நெப்போலியன் மகனுக்கு திருநெல்வேலியில் பெண் எடுக்க காரணம் என்ன? பிரபலம் சொன்ன தகவல்
சென்னை: நடிகர் நெப்போலியனின் மூத்த மகன் தனுஷூக்கும் அண்மையில் நிச்சயதார்த்தம் நடந்த நிலையில் அவருக்கு விரைவில் திருமணம் நடைபெற உள்ளது. இதற்காக நெப்போலியன் அனைவருக்கும் பத்திரிக்கை கொடுத்து வருகிறார். சினிமா விமர்சகர் சோபிதா ஜோசப் நெப்போலியன் மகன் திருமணம் குறித்து பேசி உள்ளார்
90களில் தமிழ் திரையுலகின் முன்னணி நடிகராக வலம் வந்தவர் நடிகர் நெப்போலியன். பாரதிராஜாவின் புதுநெல்லு புதுநாத்து என்ற படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமான இவர் 100க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். திமுகவில் இணைந்து தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று எம்.எல்.ஏ, எம்.பி, மத்திய அமைச்சர் என பல பொறுப்புகளை வகித்துள்ளார்.

சோபிதா ஜோசப்: நடிகர் நெப்போலியன் மகன் திருமணம் குறித்து பேசிய சோபிதா ஜோசப் நெப்போலியனுக்கு மூத்த மகன் தனுஷ், இளைய மகன் குணால் இருவருமே நல்ல அன்பான குழந்தைகள் அதே போல, கணவன் மனைவி இருவருமே நல்ல அன்பான தம்பதிகள். நெப்போலியனின் மனைவி ரொம்ப அன்பானவர் யாராக இருந்தாலும், கனிவோடு உபசரிப்பார். சினிமாவில் அடுத்தடுத்த படத்தில் நடித்து பிரபலமானார் நெப்போலியன். சம்பாதித்த பணத்தை வீண் ஆக்காமல் வீடு வாசல் நிலம் என்று வாங்கிப் போட்டு பல தொழில்களை செய்யத் தொடங்கினார்.
அமெரிக்காவில் செட்டில்: அவரின் மகனுக்கு தசைசிதைவு நோய் இருக்கிறது. அவரால் நிற்கவோ, நடக்கவோ முடியாது. இதற்காக திருநெல்வேலியில் இயற்கை முறையில் சிகிச்சை கொடுத்து வந்தார். இதில் முன்னேற்றம் இல்லாததால், அமெரிக்காவிற்கு சென்று சிகிச்சை அளிக்கலாம் என்று அமெரிக்கா சென்றார். பின் அங்கேயே குடும்பத்தோடு செட்டிலாகி விட்டார். இருந்தாலும் அந்த நோயில் இருந்து மகன் தனுஷ் முழுமையாக குணமடையவில்லை. இருப்பினும் அவர், மிகவும் திறமையானவர், நெப்போலியனின் கம்பேனி ஒன்றை நடத்தி வருகிறார். லேப்டாப்பில் அமர்ந்து கொண்டே அனைத்து வேலைகளையும் நிர்வகித்து வருகிறார். அந்த அளவிற்கு நினைவாற்றல் கொண்ட புத்தி சாலியானவர்.
ஏழை பெண்: திருநெல்வேலி மாவட்டம் மூலக்கரைப்பட்டியை சேர்ந்த விவேகாந்தர் என்பவரின் மகள் அக்ஷயா என்பவருடன் நிச்சயம் முடிந்துள்ளது.படித்த ரொம்ப ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்த பெண் தான். எழை பெண்னை திருமணம் செய்து வைக்கும் நோக்கமே அவள் அன்பாக பார்த்துக்கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான். அவர் நினைத்தால் கோடீஸ்வர பெண்ணை கல்யாணம் செய்து வைத்திருக்கலாம். ஆனால், அந்த பெண் ஒரு கட்டத்தில் வேலைக்காரியை வைத்துக்கொண்டு பார்த்திருக்கலாம் என்றால் குடும்பம் என்ன ஆகும் என்பதற்காக இந்த பெண்னை பார்த்து இருக்கிறார்கள்.
ஜப்பானில் திருமணம்: மகன் தனுஷ் வீடியோ காலில் இருக்க இரு குடும்பத்தினரும் நிச்சயதார்த்தத்தை முடித்திருக்கிறார்கள். இந்த திருமணத்திற்கான செலவு அனைத்தையும் நெப்போலியதான் பார்த்துக்கொள்கிறார். தனுஷ் யார் என்று அந்த பெண்ணுக்கு தெரியும், உலகத்திற்கே தெரியும். பணத்திற்காக எல்லாம் கல்யாணம் பண்ணவில்லை. இவர்களின் திருமணத்தை ஜப்பானில் நடக்க திட்டமிட்டு இருக்கிறது விசாவுக்காக காத்திருக்கிறார்கள் என்று சினிமா விமர்சகர் சோபிதா ஜோசப் அந்த பேட்டியில் பேசி உள்ளார்.


Click it and Unblock the Notifications











