நட்சத்திர தம்பதிகள் விவாகரத்து.. தனுஷ்தான் காரணமா?.. பிரபலம் சொன்ன டாப் சீக்ரெட்

சென்னை: கோலிவுட்டில் சமீப காலமாக நட்சத்திர தம்பதிகளின் விவாகரத்து தலை தூக்கியுள்ளது. தனுஷ் - ஐஸ்வர்யா, ஜிவி பிரகாஷ் - சைந்தவி என நீளும் அந்த லிஸ்ட்டில் ஜெயம் ரவியையும் ஆர்த்தியையும் இப்போது ஒருதரப்பினர் சேர்த்திருக்கின்றனர். அவர்கள் இருவருக்கும் பிரச்னை என்று கடந்த சில நாட்களாகவே ஒரு பேச்சு அடிபட; சம்பந்தப்பட்ட இருவருமே அமைதியாக இருக்கிறார்கள். அதேசமயம் இதற்கெல்லாம் காரணம் தனுஷ்தான் என்று சிலர் கூறுவது அதிர்ச்சியை கிளப்புவதாக இருக்கிறது.

இந்திய அளவில் திறமை வாய்ந்த நடிகர்களில் ஒருவர் தனுஷ். எந்தக் கதாபாத்திரம் கொடுத்தாலும் அசால்ட்டாக சம்பவம் செய்யும் அவர் கடைசியாக கேப்டன் மில்லர் படத்தில் நடித்திருந்தார். அந்தப் படம் சரியாக போகாவிட்டாலும் வழக்கம்போல் தனுஷ் தனது கேரக்டரை மிகச்சிறப்பாக செய்தார். ஆனால் தனுஷ் ரசிகர்களுக்கு சோகம் என்னவென்றால்; போட்டியாக களமிறங்கிய அயலான் திரைப்படத்திடம் கேப்டன் மில்லர் தோற்றதுதான். இருந்தாலும் மில்லரில் விட்டதை அடுத்த படத்தில் அவர் பிடிப்பார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்திருக்கின்றனர்.

Dhanush Cheyyaru Balu Kollywood

ராயன்: நடிப்பு மட்டுமின்றி இயக்கத்திலும் கலக்கும் தனுஷ் தனது 50ஆவது படமான ராயன் படத்தை தானே இயக்கியிருக்கிறார். ஜூலை 26ஆம் தேதி படம் திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது. ஏற்கனவே பவர் பாண்டி படத்தில் ஒரு இயக்குநராக வென்று காட்டிய தனுஷ்; ராயனிலும் அதனை நிரூபிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில் தனுஷுடன் துஷாரா விஜயன், காளிதாஸ் ஜெயராம், சந்தீப் கிஷன், எஸ்.ஜே.சூர்யா, பிரகாஷ் ராஜ், செல்வராகவன் உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருக்கிறார்.

குபேரா, இளையராஜா: இதற்கிடையே ராயன் தவிர்த்து சேகர் கம்முல்லா இயக்கத்தில் குபேரா படத்தில் நடித்துவரும் தனுஷ்; இசைஞானி இளையராஜாவின் வாழ்க்கை வரலாற்று படத்திலும் நடிக்கிறார். அந்தப் படத்தை அருண் மாதேஸ்வரன் இயக்க; கமல் ஹாசன் திரைக்கதை எழுதுகிறார். இப்படி நடிப்பில் படுபிஸியாக வலம் வந்துகொண்டிருக்கும் தனுஷை சுற்றி சமீபகாலமாக ஒரு சர்ச்சையும் சுற்றிக்கொண்டே இருக்கிறது.

என்ன சர்ச்சை: அதாவது கோலிவுட்டில் சமீபகாலமாக நட்சத்திர தம்பதிகளின் விவாகரத்து அதிகரித்திருக்கிறது. தனுஷே கூட தனது மனைவி ஐஸ்வர்யாவை பிரிந்துவிட்டார். அதற்கு அடுத்ததாக ஜிவி பிரகாஷ் - சைந்தவி தம்பதி பிரிந்தது. இப்போது ஜெயம் ரவியும், ஆர்த்தியும் பிரியவிருப்பதாக கிசுகிசுக்கப்படுகிறது. சூழல் இப்படி இருக்க சினிமாவில் யார் விவாகரத்து செய்தாலும் அதற்கு காரணம் தனுஷ்தான் என்று ஒருதரப்பினரால் தொடர்ந்து பேசப்பட்டு வருகிறது. ஏற்கனவே ஏ.எல்.விஜய்யை அமலா பால் பிரிந்ததற்கும் தனுஷ்தான் காரணம் என்று சொல்லப்பட்டது நினைவுகூரத்தக்கது. ஆனால் இந்த குற்றச்சாட்டுக்கெல்லாம் தனுஷ் செவி மடுப்பதில்லை.

செய்யாறு பாலு பேட்டி: இந்நிலையில் பிரபல பத்திரிகையாளர் செய்யாறு பாலு சமீபத்தில் தனியார் யூட்யூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், "தனுஷ் வறுமையின் பிடியிலிருந்து மேலே வந்தவர். தான் விளையாடுவதற்கு கேட்ட கார் சிறு வயதில் கிடைக்கவில்லை என்பதற்காக; தான் வளர்ந்து சம்பாதித்த பிறகு ரோல்ஸ் ராய்ஸ் காரை தனது வீட்டில் நிறுத்தினார். சிவகார்த்திகேயன் என்ற ஹீரோ இன்று இருக்கிறார் என்றால் அதற்கு காரணம் தனுஷ்தான். அதேபோல் ராஜ்கிரணுக்கும் நல்ல கம்பேக் கொடுத்தார்.

பிம்பம் கட்டமைக்கப்படுகிறது: சினிமாவில் யார் விவாகரத்து செய்தாலும் தனுஷ்தான் காரணம் என்று சொல்வதில் எந்தவித நியாயமும் இல்லை. அவர் மீது தவறான ஒரு பிம்பம் தொடர்ந்து கட்டமைக்கப்படுகிறது. இதையெல்லாம் கேட்டு அவரே சிரித்திருப்பார். என்னப்பா குடும்பநல நீதிமன்றத்தை என் வீட்டு வாசலில் வைக்கிறீங்க என்று கூட நினைத்திருப்பார். இவ்வளவு ஒரு நெகட்டிவ்வான இமேஜ் தனுஷ் மீது தொடர்ந்து குத்தப்பட்டாலும்; அதையெல்லாம் தாண்டி அவர் இன்னமும் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருக்க ஒரே காரணம் அவரது திறமை மட்டும்தான்" என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X