விஜய்யுடன் திரிஷா இருக்கும் ஃபோட்டோ.. கேம் ஆடுவார்கள்.. என்னதான் நடக்குது?.. பிரபலம் இப்படி சொல்றாரே

சென்னை: விஜய்யும், திரிஷாவும் கோலிவுட்டின் ரீல் ஜோடிகளில் ரசிகர்களுக்கு ஃபேவரைட். இதுவரை கில்லி, திருப்பாச்சி, ஆதி, குருவி, லியோ உள்ளிட்ட படங்களில் சேர்ந்து நடித்திருக்கிறார்கள். சில நாட்களுக்கு முன்பு விஜய்யின் பிறந்தநாளுக்கு திரிஷா ஒரு புகைப்படத்தை பகிர்ந்திருந்தார். அந்த புகைப்படங்களை வைத்து பலரும் பலவிதமான வதந்திகளை பரப்பினார்கள். இந்தச் சூழலில் பத்திரிகையாளர் ராஜ கம்பீரன் இதுகுறித்து பல விஷயங்களை பேசியிருக்கிறார்.

விஜய் இப்போது GOAT படத்தில் நடித்து முடித்திருக்கிறார். அடுத்ததாக ஒரே ஒரு படத்தில் மட்டும் நடிக்கவிருக்கும் அவர்; அதற்கு பிறகு முழுக்க முழுக்க அரசியலில் கவனம் செலுத்தவிருக்கிறார். இப்போது கோலிவுட்டில் அதிகம் வியாபாரம் நடக்கும் ஹீரோக்களில் விஜய்தான் முதல் இரண்டு இடங்களுக்குள் இருக்கிறார். எனவே இப்படிப்பட்ட வியாபாரத்தை விட்டுவிட்டு அரசியலுக்கு அவர் வருவதை பலரும் பாராட்டிவருகிறார்கள். அவரது தமிழக வெற்றிக் கழகம் கட்சி 2026ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடவிருப்பது குறிப்பிடத்தக்கது.

Vijay Trisha GOAT

விஜய்யுடன் திரிஷா: இதற்கிடையே விஜய் கடைசியாக நடித்த லியோ திரைப்படத்தில் திரிஷா ஹீரோயினாக நடித்திருந்தார். இருவருக்குமான கெமிஸ்ட்ரி அந்தப் படத்தில் வழக்கம்போல் நன்றாகவே ஒர்க் அவுட் ஆகியிருந்தது. அதுமட்டுமின்றி இருவருக்கும் லிப் லாக் சீனும் இருந்தது. சூழல் இப்படி இருக்க சில நாட்களுக்கு முன்பு விஜய் தனது பிறந்தநாளை கொண்டாடினார். அதனையொட்டி விஜய்யுடன் லிஃப்ட்டில் இருக்கும் புகைப்படத்தை திரிஷா பகிர்ந்து தன்னுடைய வாழ்த்தை தெரிவித்திருந்தார்.

பரவிய வதந்தி: அந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் பயங்கரமாக ட்ரெண்டானது. அதேசமயம் இருவரை பற்றியும் ஏகப்பட்ட வதந்திகள் தொடர்ந்து பரவின. ஆனால் சாதாரணமாக பகிர்ந்த ஃபோட்டோவை ஏன் இப்படி சர்ச்சையாக்குகிறீர்கள் என்று ஒருதரப்பினர் தொடர்ந்து கேட்டுவருகின்றனர். இந்தச் சூழலில் இந்த விவகாரம் குறித்து தனியார் யூட்யூப் சேனல் ஒன்றுக்கு பிரபல பத்திரிகையாளர் ராஜ கம்பீரன் பல விஷயங்களை ஓபனாகவே பேசியிருக்கிறார்.

ராஜ கம்பீரன் பேட்டி: அவர் அளித்த பேட்டியில், "திரிஷாவுக்கு இப்போது 41 வயது. சராசரியாக இந்த வயது பெண்களுக்கு 20 வயதில் ஒரு மகள் இருப்பார். ஆனால் சினிமா கலைஞர்களோ தங்களது இளமையை பாதுகாத்துக்கொள்ளவும், நட்சத்திர அந்தஸ்தை நிலை நிறுத்திக்கொள்ளவும் குறைந்த அளவில் உணவு எடுத்துக்கொண்டு, மிகப்பெரிய விலை கொடுத்து இளமையை பாதுகாத்து வருகிறார்கள்.

ஜெயலலிதாலாம் இல்லை: விஜய் அரசியல் கட்சி ஆரம்பித்துவிட்டார். அவர் எம்ஜிஆராக உருவெடுப்பார் என்று ரசிகர்கள் கூறுகிறார்கள். அதேபோல் எம்ஜிஆருக்கு எப்படி ஒரு ஜெயலலிதாவோ அப்படி விஜய்க்கு திரிஷா இருப்பார் என்று கற்பனை வளத்தோடு கதைகளை சொல்கிறார்கள். முன்பெல்லாம் நடிகர், நடிகைக்கு இடையே காதல் என்று தயாரிப்பாளர்களே பரப்புவார்கள். அப்போதுதான் ரசிகர்கள் மீண்டும் மீண்டும் அந்த நடிகரும், நடிகையும் நடித்த படத்தை பார்க்க வருவார்கள்.

வெற்றிக்கு உதவியிருக்கிறது: இந்த டெக்னிக் பல படங்களின் வெற்றிகளுக்கு உதவி இருக்கிறது. விஜய்க்கு இப்போது 20 வயதில் மகன் இருக்கிறார். அவருக்கும் 50 வயது ஆகிவிட்டது. 50 வயது என்பது இந்த காலக்கட்டத்தில் ஆயுள் காலத்தில் இரண்டு பாகங்களின் முடிவு. எனவே விஜய் இன்னும் ஒரு பாக வாழ்க்கை மட்டுமே வாழவிருக்கிறார். கோட் படத்தில் திரிஷா சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கிறார். அதனால் அவர் அடிக்கடி விஜய்யுடன் ஸ்டில்ஸ் எடுக்கிறார். ஷூட்டிங்கில் கண்டினியூட்டி தவறிவிடக்கூடாது என்பதற்காக கால், கை, முகம் என பல இடங்களை புகைப்பட கலைஞர்கள் படம் எடுத்து அதனை நடிகர், நடிகைகளிடம் தருவார்கள். இவர்கள் அதை வைத்து கேம் ஆடுவார்கள். அதை இந்த சமூக வலைதளவாசிகள் நம்பிக்கொண்டிருக்கிறார்கள்" என்றார்.

More from Filmibeat

Read more about: vijay trisha goat
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X