தனுஷுக்கு மறுமணம்.. ஐஸ்வர்யாவால் அது மட்டும் முடியவே முடியாது.. பிரபலம் கொடுத்த ஷாக்
சென்னை: தனுஷ் - ஐஸ்வர்யா விவாகரத்து வழக்கில் நாளை தீர்ப்பு வரவிருக்கிறது. எந்த மாதிரியான தீர்ப்பு வரவிருக்கிறதோ என்ற ஆர்வத்திலும், பதற்றத்திலும் இருக்கிறார்கள் தனுஷின் ரசிகர்கள். ஆனால் பெரும்பாலும் இருவருக்கும் விவாகரத்து உறுதி என்ற விஷயம்தான் நாளைய தீர்ப்பில் வரும் என்கிறார்கள் விவரமறிந்தவர்கள். இந்தச் சூழலில் இவ்விவகாரம் தொடர்பாக பிரபல பத்திரிகையாளர் சபிதா ஜோசப் தனியார் யூட்யூப் சேனல் ஒன்றுக்கு சில விஷயங்களை பகிர்ந்திருக்கிறார்.
தனுஷை சுற்றி சர்ச்சைகள் எழுவது ஒன்றும் புதிதில்லை. ஆரம்பத்தில் மிகப்பெரிய விமர்சனங்களையும், உருவ கேலிகளையும் சந்தித்த அவர்; ரஜினிகாந்த்தின் மூத்த மகள் ஐஸ்வர்யாவை காதலித்து திருமணம் செய்தபோதும் பல விமர்சனங்களை சந்தித்தார். ரஜினி வீட்டு மருமகன் ஆனதும் தனுஷுக்கு இப்படிப்பட்ட ஒரு வாழ்க்கையா என்று பலரும் ஓபனாகவே பேசினார்கள். சிலர் பொறாமையும் பட்டார்கள். ஆனால் சூப்பர் ஸ்டார் வீட்டு மருமகன் என்பது பெருமை என்பதை தாண்டி பொறுப்பு என்பதை உணர்ந்து செயல்பட்டார் தனுஷ்.

சிறந்த நடிகர்: எந்த இடத்திலும் ரஜினியின் மருமகன் என்ற அடையாளம் தன் மீது விழாத மாதிரி பார்த்துக்கொண்டார். படிப்படியாக தனது திறமையை வளர்த்துக்கொண்டு வாய்ப்புகளை பெற்றார். கிடைத்த வாய்ப்புகளில் எல்லாம் தன்னுடைய அபாரமான நடிப்பை வெளிப்படுத்தி ரஜினியின் மகள் ஐஸ்வர்யா என்ற பெயரை தாண்டி தனுஷின் மனைவி ஐஸ்வர்யா என்ற பெயர் வருவதற்கு காரணம் ஆனார். தனுஷும், ஐஸ்வர்யாவும் சுமூகமாகத்தான் தங்களது வாழ்க்கையை நகர்த்தினார்கள்.
விவாகரத்து: ஆனால் யார் கண் பட்டதோ தெரியவில்லை இரண்டு பேரும் பிரிந்துவிட்டார்கள். எப்படியாவது அவர்களை சேர்த்துவைத்துவிட வேண்டுமென்று ரஜினிகாந்த் முதற்கொண்டு பலரும் முயன்று பார்த்தார்கள். ஆனால் இவர்கள் பிடி கொடுக்கவில்லை என்று தெரிகிறது. சூழல் இப்படி இருக்க குடும்ப நல நீதிமன்றத்தில் விவாகரத்து மனுவையும் தாக்கல் செய்தார்கள். சமீபத்தில் நடந்த வழக்கு விசாரணையின்போது இரண்டு பேரும் நேரில் ஆஜராகி தங்கள் தரப்பு வாக்குமூலத்தை கொடுத்தார்கள்.
நாளை தீர்ப்பு: இந்நிலையில் நாளை இந்த விவாகரத்து வழக்கில் தீர்ப்பு வழங்கவிருக்கிறது நீதிமன்றம். இந்தத் தீர்ப்பைத்தான் ஒட்டுமொத்த கோலிவுட்டும் இப்போது எதிர்பார்க்க ஆரம்பித்திருக்கிறது. சூழல் இப்படி இருக்க தனுஷ் - ஐஸ்வர்யா விவாகரத்து விவகாரம் தொடர்பாக பிரபல பத்திரிகையாளர் சபிதா ஜோசப் தனியார் யூட்யூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்தார். அந்தப் பேட்டியில் பேசிய அவர், "ரஜினிகாந்த் என்னதான் பெரிய நடிகராக இருந்தாலும் அவரும் ஒரு தந்தைதானே.
பிடிவாதமாக இருந்தார்கள்: தனுஷையும், ஐஸ்வர்யாவையும் சேர்த்து வைக்க எவ்வளவோ முயற்சிகள் செய்யப்பட்டன. ஆனால் இருவரும் விவாகரத்து வேண்டும் என்பதில் பிடிவாதமாக இருந்துவிட்டார்கள். தனுஷைப் பொறுத்தவரை அவரது அண்ணன், தந்தை ஆகிய இரண்டு பேருமே இயக்குநர்கள்தான். தனுஷுக்கும் அந்த ஜீன் இருக்கும். இப்போது தனுஷ் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, ஹாலிவுட் என்று வளர்ந்துவிட்டார். அவரது ரேஞ்சே இப்போதைக்கு வேறுதான். ஆனால் ஐஸ்வர்யா அப்படி இல்லை.
ஏனெனில் ஐஸ்வர்யாவின் தந்தை ஒரு நடிகர். ஐஸ்வர்யாவை பொறுத்தவரை மூன்று படங்கள் எடுத்திருக்கிறார். எதுவும் பெரிதாக போகவில்லை. அவரால் ஒருபோதும் சினிமாவில் தனுஷுடன் போட்டி போட்டு வெல்லவே முடியாது. தந்தையை வைத்து படம் எடுக்க ஆசைப்பட்டார். லால் சலாமில் அதை நிறைவேற்றிக்கொண்டார். இந்த விவாகரத்துக்கு பிறகு தனுஷுக்கு இரண்டாவது திருமணம் செய்து வைக்க கஸ்தூரி ராஜா முடிவு செய்திருக்கிறார். முதலில் தனுஷ் இரண்டாவது திருமணம் செய்வாரா இல்லை ஐஸ்வர்யா இரண்டாவது திருமணம் செய்வாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்" என்றார்.


Click it and Unblock the Notifications











