ஆட்டோவில் அலைக்கழிப்பு.. 5 கணவர்கள்.. அமலா பால் பற்றி செய்யாறு பாலு சொன்ன டாப் சீக்ரெட்

சென்னை: Amala Paul (அமலா பால்) பத்திரிகையாளர் செய்யாறு பாலு நடிகை அமலா பால் குறித்து பல தகவல்களை பகிர்ந்திருக்கிறார்.

கேரளாவை பூர்வீகமாகக் கொண்ட அமலா பால் நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவர். அவரது தாய் கேரள மாநில காவல் துறையில் பணியாற்றி விருப்ப ஓய்வு கொடுத்தவர். ஆரம்பத்தில் விளம்பர படங்களில் நடிக்க அமலா பாலுக்கு வாய்ப்புகள் கிடைக்க; தொடர்ந்து சினிமாவிலும் அவருக்கான கதவு திறந்தது. அதனை பயன்படுத்தி தொடர்ந்து பல படங்களில் நடித்தார்.

Journalist Cheyyaru Balu Shares about Amala Paul Carreer

வாழ்க்கையை மாற்றிய மைனா: அமலா பால் நடித்த சிந்து சமவெளி படம் மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து பிரபு சாலமன் இயக்கிய மைனாவில் நடித்தார் அமலா பால். படமும், அமலா பாலின் நடிப்பும் பெரிதும் கொண்டாடப்பட தமிழில் வாய்ப்புகள் குவிய தொடங்கின. அதன்படி விஜய்யுடன் தலைவா, தனுஷுடன் வேலையில்லா பட்டதாரி, ஆர்யாவுடன் வேட்டை போன்ற பல படங்களில் நடித்தார்.

திருமணம் டூ பிரிவு: தலைவா படத்தில் நடித்தபோது இயக்குநர் ஏ.எல்.விஜய்யை காதலிக்க தொடங்கிய அவர் பிறகு திருமணம் செய்துகொண்டார். ஆனால் அவர்களது திருமணம் இரண்டே வருடங்களில் முறிந்தது. அதனையடுத்து சினிமாவில் கவனம் செலுத்தி சிங்கிளாக வலம் வந்த அவர் சமீபத்தில்தான் இரண்டாவது திருமணமும் செய்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

செய்யாறு பாலு பேட்டி: இந்நிலையில் அமலா பால் குறித்து பல தகவல்களை செய்யாறு பாலு பகிர்ந்திருக்கிறார். அவர் அளித்த பேட்டி ஒன்றில், “அமலா பால் முதலில் நடித்த படம் வீரசேகரன். அந்தப் படத்தின் ஷூட்டிங் சென்னை ஏவிஎம் ஸ்டூடியோவில் நடந்தது. நானும் அப்போது ஏவிஎம் சென்றிருந்தேன். அப்போது ஹீரோயின் இன்னும் வரவில்லை. கேரளாவிலிருந்து வருகிறார் என்று சொல்லியிருந்தார்கள்.

ஆட்டோவில் அமலா பால்: அனைவரும் ஹீரோயினுக்காக காத்திருந்தார்கள். ஏவிஎம்மில் ஒரு ஆட்டொ ஆடி அசைந்து வந்து நின்றது. முதலில் அமலா பாலின் அம்மா இறங்கியதும் மலையாளம் கலந்த தமிழில், ஏங்க கேரளாவிலிருந்து ஒரு பஸ்ஸை புக் பண்ணீங்க. அவங்க 14 மணி நேரம் ஓட்டுனாங்க; சரி அது இருக்கட்டும் கோயம்பேடிலிருந்து இங்கே வர ஒரு காரைக்கூடவா அனுப்பக்கூடாது என்று கத்தினார். அமலா பால் அமைதியாக நின்றிருந்தார். அவரது கண்கள் அனைவரையும் கவர்ந்தது. அப்போதே அங்கிருந்தவர்கள் இந்தப் பெண் மிகப்பெரிய ரவுண்டு வருவார் என்று கணித்தனர்.

5 கணவர்கள்: அவர்கள் நினைத்தபடியே அமலா பால் பெரிய ரவுண்டு வந்தார். பல கதைகளில் அவர் துணிச்சலாக நடித்தார். அப்படி அவர் நடித்த படம்தான் ஆடை. அதில் ஆடையே இல்லாமல் சில காட்சிகளில் நடித்தார். அந்தக் காட்சி எடுத்தபோது இயக்குநர் ரத்னகுமார் உள்ளிட்ட ஐந்து பேர்தான் ஸ்பாட்டில் இருந்தார்கள். அப்போது அந்த ஐந்து பேரையும் என்னுடைய கணவர்களாக மனதளவில் நினைத்துக்கொண்டுதான் ஆடையில்லாமல் நடித்தேன் என்று அவர் சொல்லியதாகவும் ஒரு தகவல் உண்டு. அந்த அளவுக்கு துணிச்சல்மிக்க பெண் அவர்" என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X