சினிமாவின் சாபக்கேடு.. வெள்ளிக்கிழமை ராமசாமி..ஜிவி பிரகாஷை கிண்டலடித்த செய்யாறு பாலு!
சென்னை: தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராகவும், நடிகராகவும் வலம் வருபவர் ஜிவி பிரகாஷ். இவர் நடிப்பில் ரேபேல், கள்வன் என வாரா வாரம் ஒரு திரைப்படம் வெளியாகி வருகிறது. ஆனால், ஒரு படமும் வெற்றிப்பெறாத நிலையில், சினிமா பத்திரிக்கையாளர் செய்யாறு பாலு அளித்துள்ள பேட்டியில், ஜிவி பிரகாஷை பங்கமாக கிண்டலடித்துள்ளார்.
வெயில் படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகி, பல படங்களுக்கு இசையமைத்து, தனது இசைக்கென தனி ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கிய ஜிவி பிரகாஷ், கிரீடம், பொல்லாதவன், குசேலன், ஆனந்த தாண்டவம், அங்காடி தெரு, ஆயிரத்தில் ஒருவன், மதராசப்பட்டினம், மயக்கம் என்ன, தலைவா, ராஜா ராணி உள்ளிட்ட பல படங்களுக்கு இசையமைத்தார்.

நடிப்பில் கவனம் செலுத்த தொடங்கிய ஜி.வி பிரகாஷ், த்ரிஷா இல்லன்னா நயன்தாரா படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். தொடர்ந்து பென்சில், கடவுள் இருக்கான் குமாரு, நாச்சியார், டார்லிங், சிவப்பு மஞ்சள் பச்சை உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.
செய்யாறு பாலு பேட்டி: இந்நிலையில், சினிமா பத்திரிக்கையாளரான செய்யாறு பாலு, அளித்துள்ள பேட்டி ஒன்றில், மஞ்சும்மல் பாய்ஸ், பிரேமலு, ஆடுஜீவிதம் போன்ற மலையாளப்படங்கள் தமிழ் சினிமாவில் சக்கைப்போடு போட்டு வருகின்றன. அதற்கு காரணம் ஜனவரியில் இருந்து தற்போது வரை வந்த எந்த படமும் ஓடவில்லை. அண்மையில் வெளியான ஹாட் ஸ்பாட் திரைப்படத்தின் டிரைலரே படு மோசமாக இருந்தது.
அந்த டிரைலரை பார்த்து தியேட்டருக்கு யாருமே போகல, அதற்கு பின் இயக்குநர் பத்திரிக்கையாளர்களை சந்தித்து, படத்தில் நல்ல கதை இருக்கிறது. குடும்பத்தோடு தியேட்டருக்கு வந்து பாருங்க என்று சொல்கிறார். ஏ படத்தை யார் குடும்பத்தோடு பாப்பாங்க. 190 ரூபாய் கொடுத்து படம் பார்க்க வருகிறோம். படத்தை எடுப்பதில் ஒரு நியாயம் வேண்டாமா.
வெள்ளக்கிழமை ராமசாமி: அதே போல ஜிவி பிரகாஷின் கள்வன் படம் வெளியாகி இருக்கு, அந்த படத்தின் ஹீரோவிற்கு வெள்ளிக்கிழமை ராமசாமினு அடைமொழியே வைக்கலாம். ரேபல், கள்வன், டியர் என்று தொடர்ந்து ஜிவி பிரகாஷ் நடித்த படம் வெளியாகிட்டு இருக்கு. ஆனால், எந்த படமும் ஓடாத போது எதை நம்பி தயாரிப்பாளர் பணத்தை போடுகிறார் என்று தான் தெரியவில்லை. ஆனால், மலையாளத் திரைப்படம் தமிழ்நாட்டில் ஓடும் போது மட்டும் ஏன் வயிற்றில் வாயில் அடித்துக்கொள்கிறீர்கள். மொழியே தெரியவில்லை என்றாலும் படம் நன்றாக இருந்தால் பார்ப்போம் என்பதை தமிழ் ரசிகர்கள் நிரூபித்து இருக்கிறார்கள்.
சினிமாவின் சாபக்கேடு: அது போன்ற படங்களை எடுக்காமல் ஜிவி பிரகாஷை வைத்து படம் எடுத்தால் யார் தியேட்டருக்கு வருவார்கள். ஒரு முறையாவது படத்தில் தலைகாட்டிவிட மாட்டோமா என பல திறமையான ஜூனியர் நடிகர்கள் இருக்கிறார்கள். ஆனால், அவர்களை தமிழ் சினிமா மதிப்பது இல்லை. இரண்டு வெற்றிப்படத்தை கொடுத்துவிட்டால் போதும், அவருக்கு கதை சொல்ல 10 இயக்குநர்கள் அமர்ந்து இருப்பார்கள் இதுதான் தமிழ் சினிமாவின் சாபக்கேடு, இது தான் தமிழ் சினிமா நாசமா போகக் காரணம் என்று பத்திரிக்கையாளர் செய்யாறு பாலு பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











