ஜெயம் ரவி - ஆர்த்தி விவாகரத்துக்கு காரணம் யார்?.. அவரால் ஓவர் பாதிப்பாம்.. பிரபலம் இப்படி சொல்றாரே
சென்னை: கோலிவுட்டில் நல்ல நடிகர் என்று பெயர் எடுத்தவர் ஜெயம் ரவி. சினிமா பின்னணி இருக்கும் குடும்பத்திலிருந்து அவர் வந்திருந்தாலும் ஒவ்வொரு படத்தையும் பார்த்து பார்த்து தேர்வு செய்கிறார். அவரது நடிப்பில் கடைசியாக வெளியான சைரன் திரைப்படம் ஓரளவு பாசிட்டிவ் விமர்சனங்களையே பெற்றது. அடுத்ததாக அவர் ஜெனி, காதலிக்க நேரமில்லை உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார். இந்தச் சூழலில் அவர் தனது மனைவி ஆர்த்தியை பிரிவதாக அறிவித்திருக்கிறார்.
தமிழ் சினிமாவில் எடிட்டராக பல படங்களுக்கு பணி புரிந்த மோகனின் இளைய மகன் ரவி. மோகனுடைய மூத்த மகன் ராஜா இயக்கிய ஜெயம் படத்தில் ஹீரோவாக அறிமுகமான ரவி; முதல் படத்திலேயே பிரமாண்டமான வெற்றியை ருசித்தார். அழகு மட்டுமின்றி திறமையும் அவரிடம் இருந்ததால் ரசிகர்களிடையே கவனத்தையும் ஈர்த்தார். அதற்கு பிறகு தொடர்ந்து தனது அண்ணன் இயக்கிய ரீமேக் படங்களில் நடித்து தனக்கென தனி இடத்தை பிடித்துக்கொண்டார் ஜெயம் ரவி.

நல்ல நடிகர்: அண்ணன் இயக்கத்தில் மட்டுமில்லாமல் வெளி இயக்குநர்களின் இயக்கத்திலும் நடிக்க ஆரம்பித்த அவர்; நல்ல நடிகர் என்ற பெயரை பெற்றார். இதுவரை 30க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கும் ஜெயம் ரவி கடைசியாக சைரன் என்ற படத்தில் நடித்தார். அந்தப் படம் ஓரளவுக்கு நல்ல வரவேற்பையே பெற்றது. அடுத்ததாக ஜெனி, காதலிக்க நேரமில்லை போன்ற படங்களில் நடித்திருக்கிறார். இருந்தாலும் சமீபகாலமாக ஒரு பிரமாண்ட வெற்றிக்காக கடுமையாக உழைத்துக்கொண்டிருக்கிறார் ரவி.
ஜெயம் ரவியின் குடும்பம்: ஜெயம் ரவி கல்லூரி படிக்கும்போது ஆர்த்தி என்பவரை காதலித்தார். பிறகு வீட்டு சம்மதத்துடன் அவரையே திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு ஆரவ், ஆயான் என்ற இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். இவர்களில் ஆரவ் ஜெயம் ரவியுடன் டிக் டிக் டிக் படத்தில் நடித்திருந்தார் ஆரவ். இவரது மனைவி ஆர்த்தியின் தாயார் சுஜாதா ஒரு தயாரிப்பாளர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
விவாகரத்து: கடந்த 2009ஆம் ஆண்டு இவர்களுக்கு திருமணம் நடைபெற்றது. இருவரது திருமண வாழ்க்கையும் சுமூகமாக போய்க்கொண்டிருக்க கடந்த சில காலமாகவே இருவரும் விவாகரத்து செய்யப்போவதாக தகவல்கள் வெளியாகின. அது வெறும் வதந்தியாக இருக்கக்கூடும் என்று ரவியின் ரசிகர்கள் நம்பிக்கொண்டிருந்தனர். ஆனால் தனது மனைவி ஆர்த்தியை பிரியப்போவதாக இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார் ரவி. இது பெரும் ஷாக்கை திரையுலகில் கொடுத்திருக்கிறார்.
யார் காரணம்: இந்நிலையில் ஜெயம் ரவி - ஆர்த்தி விவாகரத்து குறித்து தனியார் யூட்யூப் சேனல் ஒன்றுக்கு பிரபல பத்திரிகையாளர் சபிதா ஜோசப் பேசுகையில், "ஜெயம் ரவியும் ஆர்த்தியும் 2009ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார்கள். அது காதல் ப்ளஸ் அரேஞ்சுடு மேரேஜ். ஜெயம் ரவி தரப்புக்கு இந்தத் திருமணத்தில் இஷ்டம் இல்லை. ஆனால் ஆர்த்தி தரப்பில் நெருக்கி பிடித்து ரவியை கைக்குள் போட்டுக்கொண்டார்கள்.
ஜெயம் ரவி மாமியார் வீட்டில் இருந்தார். எனவே அவரை வைத்து ஆர்த்தியின் தாயார் மூன்று படங்களை தயாரித்தார்கள். அந்த மூன்று படங்களில் ஒரு படம்தான் ஹிட். மற்ற இரண்டு படங்கள் தோல்விதான். அது ஒரு பிரச்னையை ஆரம்பித்து வைத்தது. இவரை வைத்து தயாரித்த படங்கள் தோல்வியடைந்துவிட்டதே என்று ஆர்த்தி நினைத்தார். அதுமட்டுமில்லாமல் ரவிக்கான கதைகளை ஆர்த்தி கேட்க ஆரம்பித்து டிஸ்கஷனுக்கும் செல்ல ஆரம்பித்தார். அது ரவிக்கு நெருடலை கொடுத்தது. ஆர்த்தி அப்படி செய்தது தனது தொழிலை பாதிக்கும் என்று நினைத்து விவாகரத்து முடிவை ஜெயம் ரவி எடுத்திருக்கிறார்" என்றார். முன்னதாக இந்த விவாகரத்துக்கு ஜெயம் ரவியின் மாமியார்தான் முழுக்க முழுக்க காரணம் என்றும் ஒரு தகவல் ஓடியது நினைவுகூரத்தக்கது.


Click it and Unblock the Notifications











