Vijay - விஜய் - எஸ்.ஏ.சந்திரசேகர் பஞ்சாயத்து இன்னுமா தீரவில்லை?.. பிரபலம் சொன்ன டாப் சீக்ரெட்
சென்னை: Vijay (விஜய்) லியோ படத்தின் சக்சஸ் மீட்டுக்கு எஸ்.ஏ.சந்திரசேகர் வராததற்கு என்ன காரணம் என்பது குறித்து சித்ரா லட்சுமணன் பேசியிருக்கிறார்.
விஜய் நடிப்பில் லியோ திரைப்படம் வெளியாகி வசூல் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றதாக படக்குழு அறிவித்திருக்கிறது. இதுவரை 600 கோடி ரூபாய்வரை வசூலித்துவிட்டதாக கூறப்படுகிறது. இதனால் விஜய்யின் ரசிகர்கள் ரொம்பவே மகிழ்ச்சியாக இருக்கின்றனர். அடுத்ததாக அவர் தன்னுடைய 68ஆவது படத்தில் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடித்துவருகிறார்.

லியோ சக்சஸ் மீட்: லியோ படம் வணிக ரீதியாக பெரும் வெற்றி பெற்றதன் காரணமாக அப்படத்தின் லியோ சக்சஸ் மீட் அண்மையில் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்றது. இதில் படக்குழுவினர், விஜய், அவரது தாய் ஷோபா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். ஆனால் ரொம்பவே எதிர்பார்க்கப்பட்ட விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் கலந்துகொள்ளவில்லை.
பிரச்னை: இதற்கிடையே விஜய்க்கும் அவரது தந்தைக்கும் கடந்த சில காலமாகவே மனஸ்தாபம் ஒன்று ஓடிக்கொண்டிருப்பதாக கூறப்பட்டது. குறிப்பாக எஸ்.ஏ.சந்திரசேகரும் அதனை ஒரு சில மேடைகளில் வெளிப்படுத்தவும் செய்திருக்கிறார். அதேசமயம் அனைவரது வீட்டிலும் அப்பாவுக்கும் மகனுக்கும் நடக்கும் சண்டைபோல்தான் இதுவும் என்று கூறவும் செய்தார்.
நேரில் சந்தித்த விஜய்: சூழல் இப்படி இருக்க சில மாதங்களுக்கு முன்பு விஜய் ஷோபாவை நேரில் சந்தித்தார். அப்போது புகைப்படமும் எடுத்துக்கொண்டார். ஆனால் அப்போதும் எஸ்.ஏ.சந்திரசேகர் அங்கு இல்லை. இதன் காரணமாக விஜய்க்கும் அவரது தந்தைக்கும் இருக்கும் மனஸ்தாபம் இன்னும் ஓயவில்லை போல என்று பேச்சு எழுந்தது. அதெல்லாம் இல்லை அவர் அந்த சமயத்தில் சீரியல் ஷூட்டிங்கில் இருந்தார் என்றும் ஒரு பேச்சு ஓடியது.
உடல்நலம்: ஒருகட்டத்தில் எஸ்.ஏ.சந்திரசேகருக்கு அறுவை சிகிச்சை நடந்தது. அதுதொடர்பாக அவரே ஒரு ஆடியோ வெளியிட்டிருந்தார். அவருக்கு அறுவை சிகிச்சை முடிந்த அடுத்த நாள் விஜய் சென்னை வந்து நேரில் சந்தித்தார். அதுதொடர்பான புகைப்படமும் வெளியானது. எனவே லியோ சக்சஸ் மீட்டுக்கும் எஸ்.ஏ.சி உடல்நலம் காரணமாகத்தான் வரவில்லை என்று கருதப்பட்டது.
கூப்பிடவில்லை: ஆனால் தற்போது அதுதொடர்பாக புதிய தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது. அதாவது பிரபல பத்திரிகையாளரும் நடிகருமான சித்ரா லட்சுமணனிடம் ரசிகர் ஒருவர் லியோ சக்சஸ் மீட்டுக்கு ஏன் விஜய்யின் தந்தை வரவில்லை என்று கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த அவர், “ஒரு நடிகர் எவ்வளவு உச்சத்துக்கு சென்றாலும் தன்னுடைய தந்தையை அழைத்தால்தானே வர முடியும்” என்றார். இதனை பார்த்த ரசிகர்கள் அப்போ விஜய்க்கும் எஸ்.ஏ.சிக்கும் இன்னும் பஞ்சாயத்து தீரவில்லையா என்று கேள்வி எழுப்பிவருகின்றனர்.


Click it and Unblock the Notifications











