லீக்கான ஓவியாவின் வீடியோ?.. அதில் உண்மை இருக்கா?.. ஏன் இப்படி செய்யுறீங்க?.. கொந்தளித்த பிரபலம்
சென்னை: களவாணி படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் ஓவியா. அந்தப் படம் மெகா ஹிட்டாகி ஓவியாவுக்கு நல்ல அடையாளத்தை கொடுத்தது. அதனையடுத்து சிவகார்த்திகேயனின் முதல் படமான மெரீனா, மூடர் கூடம், மதயானை கூட்டம் உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடித்த அவர் பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனில் கலந்துகொண்டு தமிழ்நாடு முழுவதும் ஃபேமஸ் ஆனார். இப்போது சினிமா வாய்ப்புகள் அவருக்கு குறைந்திருக்கும் சூழலில் அவரது வீடியோ என்று ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் உலாவிவருகிறது.
சற்குணம் இயக்கத்தில் விமல் ஹீரோவாக நடித்த படம் களவாணி. கடந்த 2010ஆம் ஆண்டு வெளியான இந்தப் படத்தில்தான் ஓவியா ஹீரோயினாக அறிமுகமானார். படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஆனது. அதனையடுத்து ஓவியா பிஸியான நடிகையாக வலம் வர ஆரம்பித்தார். அதன்படி மெரீனா, மூடர் கூடம், மதயானை கூட்டம், கலகலப்பு, முத்துக்கு முத்தாக என ஏராளமான படங்களில் நடித்தார். தமிழ் மட்டுமின்றி மலையாளத்திலும் ஓரளவு பிஸியான நடிகையாகத்தான் வலம் வந்தார்.

பிக்பாஸ் ஓவியா: ஆனால் யார் கண் பட்டதோ தெரியவில்லை திடீரென அவருக்கு பட வாய்ப்புகள் குறைய ஆரம்பித்தன. இதனையடுத்து தமிழில் ஆரம்பிக்கப்பட்ட பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டார். அந்த சீசனில் ஓவியாவின் பேச்சு, செயல்பாடு என அனைத்துமே ரசிகர்களை கவர்ந்தது. சக்தியுடன் சண்டைக்கு போனது, ஜூலியை வைத்து செய்தது என அவர் அதகளம் செய்தார். அதனைத் தொடர்ந்து ஓவியா ஆர்மியும் ஆரம்பிக்கப்பட்டது.
பிரயோஜனம் இல்லை: பிக்பாஸ் நிகழ்ச்சி கொடுத்த வெளிச்சம் தனது சினிமா கரியருக்கு நிச்சயம் உதவும் என்று நம்பினார். ஆனால் அவர் எதிர்பார்த்தபடி பட வாய்ப்புகள் பெரிதாக இல்லை. 90 ML, களவாணி 2, பூமர் அங்கிள் உள்ளிட்ட படங்களில் மட்டுமே நடித்தார். இவற்றில் எதுவுமே ஹிட்டும் ஆகவில்லை. இப்போது ஒரு சில படங்களில் அவர் கமிட்டாகியிருப்பதாக தெரிகிறது. இதற்கிடையே ஓவியாவின் ஓபன் பேச்சும் பலரை ரசிக்க வைத்தது. பல பேட்டிகளில் தனது மனதில் பட்டதை சட்டென்று சொல்லிவிடுபவர் அவர்.
லீக்கான வீடியோ?: சூழல் இப்படி இருக்க நேற்றிலிருந்து ஓவியாவின் வீடியோ என ஒன்று சமூக வலைதளங்களில் பரவிவருகிறது. அதனை நெட்டிசன்ஸ் பலரும் ட்ரெண்டாக்கிவருகின்றனர். நெட்டிசன் ஒருவர் ஓவியாவின் போஸ்ட் ஒன்றில் வீடியோ பற்றி நக்கலாக பேச; அதற்கு ஓவியாவோ தரமான பதிலடியை கொடுத்தார். இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து பிரபல பத்திரிகையாளரான செய்யாறு பாலு வீடியோ ஒன்றில் கொந்தளித்து பேசியிருக்கிறார்.
செய்யாறு பாலு கருத்து: அந்த வீடியோவில் பேசிய அவர், “களவாணி படத்தில் அறிமுகமானார் ஓவியா. அதற்கு பிறகு சில படங்களில் நடித்தார். எதுவாக இருந்தாலும் ஓபனாக பேசக்கூடியவர். கையில் சரக்கு பாட்டிலுடன் ஏன் இருக்கிறீர்கள் என்று கேட்டதற்கு; ஏன் பெண்கள் இப்படி இருக்கக்கூடாதா என்று ஓபனாக கேட்டவர். பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் அவர் கொடுத்த கண்ட்டெண்ட் தமிழ்நாடு முழுவதும் ஃபேமஸ் ஆனது. 90 ML படத்தில் ஏன் நடித்தீர்கள் என்று கேட்டதற்கு வரும் வாய்ப்பை எப்படி விடுவது என்று கூறினார்.
ஏன் இப்படி செய்யுறீங்க: ஓவியாவை தொடர்ந்து தாக்குகிறார்கள். ஏன் என்று தெரியவில்லை. இப்போது அவர் வீடியோ என்று ஒன்று சோஷியல் மீடியாவில் பரவிவருகிறது. அதில் உண்மைத்தன்மை இருக்கிறதா என்று தெரியவில்லை. ஆனால் பலரோ அந்த வீடியோவில் இருப்பது ஓவியாதான் என்று அடித்து கூறுகிறார்கள். அந்த உரிமையை எல்லாம் உங்களுக்கு யார் கொடுத்தது. இப்போது டீ ஏஜிங், ஏஐ என ஏகப்பட்ட தொழில்நுட்பங்கள் வந்துவிட்டன. அப்படி இருக்கும்போது வீடியோவில் இருப்பது ஓவியாதான் என்று எப்படி சொல்கிறீர்கள். இந்தத் தொழில்நுட்பத்தையும், சமூக வலைதளத்தையும் இப்படி பயன்படுத்துவது ரொம்பவே தவறு. ஒருபக்கம் பிக்பாஸ் நிகழ்ச்சி போய்க்கொண்டிருக்கிறது. இந்த நேரத்தில் இதுமாதிரியான வீடியோவை வேண்டுமென்றே வெளியிட்டிருக்கலாம்” என்றார்.


Click it and Unblock the Notifications











