நெப்போலியன் மகனுக்கு திருமணம்.. மனைவியாக இருக்க முடியாது.. வரம்பு மீறி பேசிய பத்திரிகையாளர்

சென்னை: நடிகர் நெப்போலியன் 90களில் பிரபலமான நடிகராக இருந்தவர். ஹீரோ, வில்லன் என கலந்துகட்டி நடித்த அவர், போக்கிரி படத்தில் குணசித்திர கதாபாத்திரத்திலும் நடித்தவர். நடிப்பு மட்டுமின்றி அரசியலில் நுழைந்து மத்திய இணை அமைச்சராகவும் இருந்த அவர்; இப்போது அமெரிக்காவில் செட்டில் ஆகிவிட்டார். அவருக்கு தனுஷ், குணால் என்ற இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். இந்தச் சூழலில் நெப்போலியன் மகன் தனுஷின் திருமணம் குறித்து பத்திரிகையாளர் ஒருவர் பேசியிருப்பது கண்டனத்தை சம்பாதித்திருக்கிறது.

பாரதிராஜாவின் இயக்கத்தில் அறிமுகமானவர் நெப்போலியன். முதல் படமே இயக்குநர் இமயத்தின் இயக்கம் என்பதால் நடிப்பை சரியாகவே கொடுத்திருந்தார். அதற்கு பிறகு எஜமான், சீவலப்பேரி பாண்டி, கிழக்கு சீமையிலே என பல படங்களில் நடித்து புகழின் உச்சிக்கு சென்றார். எந்தக் கதாபாத்திரம் கொடுத்தாலும் மிகச்சிறப்பாக செய்யக்கூடியவர் நெப்போலியன். போக்கிரி படத்தில் குணசித்திர வேடத்திலும் நடித்து கலக்கியிருந்தார் நெப்போலியன்.

Napolean Dhanush


அமெரிக்காவில் செட்டில்: நடிப்பு மட்டுமின்றி அரசியலிலும் தனது தடத்தை பதித்த அவருக்கு தனுஷ், குணால் என்ற இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். இரண்டு பேரில் தனுஷுக்கு உடல்நிலை சரியில்லாததால்; அவரது வசதிக்காகவும், சிகிச்சைக்காகவும் அமெரிக்கா சென்று அங்கேயே செட்டில் ஆகிவிட்டார். இந்தச் சூழலில் தனுஷுக்கு மிக விரைவில் திருமணம் நடக்கவிருக்கிறது. அவர் திருநெல்வேலியை சேர்ந்த அக்‌ஷயா என்ற பெண்ணை திருமணம் செய்துகொள்ளவிருக்கிறார்.

ஜப்பானில் திருமணம்: தனுஷின் உடல்நிலை காரணமாக அவரால் விமானத்தில் பயணம் செய்து இந்தியா வர முடியாது. கப்பலில் வந்தாலும் நீண்ட நாட்கள் ஆகும். எனவே திருமணத்தை ஜப்பானில் வைக்க திட்டமிட்டிருக்கிறார் நெப்போலியன். அதுகுறித்த அறிவிப்பை மிக சமீபத்தில்தான் அவர் வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. தனுஷுக்கு திருமணம் நடக்கவிருப்பதுதான் கடந்த சில நாட்களாக அதிகம் பேசப்படுகிறது.முக்கியமாக தனுஷின் உடல்நிலையை காரணம் காட்டி பயில்வான் ரங்கநாதன் உள்ளிட்ட சிலர் அவதூறாக பேசினர்.

தமிழா தமிழா பாண்டியன்: இந்நிலையில் பயில்வான் ரங்கநாதன் உள்ளிட்டோர் வரிசையில் பத்திரிகையாளர் தமிழா தமிழா பாண்டியனும் இணைந்திருக்கிறார். தனுஷின் திருமணம் பற்றி ஒரு பேட்டியில் பேசிய பாண்டியன், “நெப்போலியன் மகனுக்கு வீடியோ கான்ஃப்ரென்ஸ் மூலம் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்தது. தனுஷின் திருமணம் அமெரிக்காவில் நடந்தால் சட்டப்படி செல்லாது. அதனால்தான் அவர்கள் திருமணத்தை ஜப்பானில் வைத்திருக்கிறார்கள்.

மனைவியாக இருக்க முடியாது: நெப்போலியன் மகனுக்கு அக்‌ஷயா மனைவி என்ற ஸ்தானத்தில் இருக்க முடியாது. ஒரு செவிலியராகத்தான் அந்தப் பெண் இருப்பார்” என்றார். பாண்டியாவின் இந்தப் பேச்சு பலத்த கண்டனத்தை பெற்றிருக்கிறது. அவரது வீடியோவை பார்த்த ரசிகர்கள் பலர், 'தனுஷும், அந்தப் பெண்ணும் ஒருவரையொருவர் பிடித்துபோய்தான் திருமணம் செய்துகொள்ளவிருக்கிறார்கள். பிறகு ஏன் இவர்கள் இஷ்டத்துக்கு பேசுகிறார்கள் என்று காட்டமாக கமெண்ட்ஸ் செய்துவருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X