சிவகார்த்திகேயனை சுத்தி சுத்தி அடிக்கிறாங்க.. அனைத்துக்கும் காரணம் அதுதான்.. செய்யாறு பாலு ஓபன் டாக்
சென்னை: Sivakarthikeyan (சிவகார்த்திகேயன்) நடிகர் சிவகார்த்திகேயனை சுத்தி சுத்தி அடிக்கிறார்கள் என்று பத்திரிகையாளர் செய்யாறு பாலு தெரிவித்திருக்கிறார்.
தமிழ் சினிமாவின் டாப் 5 ஹீரோக்களில் ஒருவராக இருப்பவர் சிவகார்த்திகேயன். அவர் நடித்த டாக்டர், டான் ஆகிய இரண்டு படங்களும் வரிசையாக நூறு கோடி ரூபாய் க்ளப்பில் இணைந்து பலரையும் ஆச்சரியப்படுத்தியது. இதன் காரணமாக எஸ்கே ரசிகர்கள் உற்சாகமடைந்தனர். அடுத்து வந்த பிரின்ஸ் தோல்வியடைய கடைசியாக வந்த மாவீரன் ஹிட்டடித்தது.

இமான் விவகாரம்: சூழல் இப்படி இருகக் இசையமைப்பாளர் டி.இமான் சில வாரங்களுக்கு முன்பு தனியார் யூட்யூப் சேனலுக்கு பேட்டி அளித்தார். அந்தப் பேட்டியில் பேசிய அவர், "இனி சிவகார்த்திகேயனுடன் இந்த ஜென்மத்தில் இணையமாட்டேன். அவர் எனக்கு மிகப்பெரிய துரோகத்தை செய்துவிட்டார். அந்த துரோகத்தை எனது வாழ்நாள் முழுவதும் மறக்க முடியாது. என்னுடைய குழந்தைகளின் எதிர்கால நலன் கருதி அதை வெளியில் சொல்லவில்லை" என்றார்.
உடைந்த இமேஜ்: இமானின் இந்த குற்றச்சாட்டு ஒட்டுமொத்த திரையுலகையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. மேலும் அவருக்கும் அவரது முதல் மனைவி மோனிகாவுக்கும் நடந்த விவாகரத்துக்கு சிவாதான் காரணமாக இருப்பார் என்று ஒருதரப்பினர் கூறினர். ஆனால் அதனை மோனிகா திட்டவட்டமாக மறுத்து; இமானுக்கு சிவகார்த்திகேயன் சப்போர்ட் செய்யாமல் நியாயத்தின் பக்கம் நின்றார் அதைதான் இமான் துரோகம் என்கிறார் என்று விளக்கமளித்தார்.
வளர்ச்சியை தடுக்கத்தான்: ஒருபக்கம் சிவகார்த்திகேயனுக்கு எதிராக சிலர் பேசி வந்தாலும் மறுபக்கம் அவருக்கு ஆதரவு குரல்களும் எழ ஆரம்பித்திருக்கின்றன. அதிலும் அவரது ரசிகர்கள் சமூக வலைதளங்களில் இமான் கொடுத்த அந்தப் பேட்டியின் ஒரு பகுதியில் இதற்கு காரணம் சிவகார்த்திகேயன் மட்டுமில்லை சிவகார்த்திகேயனும் ஒரு காரணம் என்று கூறிய வீடியோவை பகிர்ந்து இதை ஏன் பலரும் பகிரவில்லை. இதிலிருந்தே எஸ்கேவின் வளர்ச்சியை பிடிக்காமல்தான் அவர் மீது அவதூறு பரப்புகிறார்கள் என்பதை புரிந்துகொள்ளலாம் என பதிவிட்டுவருகின்றனர்.
செய்யாறு பாலு பேட்டி: இந்நிலையில் சினிமா பத்திரிகையாளர் செய்யாறு பாலு இந்த விவகாரம் குறித்து தனியார் யூட்யூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், "ஒருவரை காலி செய்ய அவரது கேரக்டர் பற்றிய பிரச்னையை உருவாக்கினால் போதும். சிவகார்த்திகேயனுக்கும் அதுதான் நடந்திருக்கிறது. அவரை சுத்தி சுத்தி அடிக்கிறார்கள். ஒருபக்கம் அயலான் பிரச்னை ஓடிக்கொண்டிருக்கிறது. மறுபக்கம் இந்தப் பிரச்னை ஓடிக்கொண்டிருக்கிறது.
சிவகார்த்திகேயன் டக்கென்று நூறு கோடி கிளப்பில் இணைந்துவிட்டார். அவரது இந்த வளர்ச்சி பலருக்கு பிடிக்கவில்லை. அதனால்தான் அவரை சுற்றி இவ்வளவு பிரச்னைகள் வந்துகொண்டிருக்கின்றன. அயலான் படத்திற்கான கடனும் தற்போது சிவகார்த்திகேயனின் தலையில்தான் இருக்கிறது" என்றார்.


Click it and Unblock the Notifications











