Vijay: விஜய் ரசிகர்களுக்கு கொஞ்சம் கூட தைரியமில்லை.. ரொம்ப வொர்ஸ்ட்.. வெளுத்து வாங்கிய பிரபலம்!
சென்னை: நடிகர் விஜய் தமிழ் சினிமாவின் உச்ச நடிகர்களில் ஒருவராக உள்ளார். இவர் தற்போது தனது கடைசிப் படமான தளபதி 69 படத்தின் பணிகளில் தீவிரமாக உள்ளார். மேலும் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியைத் தொடங்கியுள்ள விஜய் சினிமாவில் இருந்து விலகப்போவதாக கூறியுள்ளார். இவர் தொடங்கியுள்ள கட்சியின் முதல் மாநில மாநாடு வரும் 27ஆம் தேதி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. சினிமா உலகில் முதலில் விஜய் ரசிகர்களுக்கும் அஜித் ரசிகர்களுக்கும் இடையில் மோதல் போக்கு இருந்து வந்தது. அதன் பின்னர் விஜய் ரசிகர்கள் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ரசிகர்களுடன் மோத ஆரம்பித்தனர். ஆனால் அந்த மோதல் போக்கு மிகவும் மோசமானதாக நாளுக்கு நாள் மாறிவருவதை பார்க்க முடிகின்றது. இது தொடர்பாக பத்திரிகையாளர் கோடங்கி நமது ஃபிலிமி பீட் தமிழுக்கு அளித்த பேட்டியில் பேசியது தொடர்பாக இந்தத் தொகுப்பில் காணலாம்.
அந்தப் பேட்டியில், " அசிங்கமான போக்கு, இதனை ரஜினி ரசிகர்கள் விஜய் ரசிகர்கள் என பிரித்துப் பார்ப்பதைவிட, சமூக வலைதளம் வந்த பின்னர் பலரும் ஆபாசமாக பேசி வருகின்றனர். எல்லாம் ஃபேக் ஐ.டி (போலி கணக்குகள்), முகம் காட்டி பேச தைரியமில்லாதவர்கள், எல்லாம் தற்குறிகள். எல்லாம் உண்மையைப் பேசுகின்றோம் என இல்லாமல் எதையாவது உளறிக்கொண்டு உள்ளனர். இதனைக் கட்டுப்படுத்தும் இடத்தில் சம்பந்தப்பட்டவர்கள் உள்ளனர். உங்களின் ரசிகர்களையே கட்டுப்படுத்த முடியவில்லை என்றால், நீ என்ன தலைவன்?.

நான் ஒருவரைக் குறிப்பிடவில்லை, இது ரஜினிக்கும் பொருந்தும், விஜய்க்கும் பொருந்தும். இதில் மிகவும் மோசமனாவர்கள் யார் என்றால் அது விஜய் ரசிகர்கள்தான். விஜய் ரசிகர்களுக்கு பொதுவாகவே என்னைப் பிடிக்காது. காரணம் அவர்கள் செய்யும் தற்குறித்தனத்தை நான் வெளியில் சொல்லுகின்றேன். ரஜினிகாந்த் என்ற மனிதர் தமிழ் சினிமாவில் 50 ஆண்டுகளுக்கு மேல் சாதனை படைத்துள்ளார்.
அனுபவம்: ரஜினியின் அனுபவம் கூட விஜய்யின் வயது கிடையாது. அப்படி இருக்கும்போது உங்களது ரசிகர்கள் இவ்வளவு ஆபாசமாக பேசும்போது அவர்களை கட்டுப்படுத்த துப்பில்லை என்றால் நீ எதற்கு ரசிகர் மன்றம் வைத்துள்ளாய். கலைத்துவிடு. நீ இந்த ரசிகரையே கண்ட்ரோல் செய்ய முடியவில்லை என்றால் நாட்டைப் எப்படி காப்பாற்றப்போகின்றாய்? மக்களுக்கு எப்படி தலைவனாக இருக்கமுடியும். இந்தக் கேள்வியை நான் கேட்கவில்லை என்றால் கூட வேறு யாராவது கேட்பார்கள்.

ஆபாச வார்த்தைகள்: இந்த மோசமான போக்கிற்கு எல்லையே இல்லை எனும் அளவிற்குச் சென்றுவிட்டது. நான் இதனை எதற்காகக் கூறுகின்றேன் என்றால், ரஜினிகாந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது, அது வயதானால் அனைவருக்கும் வரக்கூடிய பிரச்னைதான். உடல்நிலை சரியாவது எப்போது என நம்மிடம் சொல்லிவிட்டா சரியாகும்? அது விபத்து மாதிரி, எப்போதுவேண்டுமானாலும் உடல்நிலை சரியாகாமல் போகலாம். அதுவும் அவரது 74வது வயதிலும் முன்னணி நடிகாராக உள்ளார். கதாநாயகனாக நடிக்கின்றார். தனது சூப்பர் ஸ்டார் பட்டத்தினை தக்கவைத்துக் கொண்டுள்ளார். அப்படி இருக்கும்போது மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டபோது சொல்லமுடியாத ஆபாச வார்த்தைகள் எல்லாம் போட்டார்கள்.

ஞானவேல்: இதையெல்லாம் விஜய்யின் முகத்தை வைத்துக் கொண்டே இணையத்தில் பேசுகின்றார்கள். விஜய்யின் ரசிகர்கள் மிகவும் கேவலமாக நடந்து கொள்கின்றார்கள். வேட்டையன் ரஜினிகாந்த்தின் படம் அல்ல. இது முழுக்க முழுக்க ஞானவேலின் படம். ஞானவேல் சொல்லவேண்டிய விஷயத்தை ரஜினி மூலமாக சொல்லியுள்ளார். அமிதாப் பச்சன், ரஜினிகாந்த் மூலமாக சொல்லவேண்டிய விஷயத்தினை குறிப்பாக நாட்டு மிகவும் தேவையான விஷயத்தைக் கூறியுள்ளார். நீட் எவ்வளவு பிரச்னை, நீட் கோச்சிங் சென்டர்கள் எந்த அளவுக்கு கொள்ளை அடிக்கின்றார்கள் என்பது குறித்து நானோ, நீங்களோ பேசினால் எடுபடாது, அதற்கு அமிதாப் பச்சன், ரஜினிகாந்த் என ஜாம்பவான்கள் தேவை. படம் வசூல் ரீதியாகவே வெற்றிப் படம் என கூறுகின்றார்கள்" என பேசியுள்ளார். இது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.


Click it and Unblock the Notifications











