தனுஷ் - ஐஸ்வர்யா இருக்கட்டும் விடுங்க.. ரஜினி டைவர்ஸ் கதை தெரியுமா?.. பிரபலம் சொன்ன சீக்ரெட்
சென்னை: ரஜினிகாந்த்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா நடிகர் தனுஷை காதலித்து திருமணம் செய்துகொண்டார். கிட்டத்தட்ட 10 வருடங்களுக்கும் மேலாக இணைந்து வாழ்ந்துவந்த அவர்கள் சில வருடங்களுக்கு முன்பு பிரிந்தனர். இரண்டு பேருக்கும் மகன்கள் இருக்கிறார்கள். இப்போது அவர்கள் மீண்டும் இணையவிருப்பதாக தகவல்கள் வெளியாகிக்கொண்டிருக்கின்றன. இந்தச் சூழலில் ரஜினிகாந்த் குறித்து பிரபல பத்திரிகையாளர் செய்யாறு சில விஷயங்களை பேசியிருக்கிறார்.
இந்திய சினிமாவில் தவிர்க்கவே முடியாதவர் ரஜினிகாந்த். இதுவரை 150க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கும் ரஜினி இப்போது வேட்டையன் படத்தில் நடித்திருக்கிறார். ஜெய்பீம் இயக்குநர் த.செ.ஞானவேல் இயக்கியிருக்கிறார். அடுத்ததாக அவர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி படத்தில் நடித்துவருகிறார். வேட்டையனும், கூலியும் ரஜினியின் கரியரில் நிச்சயம் பிளாக் பஸ்டர் படமாக அமையும் என்று அவரது ரசிகர்கள் எதிர்பார்த்திருக்கின்றனர். வேட்டையன் அக்டோபர் 10ஆம் தேதி ரிலீஸாகவிருக்கிறது.

ரஜினியின் குடும்பம்: ரஜினிகாந்த்துக்கு ஐஸ்வர்யா, சௌந்தர்யா என்ற இரண்டு மகள்கள் இருக்கிறார்கள். இவர்களில் சௌந்தர்யாவுக்கு நடந்த முதல் திருமணம் பிரிவில் முடிந்ததை அடுத்து இரண்டாவது திருமணம் செய்துகொண்டார். அதேபோல் ஐஸ்வர்யா நடிகர் தனுஷை காதலித்து திருமணம் செய்துகொண்டார். ஆனால் அந்தத் திருமண வாழ்க்கையும் இப்போது பிரிவில் நிற்கிறது. தனுஷுக்கும், ஐஸ்வர்யாவுக்கும் யாத்ரா, லிங்கா என்ற இரண்டு மகன்கள் இருக்கிறார்கள்.
மீண்டும் இணையும் ஜோடி: தனுஷையும், ஐஸ்வர்யாவையும் எப்படியாவது மீண்டும் சேர்த்துவைத்துவிட ரஜினிகாந்த் உள்ளிட்ட குடும்பத்தினர் தீவிரமாக முயன்றனர். இருந்தாலும் ஆரம்பத்தில் இவர்கள் இருவரும் அதற்கு இசைந்துகொடுக்கவில்லை.இருந்தாலும் சட்டப்பூர்வமாக விவாகரத்து பெறாததால் குடும்பத்தினருக்கு கொஞ்சம் நம்பிக்கை இருந்தது. அந்த கொஞ்சமான நம்பிக்கை இப்போது அதிகரிக்க ஆரம்பித்திருக்கிறதாம். ஏனெனில் ஐஸ்வர்யாவின் புகைப்படங்களுக்கு தனுஷ் லைக்கிட ஆரம்பித்திருப்பதால் மீண்டும் இந்த ஜோடி இணைவதற்கு ஆர்வத்தோடு இருக்கிறார்கள் என்று கருதப்படுகிறது.
செய்யாறு பாலு பேட்டி: இந்நிலையில் பிரபல பத்திரிகையாளர் செய்யாறு பாலு தனது யூட்யூப் சேனலில் வெளியிட்டிருக்கும் வீடியோவில், "தனுஷும் ஐஸ்வர்யாவும் மீண்டும் இணையப்போகிறார்கள் என்ற பேச்சுக்கள் எழுந்திருக்கின்றன. இது ஒரு பக்கம் இருக்கட்டும். ரஜினிகாந்த் பீக்கில் இருந்தபோதுதான் ஐஸ்வர்யா பிறந்தார். அப்போது ரஜினிகாந்த்துக்கும், லதாவுக்கும் விவாகரத்து என்று செய்திகள் பரவின. மேலும் ஹரே ராமா ஹரே கிருஷ்ணா என்ற இயக்கத்தில் ரஜினி சேர்ந்துவிட்டார் அதுதான் விவாகரத்துக்கு காரணம் என்றும் சொன்னார்கள்.
துறவியான ரஜினி: மேலும் அந்த இயக்கத்துக்காக தனது போயஸ் கார்டன் வீட்டையே ரஜினிகாந்த் கொடுத்துவிட்டார் என்றும் கூறினார்கள். லதா ரொம்ப குமுறியிருக்கிறார். ரஜினி வேளச்சேரியில் ஒரு வீடு கட்டியிருக்கிறார்.அங்கு சென்றுவிடலாம் என்று ரஜினி சொல்கிறார். ஆனால் லதா வர மறுக்கிறார் என்றெல்லாம் பத்திரிகையில் செய்திகள் வந்தன. இது ஒருபக்கம் இருக்க தனது 100ஆவது படமான ராகேவந்திரா படத்துக்காக கடும் விரதம் இருக்கிறார். துறவியாக மாறிவிட்டார் என்றும் மறுபக்கம் வெளியானது.
ரஜினியின் பிடிவாதம்: லதாவிடமிருந்து விவாகரத்து பெற ரஜினிகாந்த் முடிவு செய்துவிட்டார். நடிகை மீனாட்சி சேஷாத்ரியுடன் ஏற்பட்ட பழக்கம்தான் அதற்கு காரணம் என்று இன்னொரு செய்தியும் வெளியானது. இவை எல்லாத்துக்கும் உச்சமாக ரஜினிகாந்த்தை லதாவின் குடும்பம் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது. அதனால்தான் ரஜினி விவாகரத்து பெற பிடிவாதமாக இருக்கிறார் என்றெல்லாம் சொன்னார்கள். ஒருகட்டத்தில் சன்னியாசியாக மாற ரஜினி முடிவெடுத்துவிட்டார். அதன்படி அவர் இமயமலை, ரிஷிகேஷுக்கெல்லாம் சென்றார். ஆனால் அப்போதுதான் ரஜினியின் கனவில் ஐஸ்வர்யாவின் முகம் வந்தது. மேலும் ஒரு சாமியார் ரஜினியிடம் உனக்கு சன்னியாசம் சரிப்பட்டுவராது கிளம்பு என்று சொல்லிவிட்டார். அதற்கு பிறகுதான் ரஜினி மீண்டும் வந்து குடும்பத்துடன் சேர்ந்தார்" என்றார்.


Click it and Unblock the Notifications











