Bonda Mani -விரட்டிவிட்ட விவேக்..போண்டா மணியின் நெஞ்சில் மிதித்த வடிவேலு..இவ்வளவு பெரிய விஷயம் நடந்துருக்கா?

சென்னை: போண்டா மணி (Bonda Mani) நேற்று தனது வீட்டில் மயங்கி விழுந்தார். அதன் பிறகு மருத்துவமனையில் அவரை குடும்பத்தார் அனுமதித்தனர். ஆனால் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவிக்க அவரது குடும்பம் மட்டுமின்றி திரையுலகும் சோகத்தில் இருக்கிறது. இந்த சூழலில் அவர் வாழ்வில் நடந்த ஒரு சோகமான விஷயத்தை பார்க்கலாம்..

பாக்யராஜ் இயக்கிய பவுனு பவுனுதான் படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் போண்டா மணி. இலங்கையில் மிகப்பெரிய பணக்கார குடும்பத்தில் பிறந்த அவர் அங்கு நடந்த போர் சூழல் காரணமாக அகதியாக தமிழ்நாட்டுக்கு வந்தவர். இங்கு வந்து எப்படியோ பாக்யராஜின் தொடர்பு கிடைத்து சினிமாவில் அறிமுகமாகிவிட்டார். தொடர்ந்து போண்டா சாப்பிட்டதால் அவருக்கு போண்டா மணி என்று பெயர் வந்ததாக கூறுவதுண்டு.

Journalist Cheyyaru Balu Talks about Bonda Mani And Vadivelu

வடிவேலு காம்போ: பவுனு பவுனுதான் படத்துக்கு பிறகு தொடர்ந்து பல படங்களில் நடித்துவந்த போண்டா மணிக்கு வடிவேலுவுடன் இணையும் வாய்ப்பு கிடைத்தது. வடிவேலு ஆரம்பத்தில் போண்டா மணியை தன்னுடன் சேர்த்துக்கொள்ள தயங்கினாலும் விவேக் செய்த பரிந்துரையின் அடிப்படையில் சேர்த்துக்கொண்டார். இருவரும் சேர்ந்து நடித்த காமெடி காட்சிகள் மெகா ஹிட்டடித்தன.

உடல்நலக்குறைவு: ஒருகட்டத்தில் போண்டா மணிக்கு இரண்டு சிறுநீரகங்களும் செயல் இழந்தன. இதனால் அவர் மருத்துவமனையில் டயாலிஸிஸ் செய்துகொண்டார். தான் உடல்நிலை சரியில்லாதபோது தனக்கு வடிவேலு உதவி செய்ய வேண்டும் என ஓபனாகவே கேட்டார் மணி. ஆனால் வடிவேலு செய்யவில்லை. மாறாக விஜய் சேதுபதி, பார்த்திபன் உள்ளிட்டோர் அவருக்கு உதவி செய்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

உயிரிழப்பு: டயாலிஸிஸ் செய்துகொண்ட பிறகு வாடகை கட்டவே வழியில்லாமல் வறுமையில் தவித்து வந்த போண்டா மணி தனது வீட்டில் மயங்கி விழுந்து உயிரிழந்தார். அவரது உயிரிழப்பு அனைவரிடமும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. சிங்கமுத்து உள்ளிட்டோர் எல்லாம் போண்டா மணி மறைவுக்கு நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர். ஆனால் வடிவேலுவோ எட்டிக்கூட பார்க்கவில்லை என்பது பலரிடம் கண்டனத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

செய்யாறு பாலு பேட்டி: இந்நிலையில் பிரபல பத்திரிகையாளரான செய்யாறு பாலு போண்டா மணி - வடிவேலு குறித்து ஒரு பேட்டியில் பேசியிருக்கிறார். தனியார் யூட்யூப் சேனல் ஒன்றிடம் பேசிய அவர், "இலங்கையிலிருந்து அகதியாக வந்தவர்தான் போண்டா மணி. பவுனு பவுனுதான் படத்தில் நடித்த பிறகு அவருக்கான சினிமா நண்பர்கள் வட்டம் பெரிதானது. அப்போதுதான் விவேக்கின் கண்ணில் அவர் பட்டார்.

வடிவேலுவிடம் ரெக்கமெண்ட்: அதனையடுத்து வடிவேலுவிடம் போண்டா மணியை சேர்த்துக்கொள்ளும்படி ரெக்கமெண்ட் செய்தார். வடிவேலுவும் விவேக் சொன்னதற்காக மணியை தனது கேங்கில் சேர்த்துக்கொண்டார். இருவரும் நடித்த காமெடியும் ஹிட்டடித்தது. அந்த சமயத்தில் விவேக்கை பார்க்க அவரது வீட்டுக்கு போண்டா மணி சென்றார். ஆனால் விவேக் சந்திக்கவில்லை.

விரட்டிவிட்ட விவேக்: வாசலிலேயே போண்டா மணியை நிறுத்திய விவேக்; இனி என்னை பார்க்க வராதே அவ்வளவுதான் சொல்லிட்டேன் என சொல்ல; போண்டா மணியோ ஏன் சார் இப்படி சொல்றீங்க என கேட்டார். அதற்கு விவேக்கோ உன் நல்லதுக்குத்தான் சொல்றேன். வடிவேலுவுக்கும் உனக்கும் செட் ஆகிடுச்சு. அங்கேயே இருந்து பொழச்சுக்கோ. இனி என்னோட சேர்ந்து நடிச்சனா நீ என்னுடைய ஆள்னு உன்னை வடிவேலு சேர்த்துக்கமாட்டார். அவர்தான் என்னைவிட நிறைய படங்கள் பண்ணிக்கொண்டிருப்பதாக சொன்னார்.

மிதித்த வடிவேலு: அதன் பிறகு வடிவேலுவுடன் பயணப்பட்டார். ஒருமுறை புதுச்சேரிக்கு சென்றிருந்த போண்டா மணியிடம் சிங்கமுத்து - வடிவேலு பிரச்னை குறித்து செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு, இரண்டு பேரும் சேர்ந்து பணியாற்ற வேண்டும் என மணி சொல்லிவிட்டார். அதனையடுத்து போண்டா மணிக்கு ஃபோன் செய்து வடிவேலு சகட்டுமேனிக்கு திட்டினார்.

இதனால் பயந்துபோன போண்டா மணி, மறுநாள் அதிகாலையே வடிவேலுவின் வீட்டுக்கு சென்று வாசலில் காத்திருந்தார். காலை 10 மணிக்கு எழுந்து வெளியே வந்த வடிவேலுவின் காலை பிடித்து அண்ணே தெரியாம பேசிட்டேன் என கதறினார் போண்டா மணி. ஆனால் வடிவேலுவோ அந்த போண்டா மணியின் நெஞ்சிலேயே மிதி மிதி என்று மிதித்தார். வடிவேலுக்கு ஒரு அரக்க குணம் இருக்கிறது""என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X