விஜய் - திரிஷா சண்டை? காரணம் விக்ரமாம்.. பிரபலம் என்ன சொல்றாரு பாருங்க.. கம்பி கட்டுற கதையா போடுறாரே

சென்னை: விஜய் நடிப்பில் கடைசியாக லியோ திரைப்படம் வெளியானது. படம் விமர்சன ரீதியாக அடி வாங்கியது. ஆனால் வசூல் ரீதியாக சக்கைப்போடு போட்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து அவர் வெங்கட் பிரபு இயக்கத்தில் GOAT படத்தில் நடித்துவருகிறார். மேலும் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியையும் தொடங்கியிருக்கிறார். இந்தச் சூழலில் அவர் குறித்தும், திரிஷா குறித்தும் பத்திரிகையாளர் சபிதா ஜோசப் பேசியிருக்கும் விஷயம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

கோலிவுட்டின் டாப் 3 ஹீரோக்களில் ஒருவர் விஜய். சினிமாவில் நடிக்க வந்த புதிதில் ஏகப்பட்ட விமர்சனங்களையும் கிண்டல்களையும் சந்தித்த அவர் இளைய தளபதியாக வளர்ந்து தற்போது தளபதியாக மாறி நிற்கிறார். அதற்கு ஒரே காரணம் அவரது உழைப்புதான். தன் மீது தொடுக்கப்பட்ட அத்தனை விமர்சன அம்புகளையும் எதிர்கொண்டு திறமையை வளர்த்து தற்போது தனி சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கி வைத்திருக்கிறார்.

Vijay Trisha Vikram

லியோ வசூல்: அவரது நடிப்பில் கடைசியாக வெளியான பீஸ்ட், வாரிசு, லியோ ஆகிய மூன்று படங்களுமே விமர்சன ரீதியாக அடி வாங்கின. இருந்தாலும் வசூல் ரீதியாக மிகப்பெரிய ரெஸ்பான்ஸை பெற்றிருப்பதாக அந்தந்த படத்தின் தயாரிப்பு நிறுவனம் அறிவித்திருக்கின்றன. அதன்படி அந்த மூன்று படங்களுமே வரிசையாக 100 கோடி ரூபாயை தாண்டி வசூலித்திருப்பதாக கூறப்படுகிறது. இப்போது அவர் வெங்கட் பிரபு இயக்கத்தில் GOAT படத்தில் நடித்துவருகிறார்.

ஃபேவரைட் ஜோடி: இதற்கிடையே கோலிவுட்டின் ஃபேவரைட் ஜோடிகளில் ஒன்றாக திகழ்ந்தவர்கள் விஜய்யும், திரிஷாவும். திரையில் அவர்களது கெமிஸ்ட்ரி பக்காவாக ஒர்க் அவுட் ஆனதால் ரசிகர்கள் அவர்கள் இணைந்து நடித்த படத்தை கொண்டாடுவார்கள். கடைசியாக இருவரும் இணைந்து லியோ படத்தில் நடித்திருந்தார்கள். இந்தச் சூழலில் அவர்கள் குறித்து பத்திரிகையாளர் சபிதா ஜோசப் கூறியிருக்கும் விஷயம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

சபிதா பேட்டி: அவர் தனியார் யூட்யூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், "விஜய், விக்ரம் ஆகியோருடன் நடிக்கும்போது திரிஷா அவர்களை காதலித்தார். விஜய்யும், திரிஷாவும் இடையில் நடிக்காமல் போனதற்கு இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடுதான் காரணம். ஆதி படத்தில் முதலில் திரிஷாவை நடிக்க வைக்கும் எண்ணத்தில் விஜய் இல்லை என்று சொல்வார்கள்.

கெமிஸ்ட்ரி: விக்ரமுக்கும், திரிஷாவுக்கும் இடையா கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆனதால் விஜய்யுடன் திரிஷாவுக்கு பிரச்னை ஏற்பட்டிருக்கலாம். இருவருக்கும் சண்டை இருந்ததும் உண்மைதான். புது நடிகைகள் அறிமுகமாகி பிரபலமாகும்போது நடிகர்களின் மனநிலைமை மாறும். அப்படித்தான் திரிஷாவை விட்டுவிட்டு அசினுடன் தொடர்ந்து ஜோடி சேர்ந்தார் விஜய். தனக்கு வாய்ப்பு தராமல் வேறு ஒரு நடிகைக்கு விஜய் வாய்ப்பு கொடுத்ததால்தான் அவருடன் திரிஷா சண்டை போட்டார். இப்போது இருவரும் நன்றாக பேசிக்கொள்கிறார்கள். விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கை பரப்பு செயலாளராகக்கூட திரிஷா வரலாம்" என்று கூறியிருக்கிறார். இதனைப் பார்த்த ரசிகர்கள் என்ன இவர் இஷ்டத்துக்கு பேசி வைத்திருக்கிறார் கம்பி கட்டுற கதையெல்லாம் எடுத்து போடுறாரே என்று கமெண்ட்ஸ் செய்துவருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X