சமந்தாவை தூக்கி போட்டாரு.. படங்கள் ஓடாது.. நாக சைதன்யாவை வெளுத்தெடுத்த பிரபலம்

சென்னை: நடிகை சோபிதா துலிபாலாவை காதலித்து இரண்டாவது திருமணம் செய்துகொண்டார் நாக சைதன்யா. இதற்கிடையே சமந்தாவிடமிருந்து விவாகரத்தும் பெற்றார் அவர். சமந்தாவை நாக சைதன்யா பிரிந்தது விரும்பத்தகாத விஷயம் என்று பலரும் அவரை விமர்சித்துவருகின்றனர். சூழல் இப்படி இருக்க பிரபல பத்திரிகையாளர் செய்யாறு பாலு கொடுத்த ஒரு பேட்டியில் நாக சைதன்யாவை விட்டு விளாசியிருக்கிறார். அந்தப் பேட்டி இப்போது சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியிருக்கிறது.

நாகார்ஜுனாவின் மகனும் நடிகருமான நாக சைதன்யா விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் தெலுங்கு ரீமேக்கில் சமந்தாவுக்கு ஜோடியாக நடித்தார். அந்தப் படத்தின்போது இரண்டு பேருக்கும் ஏற்பட்ட பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. அந்தக் காதலுக்கு வீட்டு சம்மதம் கிடைத்ததை அடுத்து இரண்டு பேரும் கடந்த 2017ஆம் ஆண்டு கோவாவில் வைத்து திருமணம் செய்துகொண்டார்கள். இரண்டு பேருக்கும் ஹிந்து முறைப்படியும், கிறிஸ்தவ முறைப்படியும் திருமணம் நடைபெற்றது.

samantha naga chaitanya cheyyaru balu


இணைந்த மனம்; பிரிந்த உறவு: திருமணத்துக்கு பிறகு இரண்டு பேரும் உச்சக்கட்ட காதலோடு இணைந்து தங்களது வாழ்க்கையை நகர்த்தினார்கள். திருமணத்துக்கு பின்பும் சமந்தா நடிப்பதற்கு தனது முழு ஆதரவை கொடுத்தார் நாக சைதன்யா. சூழல் இப்படி இருக்க சில வருடங்களுக்கு முன்பு அவர்கள் தங்கள் சமூக வலைதள பக்கத்தில் ஒரு அறிவிப்பை வெளியிட்டு; தாங்கள் இரண்டு பிரிந்து வாழ முடிவெடுத்திருப்பதாக கூறினார்கள். அது உச்சக்கட்ட அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

என்ன காரணம்?: அதற்கு காரணம் சமந்தா சினிமாவில் தொடர்ந்து நடித்ததுதான் என்று பலரும் சொன்னார்கள். ஆனால் அது உண்மை இல்லை சமந்தாவுக்கு வந்த மையோசிடிஸ் நோய்தான் காரணம் என்று ஒருதரப்பினர் கூறினார்கள். ஆனால் தங்களது பிரிவுக்கு சைதன்யாவோ, சமந்தாவோ தெளிவான காரணத்தை ஓபனாக சொல்லவில்லை. பிரிவுக்கு பிறகு சமந்தா மையோசிடிஸ் நோய்க்கு சிகிச்சை எடுத்துக்கொண்டு மீண்டும் படங்களில் பிஸியாக நடிக்க ஆரம்பித்திருக்கிறார்.

மீண்டும் திருமணம்: சூழல் இப்படி இருக்க நாக சைதன்யாவும், சோபிதா துலிபாலாவும் காதலித்தார்கள். இவர்களின் காதலுக்கும் நாகார்ஜுனா தரப்பு க்ரீன் சிக்னல் காட்டியதை அடுத்து இவர்களின் திருமணம் சில வாரங்களுக்கு முன்பு ஹைதராபாத்தில் பிரமாண்டமாக நடைபெற்றது. நாக சைதன்யா திருமணம் செய்துகொண்டாலும் சமந்தா இன்றுவரை சிங்கிளாகவே இருக்கிறார். இருப்பினும் அவருக்கு அடுத்த வருடம் திருமணம் நடக்க வாய்ப்புகள் இருப்பதாக ஒரு கருத்து பரவலாக சமீபத்தில் எழ ஆரம்பித்திருக்கிறது.

செய்யாறு பாலு பேட்டி: இந்நிலையில் பிரபல பத்திரிகையாளர் செய்யாறு பாலு நாக சைதன்யா குறித்து ஒரு பேட்டியில் பேசியிருக்கிறார். தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில், “நாக சைதன்யாவுக்கு சமீபமாக எந்தப் படமும் பெரிதாக ஓடவில்லை. பொதுவாக லைம் லைட்டில் இருக்கும் ஹீரோக்கள் தங்களது குடும்பத்துடன் இருக்கும் புகைப்படங்களை அதிகம் பொதுவெளியில் பகிர்வார்கள். ஆடியோ லான்ச் போன்ற விழாக்களுக்கும் மனைவி, குழந்தைகளை அழைத்துவருவார்கள்.

இதுதான் காரணம்: அதற்கு என்ன காரணம் என்றால், மக்கள் மத்தியில் அவர்களுக்கு ஒரு இமேஜ் உருவாகும். அதாவது அந்த நடிகர் குடும்பம் பிள்ளைகளுடன் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் என்று மக்கள் நினைப்பார்கள். அந்த இமேஜ் அவர்களின் கரியருக்கும் உதவும். ஆனால் இந்த விஷயத்தை பொறுத்தவரை சமந்தாவை நாக சைதன்யா தூக்கி போட்டுவிட்டார் என்ற இமேஜ் இருக்கிறது. இதன் காரணமாக அவரது படங்கள் ஓடாது” என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X