Rajini: காலி பெருங்காய டப்பா.. 25 வருஷமா ஏமாத்திட்டாரு.. ரஜினி குறித்து மோசமாக விமர்சித்த பிரபலம்!
சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தான் அரசியலுக்கு வருவது உறுதி எனக் கூறிவிட்டு, பின்னர் நான் அரசியலுக்கு வரவில்லை என அறிக்கை விட்டு, சீரியஸ் பாலிடிக்ஸில் இருந்து எஸ்கேப் ஆனவர். அவ்வப்போது அரசியல் கேள்விகளுக்கு பத்திரிகையாளர்களுக்கு பதில் அளித்து வந்த ரஜினிகாந்த், அதன் பின்னர், அரசியல் கேள்விகளைக் கேட்க வேண்டும் என கேட்டுக் கொண்டார். இப்படியான நிலையில் சமீபத்தில் இவர் வெளியிட்ட வீடியோவில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா குறித்து பேசியது அரசியல் தளத்தில் கவனம் பெற்றுள்ளது. இது தொடர்பாக பத்திரிகையாளர் மணி பேசும்போது ரஜினிகாந்த் குறித்து காட்டமாக விமர்சித்துள்ளார்.
பத்திரிகையாளர் மணி அளித்த பேட்டியில், " ரஜினிகாந்த் அவ்வப்போது தனது இருப்பைக் காட்டிக் கொள்ள இது போன்ற செயல்களில் ஈடுபடுவார். வீடியோ வெளியிடுவார், ட்விட்டரில் எதாவது பதிவிடுவார், செய்தியாளர்கள் கேள்விக்கு பதில் அளிப்பார். ரஜினி குறிப்பிட்ட சம்பவம் நடைபெற்று 30 ஆண்டுகள் ஆகிறது. பழசை இப்போது ஞாபகப்படுத்த என்ன தேவை இருக்கிறது? ரஜினிகாந்த் தனது இருப்பைக் காட்டிக் கொள்ள சில விஷயயங்களை சீரான இடைவெளியில் செய்து கொண்டு இருப்பார்.
ஜெயலலிதாவுக்கு எதிராக 96இல் குரல் கொடுத்துவிட்டு, அமெரிக்காவுக்கு ஓடிவிட்டார். கலைஞர் முதலமைச்சர் ஆன பின்னர் தான் தமிழ்நாட்டிற்கு மீண்டும் வந்தார். ரஜினியின் அரசியல் எப்போதும் நேரடியான அரசியலாக இருந்ததில்லை. எதையாவது கொளுத்தி போடுவார் பிரச்னை வருகிறது என்றால் பின் வாங்குவார், பதுங்குவார், நாட்டை விட்டு ஓடுவார். இப்போது ரஜினிகாந்த் பேசியுள்ளதில் முட்டுக்கொடுக்கும் தன்மைதான் உள்ளது. அப்போது ஜெயலலிதாவை விமர்சித்து விட்டு, இப்போது அதிமுக வாக்கு வங்கியை கூல் டவுன் செய்ய அதுபோல பேசியுள்ளார்.

பெருங்காய டப்பா: மொத்தத்தில் ரஜினிகாந்த் ஒரு காலத்தில் பெருங்காயம் இருந்த டப்பா. இப்போது அதில் ஒன்னும் கிடையாது. ரஜினிகாந்துக்கு இப்போது எந்த மக்கள் செல்வாக்கும் கிடையாது. அவரது குடும்பத்தில் இருப்பவர்க்ளே அவருக்கு ஓட்டு போடுவார்களா எனத் தெரியவில்லை. அந்த அளவுக்குத்தான் ரஜினிக்கு செல்வாக்கு உள்ளது. ரஜினியின் இதுபோன்ற பேச்சுகளை மிகவும் முக்கியமானதாக எடுத்துக் கொள்ளக் கூடாது. இவற்றை எல்லாம் தவிர்த்துவிட வேண்டும்.
அரசியல்: 30 ஆண்டுகளுக்கு முன்னால் நடைபெற்ற விஷயத்திற்கு இப்போது விளக்கம் கொடுக்க வேண்டிய அவசியம் என்ன? இது அனைவருக்கும் தெரிந்த கதைதான். இது என்ன அரசியல்? அரசியலுக்கு வருகிறேன் எனக் கூறிவிட்டு வராமல் போனவர். உங்களுக்கு எதற்கு பொது விஷயங்களின் மீது அக்கறை. அரசியல் பேசினாலும் அது சீராக இருக்காது. இவருக்கு பொறுப்புணர்வும் வேண்டாம் எதுவும் வேண்டாம். சினிமாக்காரன் சினிமாக்காரனாக இருந்தால் போதும். நீங்கள் சமூகத்தைப் பற்றி பேசினால் தான் கோபம் வருகிறது.

அருகதை: சினிமாகாரர்கள் புத்தி சொல்லும் அளவிற்கு தமிழ்நாடு இல்லை. சினிமாகாரர்கள் அவர்களின் வேலையைப் பார்த்துக் கொண்டு போனால் போதும். அரசியலுக்கு வருகிறேன் என விரும்புகிறவர்கள் வெளிப்படையாக வா. விஜய், சீமான், கமலை போல வெளிப்படையாக அரசியலுக்கு வா. எந்த சினிமாகாரராக இருந்தாலும் சரி, அது சூப்பர் ஸ்டாரோ, உலகநாயகனோ யாராக வேண்டுமானாலும் இருக்கட்டும், அவர்கள் புத்தி சொல்லும் அளவிற்கு தமிழ்நாடு இல்லை. அரசியலுக்கு வருகிறேன் எனக் கூறி ஒரு தலைமுறை இளைஞர்களையே ஏமாற்றிவர் ரஜினிகாந்த். எந்த சமூக பொறுப்பும் இல்லாத படங்களில் நடித்து அதன் மூலம் பல கோடிகளை பார்த்தவர் ரஜினிகாந்த். எந்த விஷயம் குறித்தும் பேசுவதற்கு உரிமையோ அருகதையோ ரஜினிக்கு இருக்கிறதா என்று அஞ்சுகிறேன்" என பேசியுள்ளார். அவரது இந்த பேச்சு ரஜினி ரசிகர்களுக்கு ஷாக் கொடுக்கும் விதமாக உள்ளது.


Click it and Unblock the Notifications











