Venkat Prabhu - வெங்கட் பிரபுவுக்கு நடந்த தீண்டாமை?.. அய்யய்யோ இப்படியுமா நடந்திருக்கு.. வெளியான ஷாக் தகவல்
சென்னை: Venkat Prabhu (வெங்கட் பிரபு) இயக்குநர் வெங்கட் பிரபுவுக்கு நிறவெறி கொடுமை நடந்ததாக தகவல் வெளியாகியிருக்கிறது.
கங்கை அமரனின் மூத்த மகன் வெங்கட் பிரபு. நடிகராக வேண்டும் என்ற ஆசையில் இருந்த அவர் சில படங்களில் நடித்தார். ஆனால் அவருக்குள் இருந்த இயக்குநர் விழித்துவிட்டதால் சென்னை 600028 படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். முதல் படம் என்றாலே சீரியஸ் சப்ஜெக்ட்டை தொட்டு தன்னை நிரூபிக்க முயல்பவர்களுக்கு மத்தியில் கிரிக்கெட்டை மையமாக வைத்து ஜாலியான படத்தை கொடுத்து மெகா ஹிட்டாக்கினார்.

அடுத்தடுத்த படங்கள்: முதல் படம் மெகா ஹிட்டான பிறகு அடுத்ததாக சரோஜா படத்தை இயக்கினார். இந்தப் படத்தை த்ரில்லர் ஜானரில் உருவாக்கி இதிலும் தான் கில்லிதான் என்பதை நிரூபித்தார். தொடர்ந்து அவர் இயக்கிய கோவா படம் நன்றாக இருந்தாலும் சரியாக போகவில்லை. அதனையடுத்துதான் அஜித்துடன் இணைந்தார் வெங்கட் பிரபு.
மங்காத்தா: அஜித்தின் 50ஆவது படமாக மங்காத்தாவை இயக்கினார் வெங்கட் பிரபு. படத்தின் திரைக்கதையில் முக்கால்வாசி ஜாலியாக அமைத்துவிட்டு க்ளைமேக்ஸில் யாருமே எதிர்பார்க்காத ட்விஸ்ட்டை வைத்து அட்டகாசமாக சம்பவம் செய்திருந்தார் வெங்கட். இந்த படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஆகி அஜித்தின் கரியரிலும் வெங்கட் பிரபுவின் கரியரிலும் மைல் கல்லாக இருக்கிறது.
தளபதி 68: இதனையடுத்து அவர் இயக்கிய சில படங்கள் சரியாக போகவில்லை. கடைசியாக அவர் கொடுத்த ஹிட் படம் சிம்புவை வைத்து இயக்கிய மாநாடு. டைம் லூப் கான்செப்ட்டை முதன்முறையாக தமிழ் சினிமாவில் தொட்டு தரமான திரைக்கதையுடன் மெகா ஹிட் படமாக மாற்றினார் வெங்கட் பிரபு. தற்போது அவர் விஜய்யை வைத்து தளபதி 68 படத்தை இயக்கிவருகிறார்.
நிறவெறி தீண்டாமை: இந்த சூழலில் வெங்கட் பிரபு மீது நிறவெறி கொடுமை நடந்ததாக கூறப்படுகிறது. அதாவது வெங்கட் பிரபு லண்டனில் படித்தவர். அங்கு செல்வதற்கு முன்பு வெங்கட் பிரபு, நாம் ஒரு இந்தியர். எனவே கண்டிப்பாக வெள்ளைக்காரர்களுக்கு நம்மை பிடிக்கும் என்றுதான் நினைத்துக்கொண்டிருந்தாராம். ஆனால் அங்கு சென்ற சில மாதங்களிலேயே அவருக்கு வேறு விஷயங்கள் புலப்பட்டனவாம்.
அதாவது அங்கிருந்தவர்கள் நீ இந்தியனோ, தாய்லாந்தோ அதெல்லாம் எங்களுக்கு தேவையில்லை. வெள்ளையாக இல்லாத யாராக இருந்தாலும் எங்களை பொறுத்தவரை கறுப்பர்கள்தான் என நிறவெறியை வெங்கட் பிரபு மீது திணித்தார்களாம். இதனை வெங்கட் பிரபுவே ஒரு பேட்டியில் கூறியதாக பத்திரிகையாளர் செய்யாறு பாலு தெரிவித்திருக்கிறார். மேலும் இதனை அடிப்படையாக வைத்துதான் தளபதி 68 கதையும் இருக்கும் எனவும் பாலு பேசியிருக்கிறார்.


Click it and Unblock the Notifications











