ரம்யா கிருஷ்ணனை டார்ச்சர் செய்த நடிகர்.. பயந்துபோன நடிகை.. சபிதா ஜோசப் சொன்ன அதிர்ச்சி தகவல்!
சென்னை: ஊடகம், செய்தித்தாள், சோசியல் மீடியா என எந்த பக்கம் பார்த்தாலும், ஹேமா கமிஷன் அறிக்கை குறித்தும், அதில் நடிகைகள் பாதிக்கப்பட்டது குறித்தும் பேசி வரும் நிலையில், மூத்த பத்திரிக்கையாளரான சபிதா ஜோசப், ரம்யா கிருஷ்ணன் சந்தித்த பிரச்சனை குறித்து கூறியுள்ளார்.
இது குறித்து பேசிய, பத்திரிக்கையாளர் சோபிதா ஜோசப், எந்த நடிகையும் சினிமாவிற்கு வரும் போது அட்ஜெஸ்ட்மெண்ட் செய்து கொள்கிறேன் என்று சொல்லுவது இல்லை. நடிகர், இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் தான் அப்படி கேட்பார்கள் அதுவும் பெரிய நடிகர் அவர்களிடம் நேரடியாக எதையும் கேட்க மாட்டார்கள், சுற்றிவளைத்து வேறு யார் மூலமாகவோ தான் கேட்பார்கள். ஆனால், விஷால் உங்களை கூப்பிட்டால் செருப்பால் அடிங்க என்று சொல்லி இருந்தார். அவர் சொல்வது ரொம்ப அபத்தமான பேச்சாக உள்ளது. அவசரமாக பேசி அசிங்கப்படுவது தான் அவரின் வேலை.

பெரிய நடிகர்கள்: அதே போல, அவர் உப்புமா கம்பெனியில் தான் அப்படி நடக்கிறது என்று சொல்லி இருந்தார். உப்புமா கம்பெனியில் மட்டுமில்லை, பல பெரிய நிறுவனத்திலும் ஹீரோ வேண்டும் என்று ஆசைப்பட்டு விட்டால், மேனேஜர் மூலமாகவோ, வேறு யார் மூலமாகவோ பேசி சரிகட்டப்படும். சில நேரம் இதற்கு பணமும் கொடுக்கப்படும்.
மோகன்லால் ஏன் பேசவில்லை: இந்த விவகாரம் பெரிய பேசு பொருளானதை அடுத்து, மம்முட்டி தானாக முன்வந்து, இந்த விஷயத்தில் நான் உட்பட யார் தவறு செய்து இருந்தாலும் தாராளமாக தண்டிக்கலாம் என்று கூறி அறிக்கை வெளியிட்டார். அதே போல பிரித்வி ராஜும் அறிக்கை வெளியிட்டார். ஆனால், அம்மா நடிகர் சங்கத்தின் தலைவராக இருந்த மோகன்லால், பதில் அளிக்காமல் பதவியை ராஜினாமா செய்து விட்டு நேற்றுத்தான் நான் ஓடி ஒளியவில்லை என்று பேசி இருக்கிறார். இந்த பிரச்னை வெளிவந்ததுமே அவர் தான் முதலில் பேசி இருக்க வேண்டும், ஏன் அவர் பேசவில்லை.
ரம்யா கிருஷ்ணனுக்கு நடந்த கொடுமை: அது போல, மோகன்லால் குறித்து அங்கு இருப்பவர்களிடம் விசாரித்த போது, அவர் பெண்கள் விஷயத்தில் நல்லவர் இல்லை என்று சொல்லுகிறார்கள். நடிகை ரம்யா கிருஷ்ணன், மோகன்லாலுடன் ஒரு படத்தில் நடித்த போது அவர், இரவில் ரூமுக்கு அழைத்ததாகவும், ஆனால், ரம்யா கிருஷ்ணன் வர மறுத்ததால், இந்த படம் முடிவதற்குள் உன்னை ரூமுக்கு வரவைக்கிறேன் என்று மோகன்லால் சவால் விட்டதாகவும் சொல்லப்படுகிறது. இது எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை என்று சோபிதா ஜோசப் பேசி உள்ளார்.
கிழிக்கப்பட்ட 55 பக்கம்: தொடர்ந்து பேசிய அவர், இந்த விஷயத்தில் தற்போது சிறிய நடிகைகள் தான் முன்வந்து பேசி இருக்கிறார்கள். ஒருவேளை பெரிய நடிகைகளின் பெயர் வெளியே வராமல் இருக்கிறதா என்று தெரியவில்லை. அதுமட்டுமில்லாமல் ஹேமா கமிஷன் அறிக்கையில் 55 பக்கங்கள் கிழிக்கப்பட்டதாக சொல்கிறார்கள். அதில் யார் யார் பெயர் இருந்தது என்று தெரியவில்லை. அதில் பெரிய நடிகர்களின் பெயர் இருக்கா.. இல்லை அரசியல் பிரபலத்தின் பெயர் இருக்கா என்று தெரியவில்லை. இது ஏன் மறைக்கப்பட்டது என்று தெரியவில்லை.


Click it and Unblock the Notifications











