கீர்த்தி சுரேஷின் ரிவால்வர் ரீட்டா.. அட இந்த பிரபலமே இப்படி விமர்சனம் செஞ்சிருக்காரே.. படம் ஊத்திக்கிச்சோ
சென்னை: நடிகை கீர்த்தி சுரேஷ் நடிப்பில் ஜே.கே.சந்துரு இயக்கத்தில் உருவாகியிருக்கும் ரிவால்வர் ரீட்டா நேற்று திரையரங்குகளில் வெளியானது. தேசிய விருது வென்ற நடிகை என்பதால் இப்படத்தின் மீது எதிர்பார்ப்பு ஓரளவுக்கு இருந்தது. ஆனால் படம் பெரிய ரெஸ்பான்ஸ் எதையும் பெறவில்லை. இந்நிலையில் பிரபல பத்திரிகையாளர் செய்யாறு பாலு தனது விமர்சனத்தை முன்வைத்திருக்கிறர்.
கீர்த்தி சுரேஷுக்கு திருமணம் நடந்த பிறகும் ஒன்றிரண்டு பட வாய்ப்புகள் வருகின்றன. அவரும் ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளை தேர்ந்தெடுத்து நடிக்கிறார். அப்படி அவர் இப்போது ஜே.கே.சந்துரு இயக்கத்தில் ரிவால்வர் ரீட்டா படத்தில் நடித்திருக்கிறார். இதில் அவருடன் ராதிகா சரத்குமார் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். படமானது திரையரங்குகளில் நேற்று வெளியானது. கீர்த்தி நடித்திருப்பதால் ஓரளவு எதிர்பார்ப்புடன் ரசிகர்கள் படம் பார்க்க சென்றார்கள்.
படம் சுமார்தான்: ஆனால் படத்துக்கு பெரிய ரெஸ்பான்ஸ் கிடைக்கவில்லை. படத்தின் திரைக்கதையெல்லாம் படு திராபையாக இருந்ததாகவும்; இரண்டாம் பாதி மட்டும்தான் ஓரளவு தேறும் என்று கூறுகிறார்கள். அதேசமயம் கீர்த்தி, ராதிகாவின் நடிப்புக்கு பாராட்டு கிடைத்துவருகிறது. ரிலீஸான முதல் நாளான நேற்று இந்தியாவில் வெறும் 0.65 கோடி ரூபாய் மட்டும்தான் வசூலித்திருப்பதாக Sacnilk நிறுவனம் தகவல் வெளியிட்டிருக்கிறது. இப்படி விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் படம் பயங்கரமாக அடி வாங்கியிருக்கிறது.

செய்யாறு பாலு விமர்சனம்: இந்நிலையில் பிரபல பத்திரிகையாளர் செய்யாறு பாலு தனது யூடியூப் சேனலில் செய்திருக்கும் விமர்சனத்தில், " ரிவால்வர் ரீட்டா படம் ஓடுது ஓடுது.. நம்மை பாடாய் படுத்துது.. கிரேஸி மோகனின் ட்ராமா போன்று இருக்கிறது. இப்படம் ஆரம்பித்ததிலிருந்து படத்தில் இருப்பவர்கள் எல்லாம் நகைச்சுவை செய்கிறார்கள். ஆனால் ஆடியன்ஸ் வெறுமனமே இருக்கிறார்கள். பயங்கர பில்ட் அப் ஒன்று கொடுக்கிறார்கள். இந்தப் படம் என்னை வேறு இடத்துக்கு கொண்டு போகும் என்று கீர்த்தி சொல்லிக்கொண்டே இருந்தார். ஆனால் ஒன்றும் நடக்கவில்லை. நெல்சன் திலீப்குமார் மாதிரி டார்க் காமெடி ட்ரை செய்திருக்கிறார்கள்.
அவர்கள் இரிட்டேட்: இந்த மாதிரி படங்களில் மூளை கழற்றி வைத்துவிட்டு செல்ல வேண்டும். ஆனால் இதில் பயங்கரமாக லாஜிக் மீறல் செய்திருக்கிறார்கள். முதல் பாதி பஞ்சரான வண்டி மாதிரி ஓடுகிறது. இரண்டாவது பாதியில் காற்று மேலும் இறங்கிவிடுகிறது. படத்தில் ஜான் விஜய் சீரியஸான போலீஸா இல்லை காமெடி போலீஸா என்பதும் விளங்கவில்லை. அஜய் கோஷ் வேறு இடையில் வந்து தெலுங்கில் பேசி இரிட்டேட் செய்கிறார்.
எதுவுமே தெரியவில்லை: இந்தக் கதை எதை நோக்கி போகிறது. எதற்காக இந்தப் படத்தை செய்தார்கள் என்பதும் தெரியவில்லை. இப்படத்துக்கு வேண்டுமென்றே நெகட்டிவ் விமர்சனம் செய்யவில்லை. இதற்கு ஏகப்பட்ட பில்ட அப்புகளை கொடுத்தார்கள். நல்ல படங்களை ஆடியன்ஸ் கொண்டாடத்தான் செய்வார்கள். இப்படம் நமது நேரத்தை வீண்டடித்தததை தாண்டி தியேட்டரில் ஓடும் ஏசி வேறு அவஸ்தை கொடுத்தது. கடைசி பத்து நிமிடங்கள் ஓகே. இடைவேளைக்கு பிறகு இதுதான் முடிவு என்று தெரிந்துவிட்டதால் ஆடியன்ஸ் தேமே என்று அமர்ந்திருக்கிறார்கள்.
டெக்னிக்கலாக ஓகே: கடைசியில்தான் கொஞ்சம் ஆடியன்ஸுக்கு சிரிப்பு வருகிறது. இதை குழந்தைகளுக்கான படமாகக்கூட எடுத்திருக்கலாம். டெக்னிக்கலாக படம் நன்றாக இருக்கிறது. இந்தப் படம் எதற்காக எடுத்தார்கள் என்று தெரியவில்லை. என்ன சொல்ல வருகிறது என்றும் தெரியவில்லை.இதை சீரியஸான கதையாகக்கூட எடுத்திருக்கலாம். சில சீன்கள் எல்லாம் ரொம்ப போர் அடிக்குது" என்றார்.


Click it and Unblock the Notifications











