ஜெயம் ரவி - ஆர்த்தி பிரச்னை?.. காரணம் வளர்ப்பு மகனா?.. கிளப்பிவிடும் பிரபலம்.. என்ன சொல்றாரு பாருங்க
சென்னை: ஜெயம் ரவி தமிழ் சினிமாவில் குறிப்பிடத்தக்க நடிகராக வலம் வந்துகொண்டிருக்கிறார். சிறந்த கதைகளை தேர்ந்தெடுத்து நடித்துக்கொண்டிருக்கும அவர் பொன்னியின் செல்வன் படத்தில் அருண்மொழி வர்மனாக தனது நடிப்பை சிறப்பாக வெளிப்படுத்தினார். அவரது நடிப்பில் கடைசியாக சைரன் திரைப்படம் வெளியானது. படம் கலவையான விமர்சனங்களை பெற்ற சூழலில்; அவரும் அவரது மனைவி ஆர்த்தியும் விவாகரத்து செய்யவிருப்பதாக புதிய தகவல் ஒன்று வட்டமடிக்கிறது.
ஜெயம் படத்தின் மூலம் அறிமுகமானவர் ஜெயம் ரவி. தெலுங்கு படத்தின் ரீமேக்காக உருவான அந்தப் படத்தை ரவியின் அண்ணன் ராஜா இயக்கியிருந்தார். முதல் படமே அதிரிபுதிரி ஹிட்டடிக்க ஜெயம் ரவி அடுத்தடுத்து படங்களில் கமிட்டானார். ஜெயம் படத்தின் வெற்றிக்கு பிறகு அடுத்தடுத்து படங்களில் கமிட்டானாலும் பெரும்பாலும் அவை அண்ணன் ராஜா இயக்கும் படங்களாகவே அமைந்தன. இருப்பினும் அப்படி அவர் நடித்த படங்களும் ஹிட்டாக கோலிவுட்டில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துக்கொண்டார். இருப்பினும் பக்கா ஆக்ஷன் ஹீரோவாக மாறக்கூடிய படத்துக்காக ஜெயம் ரவி காத்திருக்கவும் செய்தார்.

பேராண்மை: அப்படி காத்திருந்தவருக்கு பேராண்மை படம் கிடைத்தது. எஸ்.பி.ஜனநாதன் இயக்கத்தில் உருவான அப்படத்தில் பழங்குடியினத்தை சேர்ந்த இளைஞனாக துருவன் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் ரவி. படத்துக்கு தேவையான ஆக்ஷனை அளவாகவும், நடிப்பை சிறப்பாகவும் வழங்கிய ரவியை பார்த்து கோலிவுட் ஆச்சரியம்தான் பட்டது. இதனையடுத்து ஆக்ஷன் படங்களிலும் கவனம் செலுத்த ஆரம்பித்த ரவி தனி ஒருவன் படத்தில் நடித்தார். அந்தப் படம் மெகாஹிட்டானது. அதற்கு அடுத்து நடித்த படங்கள் பெரிதாக போகவில்லை.
சைரன்: சூழல் இப்படி இருக்க பொன்னியின் செல்வன் படத்தில் அருண்மொழி வர்மனாக கலக்கினார் ஜெயம் ரவி. அந்தப் படம் நல்ல வரவேற்பையே பெற்றது. அதற்கு பிறகு அவர் நடித்த அகிலன், இறைவன் ஆகிய படங்கள் படுதோல்வியை சந்தித்தன. அடுத்ததாக அவர் நடிப்பில் சமீபத்தில் சைரன் திரைப்படம் வெளியானது. கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டோர் நடித்திருந்த அந்தப் படம் கலவையான விமர்சனங்களையே பெற்றது. அடுத்ததாக ஜீனி, காதலிக்க நேரமில்லை படங்களில் நடித்திருக்கிறார்.
மனைவி ஆர்த்தி: இதற்கிடையே ஜெயம் ரவி ஆர்த்தி என்பவரை திருமணம் செய்துகொண்டார். இருவரும் அன்யோன்யமாக வாழ்ந்துவந்த சூழலில்; இப்போது அவர்கள் விவாகரத்து செய்யவிருப்பதாக கடந்த சில நாட்களாகவே ஒரு தகவல் ஓடியது. ஆனால் சமீபத்தில் ஜெயம் படம் வெளியாகி 21 ஆண்டுகள் நிறைவு செய்ததையொட்டி; அந்தப் படம் பற்றி ஆர்த்தி தனது இன்ஸ்டாகிராமில் ஸ்டோரி போட்டிருந்தார். அதேசமயம் ஜெயம் ரவியுடன் தான் இருக்கும் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமிலிருந்து நீக்கவும் செய்தார்.
25 கோடி ரூபாய் காரணம்: சூழல் இப்படி இருக்க ஜெயம் ரவி - ஆர்த்திக்கு இடையே வந்த பிரச்னைக்கு காரணம் 25 கோடி ரூபாய்தான் என்று சொல்லப்பட்டது. அதாவது சைரன் படத்தின் ஜெயம் ரவியின் மாமியார் சுஜாதா தயாரித்திருந்தார். அடுத்ததாகவும் அவர் ஜெயம் ரவியை வைத்து பாண்டிராஜ் இயக்கத்தில் ஒரு படத்தை தயாரிக்க திட்டமிட்டிருந்ததாகவும்; அந்தப் படத்துக்கு ஜெயம் ரவி 25 கோடி ரூபாய் சம்பளம் கேட்க; அதற்கு சுஜாதா முடியாது என்று சொன்னதுதான் சண்டைக்கான ஆரம்பப் புள்ளி என்று கிசுகிசுக்கப்பட்டது.
சபிதா ஜோசப் பேட்டி: இந்நிலையில் பத்திரிகையாளர் சபிதா ஜோசப் இந்த விவகாரம் குறித்து ஒரு வீடியோவில் பேசியிருக்கிறார். அவர் பேசுகையில், "ஜெயம் ரவியின் மாமியார் சுஜாதா வீட்டில் சங்கர் என்ற ஒருவர் இருக்கிறார். அவர் சுஜாதாவின் வளர்ப்பு மகன். அவர்தான் தயாரிப்பு பணிகளை முழுமையாக கவனித்துக்கொள்கிறார். ஒருகட்டத்தில் சங்கருக்கும், ரவிக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. சங்கர் சொல்வதைத்தான் ரவி கேட்க வேண்டும் என்று சுஜாதா அறிவுறுத்தினார். ஆனால் ரவி மறுத்துவிட்டார். அந்த சமயத்தில்தான் ஜெயம் ரவியின் ஈகோ வெளியே வந்துவிட்டது. அந்த கோபத்தை ஆர்த்தி மீது காட்டியதால்தான் இப்போது விவாகரத்துவரை வந்திருக்கிறது" என்றார்.


Click it and Unblock the Notifications











