விஜய்க்கு ஒன்னுமே தெரியாது.. பத்திரிகையாளர் என்ன இப்படி சொல்லிட்டாரு?.. ரசிகர்கள் கோபம்

சென்னை: நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் கட்சியை தொடங்கியிருக்கிறார். அதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை அவர் சில மாதங்களுக்கு முன்பு வெளியிட்டார். விஜய்யின் இந்த அரசியல் பயணம் அவரது ரசிகர்களுக்கு உச்சக்கட்ட மகிழ்ச்சியை கொடுத்திருக்கிறது. நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் அவரது கட்சி போட்டியிடவில்லை. ஆனால் 2026அம் ஆண்டு நடக்கவிருக்கும் தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் களம் காண்கிறது.

இளைய தளபதியாக சினிமாவுக்குள் நுழைந்து தளபதியாக மாறி நிற்கிறார் விஜய். இதுவரை 67 படங்களில் நடித்திருக்கும் அவர் தற்போது GOAT படத்தில் நடித்துவருகிறார். அந்தப் படத்தை வெங்கட் பிரபு இயக்குகிறார். ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது. விஜய்யுடன் பிரசாந்த், பிரபுதேவா, மைக் மோகன், ஜெயராம், சினேகா, லைலா, மீனாட்சி சௌதரி உள்ளிட்டோர் நடிக்கின்றனர். பல வருடங்களுக்கு பிறகு விஜய் நடிக்கும் படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.

Journalist Pandiyan Criticized Vijay And His Political View Here are the details

அரசியல் விதை: விஜய்யை சினிமாவில் உருவாக்கியதில் முக்கிய பங்கு அவருடைய தந்தை எஸ்.ஏ.சந்திரசேகருக்கு உண்டு. அவரை பார்த்து பார்த்து செதுக்கினார். மேலும் விஜய்க்கு இருந்த ரசிகர் மன்றம் விஜய் மக்கள் இயக்கமாக மாறியதிலும் எஸ்.ஏ.சியின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்தது. அந்த மக்கள் இயக்கம் மூலம் ஏராளமான நலத்திட்ட உதவிகள் தொடர்ந்து வழங்கப்பட்டுக்கொண்டிருக்கின்றன.

அரசியலுக்கு வர வேண்டும்: கடந்த பல வருடங்களாகவே தொடர்ந்து விஜய் மக்கள் இயக்கம் நலத்திட்ட பணிகளை மேற்கொண்டு வரும் சூழலில் விஜய் அரசியலுக்கு வர வேண்டும் என அவரது ரசிகர்கள் தொடர்ந்து கூறிவந்தனர். ஆனால் விஜய்யோ எந்தப் பதிலும் சொல்லாமல் அமைதியாக இருந்து வந்தார். அதேசமயம் விஜய் மக்கள் இயக்கம் சார்பாக தொடர்ந்து ஆலோசனை கூட்டங்கள் நடந்துவந்தன. இதன் காரணமாக விஜய் அரசியலுக்கு வருவது உறுதிதான் 2024ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் அவர் போட்டியிடுவார் என்றும் ஆரூடம் கூறப்பட்டது.

தமிழக வெற்றி கழகம்: அனைவரும் எதிர்பார்த்தபடியே விஜய் அரசியல் கட்சியை தொடங்கியிருக்கிறார். கட்சிக்கு தமிழக வெற்றிக் கழகம் என்று பெயர் வைக்கப்பட்டிருக்கிறது. அரசியல் கட்சியை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்வதற்கு விண்ணப்பம் செய்யப்பட்டிருக்கிறது. ஆனால் இந்த ஆண்டு நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் போட்டியிடவில்லை. 2026ஆம் ஆண்டு நடக்கும் தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடவிருக்கிறது. விஜய்யின் இந்த அரசியல் என்ட்ரி அவரது ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது. மேலும் இன்னும் ஒரு படம் மட்டும்தான் நடிப்பேன் என்றும் கூறியிருக்கிறார். அதனை ஹெச்.வினோத் இயக்கலாம் என்று தெரிகிறது.

தமிழா தமிழா பாண்டியன் பேட்டி: இந்நிலையில் பத்திரிகையாளர் தமிழா தமிழா பாண்டியன் சமீபத்தில் தனியார் யூட்யூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், "விஜய்க்கு தமிழும் தெரியாது. தேசியம் என்றால் என்னவென்றே தெரியாது. எதுவுமே தெரியாது. அவருக்கு தெரிந்தது எல்லாம் திரிஷாவும், கீர்த்தி சுரேஷும்தான். கொள்கை ரீதியாகவும் அவருக்கு அம்பேத்கர், பெரியார், காமராஜர் பற்றியெல்லாம் எதுவுமே தெரியாது.

விஜய் ரசிகர்களும் அப்படியே: அவரைப் போலத்தான் அவரது ரசிகர்களும் இருக்கிறார்கள். விஜய் இன்னும் அரசியல்மயமாகவில்லை. அப்படி செய்தால் அவர் பின்னால் யாரும் வரமாட்டார்கள்" என்றார். இதனை பார்த்த விஜய் ரசிகர்கள் உச்சக்கட்ட கோபமடைந்திருக்கின்றனர். மேலும் விஜய் அரசியலுக்கு வந்தது சிலருக்கு பிடிக்கவில்லை. அவர்கள்தான் இப்படி விஜய் பற்றி வாய்க்கு வந்ததை பேசிக்கொண்டிருக்கிறார்கள். கண்டிப்பாக தமிழ்நாடு அரசியல் களத்தில் விஜய் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துவார் என்று கமெண்ட்ஸ் செய்துவருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X