கனகாவின் காதலர் இவர்தான்.. போலீஸில் மாட்டிவிட பார்த்தார்.. செய்யாறு பாலு சொன்ன டாப் சீக்ரெட்

சென்னை: நடிகை கனகா 80களில் முன்னணி நடிகையாக வலம் வந்துகொண்டிருந்தவர். இன்னும் பல வருடங்கள் தொடர்ந்து டாப் இடத்தில் இருப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட சூழலில் திடீரென காணாமல் போனார் கனகா. அதனையடுத்து அவர் என்ன ஆனார் என்றே தெரியவில்லை. இதனையடுத்து நடிகை குட்டி பத்மினி கனகாவை சந்தித்து புகைப்படம் எடுத்துக்கொண்டார். அதனையடுத்து மீண்டும் கனகா குறித்து ரசிகர்கள் அதிகம் பேச ஆரம்பித்தனர். இந்தச் சூழலில் கனகாவின் காதலர் குறித்து பத்திரிகையாளர் செய்யாறு பாலு சில விஷயங்களை பகிர்ந்திருக்கிறார்.

பழம்பெரும் நடிகை தேவிகாவின் மகள் கனகா. இவர் கரகாட்டக்காரன் படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். பெரிய விருப்பம் எதுவும் இல்லாமல்தான் கனகா நடிப்பதற்கு தேவிகா ஒத்துக்கொண்டார். ஆனால் யாரும் எதிர்பார்க்காத விதமாக கரகாட்டக்காரன் படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. இதன் காரணமாக கனகா தமிழ்நாடு முழுவதும் அறியப்பட்டார். தொடர்ந்து பட வாய்ப்புகளும் கிடைத்தன.

Journalist Cheyyaru Balu Open Talks about Kanaga And Her Lover

பிஸியான கனகா: தமிழில் முதல் படம் ஹிட்டான பிறகு ரஜினி உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் நடித்தார் கனகா. அதேபோல் தெலுங்கிலும் பல படங்களில் புக் ஆனார். இதன் காரணமாக நிற்க நேரம் இல்லாமல் ஓடிக்கொண்டிருந்தார் அவர். சூழல் இப்படி இருக்க திடீரென அவர் காணாமல் போனார். ஒருகட்டத்தில் கனகா உயிரோடு இருக்கிறாரா இல்லையா என்பதுகூட ரசிகர்களுக்கு தெரியாமல் இருந்தது.

தனிமைப்படுத்திய கனகா: அவர் ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள அவரது வீட்டில் தன்னைத்தானே தனிமைப்படுத்திக்கொண்டார். யாரையும் சந்திப்பதில்லை, வெளியே வருவதில்லை என்று ஏகப்பட்ட விஷயங்கள் ஓடிக்கொண்டிருந்தன. அதற்கு காரணம் தேவிகாவின் மரணம் ஒன்று என்றும் இன்னொரு காரணம் அவரது தனிப்பட்ட வாழ்க்கையில் நடந்த காதல் தோல்வி என்றும் பேசப்பட்டது. இருந்தாலும் கனகா பத்திரிகையாளர்களையோ சினிமாக்காரர்களையோ சந்திக்கவே இல்லை.

குட்டி பத்மினி என்ட்ரி: இப்படிப்பட்ட சூழலில்தான் இந்த விஷயத்துக்குள் நடிகை குட்டி பத்மினி வந்தார். கனகாவின் வீட்டுக்கு வெளியே நீண்ட நேரம் காத்திருந்து அவரை எப்படியோ சந்தித்துவிட்டார். இரண்டு பேரும் அருகில் இருக்கும் காஃபி ஷாப் ஒன்றுக்கு சென்று நீண்ட நேரம் பேசியிருந்துவிட்டு கலைந்தனர். அப்போது கனகாவுக்கு குட்டி பத்மினி முத்தம் கொடுக்கும்படியான புகைப்படங்கள் இணையத்தில் ட்ரெண்டாகின. அதனையடுத்து குட்டி பத்மினிக்கு கனகா பேட்டி அளிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை.

செய்யாறு பாலு பேட்டி: இந்நிலையில் கனகாவை காதலித்தவர் குறித்து பத்திரிகையாளர் செய்யாறு பாலு சமீபத்தில் அளித்த ஒரு பேட்டியில் பேசியிருக்கிறார். அந்தப் பேட்டியில் பேசிய அவர், "கனகாவின் தாயார் தேவிகாவால் ஒருவர் சினிமாவில் நடிப்பதற்கு வாய்ப்பு பெற்றார். அந்த நபருடைய மகன் பெயர்தான் ராமச்சந்திரன். இவர்தான் கனகாவுக்கு பி.ஏவாக இருந்தார். கனகாவுடன் ஷூட்டிங்கிற்கு செல்வது, கனகா நடிக்கும் படங்களின் கதைகள் கேட்பது, கனகாவின் சம்பள விவகாரம் உள்ளிட்ட அனைத்தையும் நேர்மையாக பார்த்துவந்தார்.

ஒருதலை காதல்: கனகா இவரை மரியாதையாகவே நடத்தினார். அதன் காரணமாக அவர் மீது ராமச்சந்திரனுக்கு ஒருதலை காதல் வந்துவிட்டது. ஆனால் அதனை தவறாக புரிந்துகொண்ட கனகா ராமச்சந்திரனை காவல் நிலையத்தில் பிடித்து கொடுத்துவிடுவேன் என்று கூறி வீட்டை விட்டு வெளியே அனுப்பிவிட்டார். சில வருடங்கள் கழித்து ராமச்சந்திரனும் இறந்துவிட்டார்.

தனிமையில் கனகா: ராமச்சந்திரன் இறந்த பிறகுதான் தன் மீது அவர் எந்த அளவு உண்மையான காதலை வைத்திருந்தார் என்று கனகாவுக்கு புரிந்தது. அதனால் ரொம்பவே மனம் உடைந்து போனார் கனகா. அதற்கு பிறகுதான் எதுவும் வேண்டாம், சினிமாவும் வேண்டாம் என்று எண்ணி தன்னைத்தானே சிறை வைத்துக்கொண்டு தனிமையில் வாழ ஆரம்பித்தார்""என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X