கர்ப்பத்தை கலைத்தாரா சமந்தா?.. சோபிதாவுடன் சைதன்யாவுக்கு அப்போதே தொடர்பா?.. பிரபலம் பகீர்!
சென்னை: நடிகை சமந்தா நாக சைதன்யாவிடமிருந்து விவாகரத்து பெற்று இப்போது தனியாக இருக்கிறார். நாக சைதன்யா சோபிதா துலிபாலாவை திருமணம் செய்யவிருக்கிறார். இந்தச் சூழலில் தெலங்கானா அமைச்சர் ஒருவர் சமந்தா பற்றி அவதூறாக பேசியது பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது. அவருக்கு வலுத்த கண்டனங்களைத் தொடர்ந்து தனது பேச்சுக்கு வருத்தம் தெரிவித்தார். இநிந்லையில் பத்திரிகையாளர் சபிதா ஜோசப் சமந்தா குறித்து பேசியிருக்கும் விஷயம் ட்ரெண்டாகியுள்ளது.
நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார் சமந்தா. இருவீட்டார் சம்மதத்துடன் கடந்த 2017ஆம் ஆண்டு அவர்களின் திருமணம் நடைபெற்றது. திருமணத்துக்கு பிறகும் சமந்தா தொடர்ந்து படங்களில் நடித்துவந்தார். ஆனால் திடீரென இருவரும் சில வருடங்களுக்கு முன்பு, 'தாங்கள் பிரிவதாக' அறிவித்தனர். இதனால் திரையுலகினர் அதிர்ந்துபோயினர். அவர்களின் விவாகரத்துக்கு பலரும் பல காரணங்களை சொன்னார்கள். ஆனால் அவர்கள் மௌனம்தான் காத்துவருகிறார்கள்.

அமைச்சரின் கருத்து: இந்தச் சூழலில் சமீபத்தில் பேசிய தெலங்கானா வனத்துறை அமைச்சர், "கேடிஆருக்கு சமந்தா மீது ஆசை இருந்தது. அதற்கு நாகார்ஜுனாவின் குடும்பமும் ஒத்துக்கொண்டது. அந்த விவகாரம்தான் சமந்தா - நாக சைதன்யா விவாகரத்துக்கு முக்கிய காரணம்" என்று தெரிவித்தார். அதற்கு சமந்தாவோ தனது காட்டமான பதிலடியை கொடுத்தார். அதுமட்டுமின்றி நாகார்ஜுனா, அமலா, நாக சைதன்யா என சமந்தாவின் முன்னாள் புகுந்த வீடும் தனது கண்டனத்தை பதிவு செய்தது.
வருத்தம் தெரிவித்த அமைச்சர்: அவர்கள் மட்டுமின்றி நடிகர் ஜூனியர் என்.டி.ஆரும் தனது காத்திரமான பதிலடியை தந்தார். நிலைமை விபரீதமாவதை உணர்ந்துகொண்ட கொண்டா சுரேகா தான் அப்படி பேசியதற்கு வருத்தம் தெரிவித்தார். மேலும் ஆதாரமற்ற தகவல்களை அப்படி நான் பேசியிருக்கக்கூடாது. ஆனால் கேடிஆர் மீதான விமர்சனம் எப்போதும் தொடர்ந்துகொண்டுதான் இருக்கும் எனவும் கூறியிருந்தார். அதற்கு பிறகு அந்த விவகாரம் கொஞ்சம் கொஞ்சமாக மறைந்தது.
சபிதா ஜோசப் பேட்டி: இந்நிலையில் யூட்யூப் சேனல்களுக்கு பேட்டியளித்து பிரபலமாகியிருக்கும் பத்திரிகையாளர் சபிதா ஜோசப் இதுகுறித்து தனியார் யூட்யூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், "நாக சைதன்யாவுக்கும், சமந்தாவுக்குமிடையே விவாகரத்துக்கு காரணமாக பல விஷயங்கள் சொல்லப்படுகின்றன. சிலர் குழந்தை பெற்றுக்கொள்ள தயங்குவார்கள். எங்கே குழந்தை பெற்றால் மார்க்கெட் போய்விடுமோ என நடிகைகள் அஞ்சுவார்கள். குழந்தை பெற்றுக்கொள்ள நாக சைதன்யாவுக்கு விருப்பம் என்றும்; சமந்தா அதற்கு மறுத்தார் என்றும்; முக்கியமாக கர்ப்பத்தை கலைத்தார் அதுதான் விவாகரத்துக்கு காரணம் என்று ஊடகங்களில் சொல்கிறார்கள்.

சோபிதாவுடன் தொடர்பு: அது உண்மையா இல்லையா என்பது தெரியவில்லை. அதேசமயம் சமந்தாவுடன் திருமண உறவில் இருந்தபோதே நாக சைதன்யாவுக்கு சோபிதாவுடன் தொடர்பு ஏற்பட்டிருக்கிறது. அதுவும் ஒரு காரணமாக இருக்கலாம். ஏனெனில் சைதன்யாவும், சோபிதாவும் நான்கு வருடங்களாக காதலித்துவருகிறோம் என்று சொல்கிறார்கள். சமந்தா விவாகரத்து நடந்து அத்தனை வருடங்கள்தான் இருக்கும்" என்றார்.
சைதன்யாவுக்கு திருமணம்: இதற்கிடையே நடிகை சோபிதா துலிபாலாவை நாக சைதன்யா காதலித்துவந்தார். அவர்களது திருமண நிச்சயதார்த்தம் அண்மையில் ஹைதராபாத்தில் நடந்து முடிந்தது. அடுத்ததாக அவர்களின் திருமணம் விரைவில் ராஜஸ்தானில் நடக்க வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக சொல்லப்படுகிறது. நாக சைதன்யாவின் திருமணத்தை அடுத்து சமந்தாவும் ஒரு திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்று தொடர்ந்து கூறிவந்தாலும்; சாம் இதுவரை அமைதியாகவே இருந்துவருகிறார்.


Click it and Unblock the Notifications











