Kamal - கமல் ஹாசனை புரிந்துகொள்ளவே முடியாது.. அவர் அந்த நடிகையை காதலிக்கல.. பத்திரிகையாளர் சொன்ன சீக்ரெட்
சென்னை: கமல் ஹாசன் இந்திய சினிமாவின் அடையாளங்களில் ஒருவர். சிறு வயதிலிருந்தே நடித்துவரும் அவர் இதுவரை 233 படங்களில் நடித்திருக்கிறார். நடிப்பு மட்டுமின்றி இயக்கம், தயாரிப்பு, பாடல் பாடுவது, பாடல் எழுதுவது என பல துறைகளில் ஜொலித்தவர். தற்போது அவர் மணிரத்னம் இயக்கத்தில் தக் லைஃப் படத்தில் நடித்துவருகிறார். படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. இந்தச் சூழலில் அவர் குறித்து சித்ரா லட்சுமணன் பேசியிருக்கும் விஷயம் ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்திருக்கிறது.
சினிமாவில் முழு மூச்சாக இயங்கிக்கொண்டிருந்த கமல் ஹாசன் திடீரென அரசியல் பக்கம் சென்றார். அங்கு அவர் எதிர்பார்த்தபடி சூழ்நிலைகள் அமையவில்லை. இருந்தாலும் அரசியலிலிருந்து விலகாத அவர் விக்ரம் படத்தின் மூலம் ரீ எண்ட்ரி கொடுத்தார். அந்தப் படம் மெகா ஹிட்டானது. தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் நடிக்க கமிட்டாகியிருக்கிறார். அதன்படி ஷங்கர் இயக்கத்தில் அவர் நடித்திருக்கும் இந்தியன் 2 படம் விரைவில் வெளியாகவிருக்கிறது. அதேபோல் மணிரத்னம் இயக்கத்தில் தக் லைஃப் படத்திலும், அன்பறிவு இயக்கத்தில் ஒரு படத்திலும் நடிக்க கமிட்டாகியிருக்கிறார் கமல் ஹாசன்.

சித்ரா லட்சுமணன் பேட்டி: இந்நிலையில் நடிகரும், பத்திரிகையாளருமான சித்ரா லட்சுமணன் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் கமல் ஹாசன் குறித்து பேசியிருக்கிறார். அவர் பேசுகையில், "கமல் ஹாசன் நடித்த பல படங்களுக்கு பத்திரிகை அதிகாரியாக பணியாற்றியிருக்கிறேன். ஒருமுறை கமல் ஹாசனின் சம்பளம் குறித்து பேசி அதற்கு பிறகு அவர் படத்தில் நடித்த சம்பவம் எல்லாம் உண்டு.
ஜெகநாதன் இயக்கம்: கமல் ஹாசன் நடித்த படத்தை ஜெகநாதன் இயக்கியிருந்தார். அப்போது அவரிடம் உதவியாளராக இருந்தவர் இயக்குநர் பாரதிராஜா, அந்தப் படத்தை இயக்கிய பிறகு படம் இயக்குவதற்கு முடிவு செய்து இனி உதவி இயக்குநராக பணியாற்றுவதில்லை என்று முடிவு செய்தார். அந்தப் படம்தான் பதினாறு வயதினிலே என்பது குறிப்பிடத்தக்கது.
ஏற்கனவே அறிமுகம்: பாரதிராஜாவுக்கு கமல் ஹாசன் ஏற்கனவே அறிமுகமானவர். புதிய திறமைகளை எளிதில் கண்டுபிடிக்கும் திறன் கமல் ஹாசனுக்கு இருக்கிறது. அதனால்தான் பதினாறு வயதினிலே படத்தில் நடிப்பதற்கு கமல் ஹாசன் ஒத்துக்கொண்டார். அந்தப் படத்துக்காக கமல் ஹாசன் 30,000 ரூபாய் சம்பளம் கேட்டார். பாரதிராஜாவும், தயாரிப்பாளரும் கமல் கேட்ட சம்பளத்தை கொடுக்க ஒத்துக்கொண்டனர்.
கமல் ஹாசன் காத்திருப்பார்: படத்தின் ஷூட்டிங் மைசூரு அருகே நடந்தது. நாங்கள் ரயிலில் அங்கு சென்றோம். பிறகு விடுதியில் தங்கினோம். இன்று போல் மொபைல் ஃபோன் எல்லாம் அப்போது இல்லை. ஃபோன் செய்ய வேண்டுமென்றால் நாங்கள் இருந்த இடத்திலிருந்து 30 நிமிடங்கள் நடந்து செல்ல வேண்டும். தொலைபேசி எண்ணை போட்டுவிட்டு அரை மணி நேரம் லைனுக்காக காத்திருக்க வேண்டும். கமல் ஹாசனும் அப்படித்தான் ஒரு ஃபோனுக்காக காத்திருப்பார்.
ரேகாவுடன் காதல் இல்லை: அந்த சமயத்தில் இந்தி நடிகை ரேகாவை கமல் ஹாசன் காதலிப்பதாக செய்திகள் வெளியாகிக்கொண்டே இருந்தன. அதனால் அந்த ஃபோனில் கமல் ஹாசன் ரேகாவிடம்தான் பேசுகிறார் போல என்று நானும் நினைத்துக்கொண்டிருந்தேன். ஆனால் கமல் ஹாசன் என்னிடம் வந்து, 'நான் ரேகாவை காதலிக்கவில்லை. என்னுடன் நடித்த வாணி கணபதியைத்தான் காதலிக்கிறேன்' என்று சொன்னார். பிறகு 16 வயதினிலே படம் வெளியானது. அந்த ரிலீஸுக்கு பிறகு கமலும், வாணி கணபதியும் திருமணம் செய்துகொண்டனர்" என்றார்.


Click it and Unblock the Notifications











