ரஜினி நிம்மதி.. விரைவில் விசேஷம்.. தனுஷும் ஐஸ்வர்யாவும் சேரப்போவது இப்படித்தான்.. பிரபலம் சொன்ன சீக்ரெட்
சென்னை: தனுஷும், ஐஸ்வர்யாவும் கடந்த சில வருடங்களாக பிரிந்து வாழ்ந்துவருகிறார்கள். ஆனால் ரஜினிக்காகவும், தங்களது மகன்களுக்காகவும் அவர்கள் தங்களது பிரிவு முடிவிலிருந்து பின் வாங்கியிருப்பதாகவும் விரைவில் அவர்கள் இணைதல் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் அவர்களின் சமீபத்திய செயல்பாடுகளும் அதற்கான சமிக்ஞைகளை கொடுத்திருக்கிறது. இந்தச் சூழலில் பிரபல பத்திரிகையாளர் செய்யாறு பாலுவும் சில விஷயங்களை பேசியிருக்கிறார்.
தனுஷும், ஐஸ்வர்யாவும் தாங்கள் தனித்தனி பாதையில் பயணப்படப்போகிறோம் என்று சில வருடங்களுக்கு முன்பு அறிவித்தபோது ஒட்டுமொத்த தமிழ் சினிமாவும் அதிர்ச்சியடைந்தது. ஏனெனில் அவர்கள் அந்த அறிவிப்பை வெளியிட்டபோது கிட்டத்தட்ட அவர்களுக்கு திருமணமாகி 15 வருடங்களுக்கும் மேல் இருக்கும். அதுமட்டுமின்றி அவர்களுக்கு யாத்ரா, லிங்கா என்ற இரண்டு மகன்களும் இருக்கிறார்கள். நிலைமை இப்படி இருக்க ஏன் அவர்கள் பிரிய வேண்டும் என்ற கேள்வி பலரிடம் எழுந்தது.

யார் காரணம்?: அவர்களின் பிரிவை அடுத்து ஒருதரப்பினர் தனுஷ் மீதும், மறுதரப்பினர் ஐஸ்வர்யா மீதும் குற்றச்சாட்டுக்களை முன்வைத்தார்கள். முக்கியமாக தனுஷுக்கு பிற நடிகைகளுடன் தொடர்பு; ஐஸ்வர்யாவுக்கு ஒரு உதவி இயக்குநருடன் காதல். அதனால்தான் இந்த பிரிவு என்றெல்லாம் இஷ்டத்துக்கு பேசினார்கள். ஆனால் இரண்டு பேருமே அதுகுறித்து எந்த விளக்கமும் கொடுக்கவில்லை. இதற்கிடையே அவர்களை சேர்த்து வைக்க இருவீட்டாரும் கடுமையாக முயற்சி செய்தார்கள்.
நோ க்ரீன் சிக்னல்: ரஜினிகாந்த், கஸ்தூரி ராஜா, செல்வராகவன் என பலரும் இரண்டு பேரிடமும் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும்; ஆனால் தாங்கள் பிரிவது உறுதி என்று இருவரும் கூறிவிட்டதாகவும் சொல்லப்பட்டது. அதுமட்டுமின்றி தங்களுக்கு சட்டப்பூர்வமாக விவாகரத்து வழங்க வேண்டுமென்று இரண்டு பேருமே சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மனுத்தாக்கலும் செய்தார்கள். அதனால் இருவரும் பிரிவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டதாக கோலிவுட்டில் பேச்சு எழுந்தது.
க்ரீன் சிக்னல்: நிலைமை இப்படி இருக்க சமீபத்தில் ரஜினிக்கு உடல்நிலை சரியில்லாமல் போனது. உடனே ஐஸ்வர்யாவை அழைத்த லதா அப்பா நீங்கள் இரண்டு பேரும் சேர வேண்டுமென கோரிக்கை வைத்ததாகவும்; அதற்கு பிறகு இருவரும் சேர்வதற்கு முடிவு செய்துவிட்டதாகவும் தெரிகிறது. அதனால்தான் மூன்று முறை விவாகரத்து மனு விசாரணைக்கு இரண்டு பேருமே ஆஜராகவில்லை என்றும் ஒரு பேச்சு உண்டு. அதுமட்டுமின்றி சமீபத்திய தீபாவளி பண்டிகையை ரஜினி வீட்டில் தனுஷ் தனது மனைவி ஐஸ்வர்யாவுடன் இணைந்து கொண்டாடியதாகவும்; இரண்டு பேரும் அப்போது மனம் விட்டு பேசியதாகவும் கூறுகிறார்கள் விவரமறிந்தவர்கள்.
செய்யாறு பாலு பேட்டி: இந்நிலையில் பிரபல பத்திரிகையாளர் செய்யாறு பாலு அவரது யூட்யூப் சேனலில் பேசுகையில், "பிரபலங்களின் விவாகரத்தை ஏன் இவ்வளவு தூரம் பேசுகிறீர்கள் என்று கேட்கிறார்கள். அதற்கு ஒரே காரணம் அவர்களை கோடிக்கணக்கானோர் பின் தொடர்கிறார்கள். அவர்களைப் பொறுத்தவரை தங்களது தலைவரே இப்படி செய்துவிட்டாரே நாமும் செய்தால் என்ன என்ற எண்ணம் தோன்றிவிடும். அதனால்தான் அவர்களின் விவாகரத்தை இவ்வளவு பேசுகிறோம்.
ரஜினிக்கு தேவை நிம்மதி: ரஜினி மிகப்பெரிய சூப்பர் ஸ்டார். அவருக்கு தேவை நிம்மதிதான். அவரே அதை சொல்லியிருக்கிறார். இப்போது தனுஷும், ஐஸ்வர்யாவும் இணையப்போகிறார்கள் என்று கூறப்படுகிறது. அது ரஜினிக்கு நிம்மதியை கொடுக்கும். தனுஷும் ஐஸ்வர்யாவும் சேர்ந்திருந்தபோது ஆழ்வார்பேட்டையில் இருக்கும் வீனஸ் காலனியில் ஒரு வீடு வாங்கினார்கள். அந்த வீட்டில் கூடிய விரைவில் பால் காய்ச்சி இரண்டு பேரும் தங்களது வாழ்க்கையை மீண்டும் தொடங்கவிருக்கிறார்கள்" என்றார்.


Click it and Unblock the Notifications











