Trisha - டாப் ஹீரோவுடன் சரக்கு போட்டு பிறகு சண்டை போட்ட த்ரிஷா.. பிரபலம் வெளியிட்ட பரபரப்பு தகவல்
சென்னை: Trisha (த்ரிஷா) ஒரு படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் டாப் நடிகருடன் மது குடித்துவிட்டு அதன் பிறகு அவருடனேயே த்ரிஷா சண்டை போட்டதாக பத்திரிகையாளர் செய்யாறு பாலு தெரிவித்திருக்கிறார்.
ஜோடி படத்தில் சிம்ரனுக்கு தோழியாக தலைக்காட்டி பிறகு மௌனம் பேசியதே படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் த்ரிஷா. தொடர்ந்து அவர் நடித்த பல படங்கள் ஹிட்டடிக்க தமிழின் முன்னணி கதாநாயகி என்ற அந்தஸ்தை அவர் பெற்றார். குறிப்பாக 2000ஆம் ஆண்டுக்கு பிறகு பல வருடங்கள் தமிழ் ரசிகர்களின் கனவுக்கன்னியாக மாறியிருந்தார் த்ரிஷா.

டாப் நடிகை ரஜினிகாந்த், கமல் ஹாசன், விஜய், அஜித், சூர்யா, விக்ரம், சிம்பு, தனுஷ், கார்த்தி, ஜெயம் ரவி என தமிழ் சினிமாவில் ஏறத்தாழ அனைத்து முன்னணி ஹீரோக்களுடனும் ஜோடி போட்டு நடித்துவிட்டார். அதிலும் விஜய்க்கும் அவருக்கும் உருவான கெமிஸ்ட்ரி ரசிகர்களை கட்டிப்போட்டது. இருவரும் இணைந்து நடித்த கில்லி, திருப்பாச்சி, ஆதி, குருவி ஆகிய படங்களில் கில்லியும், திருப்பாச்சியும் மெகா ப்ளாக்பஸ்டர் ஆகி கோலிவுட்டின் ஃபேவரைட் ஜோடியாக அவர்களை மாற்றியது.
பல வருடங்கள் கழித்து: விஜய்யும், த்ரிஷாவும் கடைசியாக குருவி படத்தின் இணைந்து நடித்தனர். அதன் பிறகு தற்போது (கிட்டத்தட்ட 13 வருடங்கள்) லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்திருக்கின்றனர். பல வருடங்கள் கழித்து தங்களது ஃபேவரைட் ஜோடியை திரையில் பார்ப்பதற்கு ரசிகர்கள் ஆர்வத்துடன் இருக்கின்றனர். படமானது அக்டோபர் 19ஆம் தேதி ரிலீஸாகவுள்ளது.
சர்ச்சை: த்ரிஷா எவ்வளவு புகழடைந்திருக்கிறாரோ அதே அளவு சர்ச்சையையும் சந்தித்தவர். நடிகை மீரா மிதுன் சொல்லியதாக அண்மையில் ஒரு தகவல் பரவியது. அதில், "த்ரிஷா நடித்த ஒரு படத்தில் சின்ன ரோலில் நான் நடித்துக்கொண்டிருந்தேன். அப்போது அந்த படத்தின் ஹீரோ த்ரிஷாவை தொடக்கூடாத இடத்தில் தொட்டு விளையாடிக்கொண்டிருந்தார். அது த்ரிஷாவுக்கு பிடிக்கவில்லை என்றாலும் பட வாய்ப்பு பறிபோய்விடுமோ என்று அதை சகித்துக்கொண்டிருந்தார்" என குறிப்பிடப்பட்டிருந்தது.
அடுத்த பரபரப்பு: இந்நிலையில் சினிமா பத்திரிகையாளர் செய்யாறு பேசியிருக்கும் விஷயம் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அவர் த்ரிஷா குறித்து பேசுகையில், "நடிகை த்ரிஷாவுக்கு குடிப்பழக்கம் அதிகமாக இருந்தது. ஒரு பெரிய நடிகருடன் படத்தில் நடித்துக்கொண்டிருந்தார். அப்போது ஷூட்டிங் பிரேக்கில் அந்த ஹீரோவும், த்ரிஷாவும் மது குடித்தனர்.
சண்டை: அந்த சமயத்தில் த்ரிஷாவுக்கு மது போதை தலைக்கேறிவிட்டது. அதனையடுத்து கேரவனுக்கு சென்ற த்ரிஷா அந்த நடிகருடன் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டு சண்டை போட்டார். இதுதொடர்பாக பல பத்திரிகைகளில் செய்திகளாக வெளியானது. ஆனால் அதற்கு த்ரிஷாவோ எந்தவிதமான மறுப்பையும் தெரிவிக்கவில்லை" என்றார்.


Click it and Unblock the Notifications











