நிறைய பேரை நம்பி ஏமாந்துட்டாங்க.. அமலாபாலின் வலி நிறைந்த கதை.. சொன்ன பிரபலம்!

சென்னை: நடிகை அமலா பால் நிறைய பேரை நம்பி ஏமாந்துவிட்டார்கள் என்று பிரபலம் ஒருவர் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

மைனா, தெய்வத்திருமகள், தலைவா படங்கள் மூலம் பிரபலமான நடிகை அமலா பால், இயக்குநர் ஏ.எல் விஜய்யை திருமணம் செய்து கொண்டார். இருவரும் சேர்ந்து வாழ்ந்து வந்த நிலையில், கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்று பிரிந்து விட்டனர்.

Journalist Kodangi spoke about the painful life of actress Amala Paul

நடிகை அமலாபால்: விவாகரத்துக்கு பின், விரக்தியில் இருந்த அமலா பால், தற்போது படங்களில் கவனம் செலுத்தி நடித்து வருகிறார். அண்மையில் தனது பிறந்தநாள் அன்று காதலர் ஜகத் தேசாய்யின் போட்டோவை ஷேர் செய்திருந்த நிலையில், நவம்பர் 5ந் தேதி அவரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். இந்த திருமண ஜோடிக்கு பிரபலங்களும், ரசிகர்களும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

நடிகைகளுக்கு ரணங்கள் அதிகம்: இந்நிலையில் அமலா பால் கடந்து வந்த வலிகள் குறித்து, யூடியூப் சேனல் ஒன்றில் கோடாங்கி பேட்டி அளித்துள்ளார். அதில், அமலா பாலுக்கு மட்டும் வலி என்று சொல்ல முடியாது, திரைத்துறையில் வரும் பெண்கள் அனைவருக்கும் வெளியில் சொல்ல முடியாத ரணங்கள் அதிகமாகத்தான் இருக்கும்.

மோசமான கதை: நடிகை அமலா பால், அனைவர் இடத்திலும் நன்றாக பேசக்கூடியவர், அது அவரிடம் நேரடியாக பேசி பழகியவர்களுக்கு நன்றாக தெரியும். அவர் முதலில் நடித்த சிந்து சமவெளி படத்தில் இருந்தே அதற்கான வலியை அவர் அனுபவித்தார். இப்போதும் எனது முதல் படம் மைனா என்று தான் சொல்லுவார்.. அதற்கு காரணம் சிந்து சமவெளி படத்தின் மோசமான கதை.

காதல் திருமணம்: அதே போல அமலா பால், இயக்குநர் விஜய்யை காதலித்துத்தான் திருமணம் செய்து கொண்டார். ஆனால், திருமண வாழ்க்கையில் அவருக்கான சுதந்திரம் இல்லை, அவர் செய்த பல தவறுகள் சுட்டிக்காட்டப்பட்டு அவரை நெருக்கியதால், முதல் கணவரை விட்டு பிரிந்தார். இப்போதும், காதலித்துத்தான் இரண்டாம் திருமணம் செய்து இருக்கிறார்.

நம்பி ஏமாந்தார்: ஆனால், அமலா பால் மற்ற நடிகைகளை விட அதிகமான வலிகளை அனுபவித்து இருக்கிறார். இதற்கு காரணம் அவர் அனைவரையும் நம்பி விடுவார். ஆடை படத்தில் கூட அமலா பால் நடித்தது அப்படித்தான். இந்த படம் வெளியானால், உச்சத்திற்கு போய்டுவீங்க, படத்தின் கதை அப்படிப்பட்டது என்று சொல்லி நம்ப வைத்தனர். இப்படி பலரை நம்பி ஏமாந்தவர் தான் அமலா பால் என்று கோடாங்கி அந்த பேட்டியில் பேசி உள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X