விஜயகாந்த்துக்கு 2 தாய்கள்.. சகோதரி கூலி வேலை செய்கிறாரா?.. இலை எடுக்கிறாரா?. ஷாக் கொடுத்த பிரபலம்
சென்னை: விஜயகாந்த் உடல்நலக்குறைவால் கடந்த வருடம் டிசம்பர் மாதம் உயிரிழந்தார். அவரது உயிரிழப்பு பலரையும் சோகத்தில் தள்ளியது. அவர் இருந்தவரை எத்தனையோ பேர் அவரால் பயன் அடைந்திருக்கின்றனர். சாமானியர்கள் முதல் பிரபலங்கள் வரை அந்த லிஸ்ட் நீண்டுகொண்டே செல்லும். இந்தச் சூழலில் விஜயகாந்த்தின் சகோதர, சகோதரி குறித்து பத்திரிகையாளர் சபிதா ஜோசப் பேசியிருக்கும் விஷயம் அதிர்ச்சி கிளப்பும் வகையில் அமைந்திருக்கின்றன.
விஜயகாந்த் இந்தப் பெயரை ரசிக்காதவர்களே இருக்க முடியாது. சினிமாவில் நுழைந்து தனக்கான தனித்த உடல் மொழி, ஸ்டைல், வசன உச்சரிப்பு, நடிப்பு என அனைத்திலும் முத்திரை பதித்தவர். ரஜினிகாந்த், கமல் ஹாசன் ஆகியோர் பீக்கில் இருந்தபோது சினிமாவுக்குள் நுழைந்து தனக்கென தனி ரசிகர் படை சாம்ராஜ்ஜியத்தையே உருவாக்கியவர் விஜயகாந்த். அவ்வாறு அவர் அப்படி செய்தது சாதாரண விஷயமில்லை என்பது பலரும் ஒத்துக்கொண்ட உண்மை.

கெத்து கேப்டன்: ரசிகர்களால் கேப்டன், புரட்சி கலைஞர் என்று அழைக்கப்பட்டவர் விஜயகாந்த். கேப்டன் என்ற பட்டத்துக்கு உரிய முறையில் பல விஷயங்களை தனியாளாக வழி நடத்தியவர் அவர். சிவாஜியின் இறப்பில் கூட்டத்தை ஒற்றை ஆளாக கட்டுப்படுத்தியது, ஏதேனும் பிரச்னை என்றால் எதற்கும் யாருக்கும் அஞ்சாமல் முதல் ஆளாக களத்தில் குதிப்பது, நட்சத்திர கலை விழாவை திறம்பட நடத்தி காண்பித்தது என அவர் உண்மையில் கேப்டன்தான் என அவருக்கு நெருக்கமானவர்கள் கூறிவருகிறார்கள்.
உடல்நலக்குறைவு: சினிமாவில் கலக்கிவந்த விஜயகாந்த் அரசியலில் நுழைந்து எதிர்க்கட்சி தலைவராக மாறினார். ஆனால் அரசியல் தளத்தில் அவருக்கு சில துரோகங்கள் நிகழ்த்தப்பட்டன. அது விஜயகாந்த்துக்கு ரொம்பவே மன உளைச்சலை கொடுத்தது. இதனையடுத்து அவருக்கு உடல்நலக்குறைவும் ஏற்பட்டது. தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த அவர் அரசியலில் இருந்து ஒதுங்கி முழு ஓய்வு பெற்றார். பிறகு உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் கடந்த வருடம் உயிரிழந்தார்.
உதவி: இதற்கிடையே விஜயகாந்த் பலருக்கு பல உதவிகளை செய்திருக்கிறார். அவரிடம் உதவி பெற்றவர்களின் பட்டியல் நீண்டுகொண்டே செல்லும். அந்த லிஸ்ட்டில் இப்போது டாப் ஹீரோக்களாக இருக்கும் விஜய், சூர்யாகூட இருக்கிறார்கள். இவர்கள் தவிர்த்து ஏராளமான செலிபிரிட்டிகளும் இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி ஓடி ஓடி உதவி செய்தார் விஜயகாந்த். ஆனால் அவரது சகோதரியின் நிலைமை சரியில்லை என்று பத்திரிகையாளர் சபிதா ஜோசப் தெரிவித்திருக்கிறார்.
சபிதா ஜோசப் பேட்டி: அவர் தனியார் யூட்யூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், "விஜயகாந்த்தின் தந்தைக்கு மொத்தம் இரண்டு மனைவிகள். முதலில் ஆண்டாளை திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்குத்தான் நாகராஜ், விஜயராஜ் (விஜயகாந்த்), திருமலா தேவி என்ற பெண் குழந்தை பிறந்தார். திருமலா தேவிக்கு ஒரு வயது இருக்கும்போது ஆண்டாள் இறந்துவிட்டார். அதன் பிறகு ருக்குமணி என்பவரை திருமணம் செய்துகொண்டார் விஜயகாந்த்தின் தந்தை. அவர்களுக்கு கிட்டத்தட்ட ஏழு குழந்தைகள் பிறந்தார்கள்.
சொத்து சென்றுவிட்டது: விஜயகாந்த்தும், இப்ராஹிம் ராவுத்தரும் ஒன்றாக இருந்தபோது விஜயகாந்த் தன்னுடைய சகோதர, சகோதரிகளுக்கு பணம் அனுப்புவது, நல்லது செய்வது என செய்துகொண்டே இருந்தார். ஆனால் விஜயகாந்த்தை விட்டு இப்ராஹிம் ராவுத்தர் பிரிந்த பிறகு அவ்வளவாக இல்லை. விஜயகாந்த்தின் சொத்துக்கள் எல்லாம் அவரது மனைவி பக்கம் சென்றுவிட்டது. விஜயகாந்த் உயிரோடு இருந்தபோதே அவரது சகோதரி ஒருவர் கூலி வேலை செய்ததாக கேள்விப்பட்டிருக்கிறேன். அதேபோல் இன்னொருவர் ஹோட்டலில் இலையும் எடுத்தார். அதுதொடர்பான புகைப்படங்கள் தனியார் பத்திரிகையிலேயே வந்திருக்கின்றன" என்று கூறி ஷாக் கொடுத்திருக்கிறார் அவர்.


Click it and Unblock the Notifications











