Adhik Ravichandran - பிரபு மகளுக்கு மட்டுமில்லை ஆதிக் ரவிச்சந்திரனுக்கும் இது 2ஆவது திருமணமா? பரபரப்பு தகவல்

சென்னை: Adhik Ravichandran Marriage (ஆதிக் ரவிச்சந்திரன் திருமணம்) ஐஸ்வர்யாவுக்கு மட்டுமின்றி ஆதிக் ரவிச்சந்திரனுக்கும் இது இரண்டாவது திருமணம்தான் என பத்திரிகையாளர் சபிதா ஜோசப் தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

திரிஷா இல்லனா நயன் தாரா படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் ஆதிக் ரவிச்சந்திரன். இவரது தந்தையும் சினிமா கனவில் இருந்து சினிமாவிலேயே பல்வேறு பணிகளை செய்திருக்கிறார். ஆனால் அவரால் இயக்குநராக வெல்ல முடியவில்லை. அதனை மனதில் ஏற்றிக்கொண்டு இயக்குநராக மாறினார் ஆதிக் ரவிச்சந்திரன்.

 Journalist Sabitha Joseph Talks about Prabhu Daughter Aishwarya Adhik Ravichandran Marriage

சறுக்கல்: முதல் படம் படுதோல்வியை சந்தித்தது மட்டுமின்றி சில விமர்சனங்களையும் சந்தித்தது. அந்தப் படத்துக்கு பிறகு சிம்புவை வைத்து அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படத்தை இயக்கினார் ஆதிக். அந்தப் படம் பெரும் பிரச்னைகளுக்கு மத்தியில் வெளியாகி மிகப்பெரிய தோல்வி படமாக அமைந்தது. அதற்காக ஆதிக் கலங்கி நின்ற சம்பவம் நடந்ததும் நினைவுகூரத்தக்கது.

மார்க் ஆண்டனி: இரண்டு படங்கள் தோல்வியடைந்ததால் எப்படியாவது தன்னை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்தபோது விஷாலை வைத்து மார்க் ஆண்டனி படத்தை இயக்கினார் ஆதிக். படம் மெகா ஹிட்டானது. வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல ரெஸ்பான்ஸ் கிடைத்ததால் ஆதிக் கவனிக்கபப்டும் இயக்குநராக மாறினார். அடுத்ததாக அவர் அஜித்தை வைத்தும் ஒரு படம் இயக்குகிறார் என்றும் சொல்லப்படுகிறது.

திருமணம்: சூழல் இப்படி இருக்க பிரபுவின் மகள் ஐஸ்வர்யாவை ஆதிக் ரவிச்சந்திரன் காதலித்து வந்திருக்கிறார். அவர்களது காதலுக்கு வீட்டில் சம்மதம் கிடைத்ததை அடுத்து இரண்டு பேருக்குமான திருமணம் கடந்த 15ஆம் தேதி சென்னையில் உள்ள ஒரு நட்சத்திர ஹோட்டலில் நடந்தது. இதில் ரஜினிகாந்த், கமல் ஹாசன், கார்த்திக் சுப்புராஜ், விஷால் உள்ளிட்டோர் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

இரண்டாவது திருமணம்: ஐஸ்வர்யா ஏற்கனவே திருமணம் ஆகி விவாகரத்து பெற்றவர். பிரபுவின் அக்காவான தேன் குழலியின் மகன் குணால் என்பவரைத்தான் அவர் திருமணம் செய்திருந்தார். ஆனால் சொத்து பிரச்னை காரணமாக அவர்களது திருமண வாழ்க்கை முறிந்துவிட்டது பரவலாக பேசப்பட்டுவருகிறது. இதற்கிடையே ஆதிக் - ஐஸ்வர்யா திருமணத்தில் 500 கோடி ரூபாய்வரை பிரபு வரதட்சணை கொடுத்ததாகவும் ஒரு அதிகாரப்பூர்வமற்ற தகவல் ஓடிக்கொண்டிருக்கிறது.

ஆதிக்கிற்கும் இரண்டாவது திருமணம்?: ஐஸ்வர்யாவுக்குத்தான் இது இரண்டாவது திருமணம் என்று சொல்லப்பட்ட சூழலில் ஆதிக்கிற்கும் இது இரண்டாவது திருமணம்தான் என்று கூறியிருக்கிறார் பத்திரிகையாளர் சபிதா ஜோசப். அவர் தனியார் யூட்யூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், "இப்போதைய காலத்தில் மறுமணம் என்பது ரொம்பவே இயல்பாகிவிட்டது. அதற்கு முதல் விதை போட்டது தந்தை பெரியார்தான்.

எப்படி பழக்கம்: சினிமா நிகழ்வுகளில் இருவரும் அவ்வப்போது பார்த்து பழக்கமானார்கள்.பிறகு இரண்டு பேருக்கும் காதல் வந்துவிட்டது. ஐஸ்வர்யா ஏற்கனவே பிரபுவின் அக்கா மகனை திருமணம் செய்து விவாகரத்து பெற்றார். இது அவருக்கு இரண்டாவது திருமணம். அதேபோல் ஆதிக் ரவிச்சந்திரனுக்கும் இது இரண்டாவது திருமணம்தான். அவரும் ஏற்கனவே ஒருவரை திருமணம் செய்து அதிலிருந்து வெளியே வந்துவிட்டார்.

ஆதிக் ரவிச்சந்திரனுக்கு 500 கோடி ரூபாய் வரதட்சணையை பிரபு கொடுத்தார் என்பது எல்லாம் சுத்த பொய். அதேபோல் ஐஸ்வர்யாவின் முதல் திருமணம் பிரமாண்டமாக நடந்தது. இது இரண்டு பேருக்குமே இரண்டாவது திருமணம். எனவேதான் இந்தத் திருமணத்தை சிம்பிளாக முடித்துவிட்டார்" என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X