Rashmika Mandanna - ராஷ்மிகா மந்தனாவை பாடாய் படுத்திய இயக்குநர்.. செய்யாறு பாலு ஓபன் டாக்
சென்னை: Rashmika Mandanna (ராஷ்மிகா மந்தனா) அனிமல் படத்தில் நடிகை ராஷ்மிகா மந்தனாவை இயக்குநர் பாடாய் படுத்திவிட்டார் என்று செய்யாறு பாலு தெரிவித்திருக்கிறார்.
இயக்குநர் சந்தீப் ரெட்டி வங்கா தனது முதல் படமாக அர்ஜுன் ரெட்டி படத்தை இயக்கினார். இந்தப் படத்தில் விஜய் தேவரகொண்டா நடித்திருந்தார். கடந்த 2017ஆம் ஆண்டு வெளியான இந்தப் படம் இளைஞர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. அதுமட்டுமின்றி விஜய் தேவரகொண்டாவுக்கு பல பெண் ரசிகைகளையும் பெற்றுக்கொடுத்தது. மேலும், தமிழில் ஆதித்ய வர்மா எனவும், ஹிந்தியில் கபிர் சிங் என்ற பெயரிலும் ரீமேக்கானது குறிப்பிடத்தக்கது.

ஹிந்தியில் சந்தீப்: சந்தீப் ரெட்டி இப்போது ஹிந்தியில் ரன்பீர் கபூரை வைத்து அனிமல் என்ற படத்தை இயக்கியிருக்கிறார். இதில் அனில் கபூர், ராஷ்மிகா மந்தனா உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர். குல்ஷன்குமார் மற்றும் டி - சீரிஸ் நிறுவனமும், முராத் கெடானியின் சினி 1 ஸ்டூடியோஸ் மற்றும் பிரனாய் ரெட்டி வான்காவின் பத்ரகாளி பிக்சர்ஸ் நிறுவனம் இணைந்து இப்படத்தை தயாரித்திருக்கின்றனர்.
பான் இந்தியா படம்: அனிமல் படமானது பான் இந்தியா படமாக சமீபத்தில் வெளியானது. ராஷ்மிகா மந்தனாவும் இப்போது நேஷனல் க்ரஷ்ஷாக மாறியிருக்கிறார். அவர் இந்தப் படத்தில் கீதாஞ்சலி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். தெலுங்கில் முன்னணி ஹீரோயினாக இருக்கும் ராஷ்மிகா மந்தனா இந்தப் படத்தின் மூலம் ஹிந்தியிலும் முன்னணி ஹீரோயினாக வலம் வருவார் என்ற நம்பிக்கையில் அவரது ரசிகர்கள் இருந்தார்கள்.
கலவையான விமர்சனம்: படத்தை பார்த்த ரசிகர்கள் கலவையான விமர்சனத்தையே கொடுத்திருக்கின்றனர். மேலும் அளவுக்கதிகமாக இருக்கும் வன்முறை காட்சிகள் முகம் சுளிக்கும்படி இருப்பதாகவும்; முத்த காட்சிக்கும், படுக்கையறை காட்சிக்கும் படத்தில் பஞ்சமில்லை என்றும் கூறுகின்றனர். விமர்சன ரீதியாக பின்னடைவை சந்தித்தாலும் வசூல் ரீதியாக டீசண்ட்டான வரவேற்பையே படம் பெற்றிருக்கிறது.
செய்யாறு பாலு பேட்டி: இந்நிலையில் அனிமல் படத்தில் நடிகை ராஷ்மிகா மந்தனாவை இயக்குநர் சந்தீப் பாடாய் படுத்திவிட்டதாக பத்திரிகையாளர் செய்யாறு பாலு தெரிவித்திருக்கிறார். அவர் அளித்திருந்த ஒரு பேட்டியில், "அனிமல் படத்தின் இயக்குநர் சந்தீப் ரெட்டி வங்கா ஒரு சைக்கோ இயக்குநர். அதனால்தான் படத்தையும் சைக்கோத்தனமாக எடுத்து வைத்திருக்கிறார்.
ரன்பீர் மற்றும் ராஷ்மிகா இடையே அதிகப்படியான ஆபாச காட்சிகள் இருக்கின்றன. அந்தக் காட்சிகளில் நடிக்க வைப்பதற்காக இரவு பகலாக இயக்குநர் ராஷ்மிகா மந்தனாவை தொல்லை செய்து பாடாய் படுத்தி படத்தை எடுத்திருக்கிறார். இதனால் இனிமேல் சந்தீப் ரெட்டியின் இயக்கத்தில் நடிக்கக்கூடாது என ராஷ்மிகா முடிவெடுத்துவிட்டார்" என்றார்.


Click it and Unblock the Notifications











