22ஆம் தேதி தொடங்கவிருப்பதாக கூறப்படுகிறது.

அஜித்தின் ப்ளான் என்ன?: இந்நிலையில் பத்திரிகையாளர் செய்யாறு பாலு சமீபத்தில் அளித்த பேட்டியில், "அஜித்தின் படங்களுக்கு தொடர்ந்து நல்ல தமிழில் பெயர் வைக்கப்படுகிறது. அந்தவகையில்தான் இதற்கும் விடாமுயற்சி என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. படத்தின் பெயர் ரசிகர்களுக்கு திருப்தி தராவிட்டாலும் அப்டேட்டுகள் வர வர அது சரியாகிவிடும். மகிழ் திருமேனி தமிழ் இலக்கிய ஆர்வலர் மட்டுமின்றி நல்ல ஆங்கில புலமை கொண்டவர்.

Journalist Cheyyaru Balu open talk about vidaamuyarchi and thalapathy 68

விஜய்யை வெல்ல வேண்டும்: சக போட்டியாளரான விஜய்யை வென்றே ஆக வேண்டும் என்ற முடிவுக்கு வந்திருக்கிறார் அஜித்குமார். விஜய்யின் 68ஆவது படத்தின் ஷூட்டிங் ஜூலை மாதம் தொடங்கவிருக்கிறது. எனவே விடாமுயற்சியையும் தளபதி 68 ரிலீஸை கணக்கு வைத்து அதற்கேற்றவாறு முழு பணிகளையும் முடித்து தமிழ் புத்தாண்டுக்கு ரிலீஸாக்க வேண்டும். அப்போது எதிர்முனையில் தளபதி 68 படமும் ரிலீஸாக வேண்டும் என்பது அஜித்தின் விருப்பமாக இருக்கிறது.

என்ன காரணம்?: பொங்கலுக்கு வாரிசும், துணிவும் ஒரே நாளில் ரிலீஸாகின. இதில் வாரிசுதான் வெற்றியடையும் துணிவு படத்தை யாருமே பார்க்கமாட்டார்கள் என்ற பேச்சுதான் ஓடிகொண்டிருந்தது. ஆனால் அந்த பேச்சுக்களை முறியடித்து மற்ற மாநிலங்களில் துணிவு கலெக்‌ஷனை அள்ளியது. அது அஜித்தை உற்சாகமடைய வைத்திருக்கிறது.

அவர் நினைத்திருந்தால் பிப்ரவரியில் ஏகே 62 ஷுட்டிங்கை தொடங்கி இந்த வருட இறுதியில் வெளியிட்டிருக்கலாம். ஆனால் வாரிசோடு மோதிப்பார்த்தது போல் தளபதி 68 படத்தோடு மோதிவிட தயாராகிவிட்டார்" என்றார். எனவே அஜித்தின் ஸ்கெட் அவர் நினைத்தபடி நிச்சயம் நடக்கும் என அஜித் ரசிகர்கள் கூறிவருகின்றனர்

வேர்லட் டூரை முடித்த அஜித்: முன்னதாக அஜித்குமார் தனது முதல் கட்ட வேர்லட் டூரை முடித்து சென்னைக்கு திரும்பியிருக்கிறார். விரைவில் தொடங்கவிருக்கும் ஷூட்டிங்கில் கலந்துகொள்ளவிருக்கும் அவர் தனது போர்ஷனை முடித்துக்கொடுத்துவிட்டு அடுத்தக்கட்ட உலக சுற்றுப்பயணத்தை நவம்பர் மாதத்தில் தொடங்கவிருக்கிறார். அதேபோல், தனது உலக சுற்றுப்பயணத்தை ஆவணப்படமாக வெளியிட அவர் திட்டமிட்டிருப்பதாகவும் கடந்த சில வாரங்களாக தகவல் ஓடிக்கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X