வெளியான அந்த வீடியோ.. கதறி அழுத திரிஷா?.. விஜய் சொன்ன வார்த்தை இதுவா?.. பிரபலம் ஓபன் டாக்
சென்னை: விஜய்யும், திரிஷாவும் கோலிவுட்டின் ரீல் ஜோடிகளில் ரசிகர்களுக்கு ஃபேவரைட். இதுவரை ஐந்து படங்களில் சேர்ந்து நடித்திருக்கிறார்கள். சில நாட்களுக்கு முன்பு விஜய்யின் பிறந்தநாளுக்கு திரிஷா ஒரு புகைப்படத்தை பகிர்ந்திருந்தார். அந்த புகைப்படங்களை வைத்து பலரும் பல விதமான வதந்திகளை பரப்பினார்கள். இந்தச் சூழலில் பிரபல பத்திரிகையாளர் செய்யாறு பாலு விஜய் - திரிஷா குறித்து பேசியிருக்கும் வீடியோ ட்ரெண்டாகியுள்ளது.
GOAT படத்தில் நடித்து முடித்திருக்கும் விஜய் இன்னும் ஒரே ஒரு படத்தில் மட்டும் நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது. அந்தப் படத்தை ஹெச்.வினோத் இயக்குவதற்கு வாய்ப்புகள் அதிகம் என்றும்; அதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு மிக விரைவில் வெளியாகலாம் என்று சொல்லப்படுகிறது. அதேசமயம் தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் தனது மனக்கணக்கு பலிக்கவில்லை என்றால் கண்டிப்பாக விஜய் மீண்டும் சினிமாவில் நடிக்க வந்துவிடுவார் என்று ஒருதரப்பினர் ஆணித்தரமாக சொல்கிறார்கள்.

இப்போதே களத்தில்: இருந்தாலும் சட்டப்பேரவைத் தேர்தலில் தன்னுடைய தாக்கத்தை வீரியமாக காட்ட வேண்டும் என்ற முடிவில் இருக்கிறார் விஜய். அதற்காகத்தான் கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருபவர்களை நேரில் சந்தித்தார் விஜய் என்று அரசியல் விமர்சகர்கள் கூறுகிறார்கள். மேலும் சமீபத்தில்கூட மாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்கும் விழாவையும் நடத்தினார் விஜய். இதற்கிடையே கடந்த சில நாட்களாகவே விஜய்யை பற்றி ஒரு வதந்தி சுற்றிக்கொண்டே இருக்கிறது.
விஜய் - திரிஷா: அதாவது கடந்த மாதம் விஜய் தனது பிறந்தநாளை கொண்டாடினார். அதனையொட்டி திரிஷா தானும், விஜய்யும் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்தார். அது பெரும் வதந்திக்கு வழி வகுத்தது. ஆனால் அது விஜய்யின் அரசியல் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு திட்டமிட்டு பரப்பப்படும் அவதூறு என்று விஜய்யின் ரசிகர்கள் தொடர்ந்து கூறிவருகிறார்கள். மேலும் விஜய் அலுவலகம் வாங்கியிருக்கும் அப்பார்ட்மெண்ட்டில்தான் திரிஷாவும் வீடு வாங்கியிருக்கிறார் என்று வதந்தி பரவுகிறது.
செய்யாறு பாலு பேட்டி: இந்நிலையில் தனியார் யூட்யூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்த செய்யாறு பாலு, 'திரிஷாவின் நிச்சயதார்த்தம் நின்றுபோனதற்கு காரணமே விஜய்தான் என்று சொன்னார்கள். ஆனால் அதில் எல்லாம் உண்மை இல்லை. இப்போது விஜய்யுடன், திரிஷாவை இணைத்து பலமாகவே கிசுகிசுக்கிறார்கள். அதற்கெல்லாம் காரணம் விஜய்யின் அரசியல் வருகைதான். அவரது இமேஜை டேமேஜ் செய்துகொண்டிருக்கிறார்கள் என்பது உண்மை.
கதறி அழுத திரிஷா: போக்கிரி படம் விஜய்க்கு மிகப்பெரிய வெற்றி படம். அந்தப் படத்தின் சக்சஸ் மீட்டுக்கு தன்னை அழைப்பார்கள் என்று திரிஷா எதிர்பார்த்திருந்தார். ஆனால் விஜய்யோ அழைக்கவில்லை. இதனால் திரிஷா ரொம்பவே அழுதுவிட்டார். பிறகு அவரது தாய் விஜய்யை தொடர்புகொண்டு, 'ஏன் தம்பி ஆதி படம் ஃப்ளாப் ஆனதுனால எங்களை ஓரங்கட்டுறீங்களா?' என்று கேட்டார். அதற்கு விஜய்யோ அப்படியெல்லாம் இல்லை நாளை மீட் பண்ணலாம் என்று சொல்லிவிட்டார்.
சொன்னபடியே ஒரு ஸ்டார் ஹோட்டலில் மதிய சாப்பாடு விருந்து கொடுத்தார் விஜய். அந்த சமயத்தில்தான் திரிஷா சம்பந்தப்பட்ட வீடியோ ஒன்று வெளியாகியிருந்தது. அந்த விருந்தின்போது திரிஷாவிடமும், அவரது தாயிடமும், 'உங்களை நான் போக்கிரி சக்சஸ் மீட்டுக்கு அழைத்திருந்தால் ஒட்டுமொத்த மீடியாவும் அந்த வீடியோ பற்றித்தான் உங்களிடம் கேட்டிருக்கும். அதனை உங்களால் சமாளிக்க முடியுமா?.. அதனால்தான் கூப்பிடவில்லை. லிஸ்ட்டில் உங்கள் பெயர் இருந்தது. ஆனால் உங்களை அழைக்காததற்கு இதுதான் காரணம்; என கூறினார். இது திரிஷாவை ரொம்பவே கவர்ந்துவிட்டது. இப்போது பரப்பப்படும் வதந்திகளில் உண்மையே இல்லை" என்றார்.


Click it and Unblock the Notifications











